பாரதிதாசன் பல்கலை : ஜி.எஸ்.டி.யுடன் நான்கு மடங்கு அபராதம் விதிப்பதா? எஸ்.எப்.ஐ. கண்டனம்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பாரதிதாசன் பல்கலை : ஜி.எஸ்.டி.யுடன் நான்கு மடங்கு அபராதம் விதிப்பதா? எஸ்.எப்.ஐ. கண்டனம்!

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய மாணவர் சங்கம் முன் வைத்திருக்கிறது.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

முக்கியமாக காலதாமதமாக கல்வி கட்டணம் செலுத்தும் மாணவர்களிடம் ஜி.எஸ்.டி.யுடன் சேர்த்து நான்கு மடங்கு அதிகமாக தாமத கட்டணம் வசூலிக்கும் பாரதிதாசன் பல்கலையின் முடிவு, அதன் உறுப்பு கல்லூரியில் கல்வி பயின்று வரும் பெரும்பாலான ஏழை எளிய மாணவர்கள் கல்வி பெறும் உரிமையை பாதிக்கும் என்பதை சுட்டிக் காட்டி இந்திய மாணவர் சங்கம் தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறது.

பாரதிதாசன் பல்கலைகழகம்
பாரதிதாசன் பல்கலைகழகம்

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

இந்த விவகாரம் தொடர்பாக அவ்வமைப்பின் மாநில தலைவர் தெள. சம்சீர் அகமது மற்றும் மாநிலச் செயலாளர் கோ. அரவிந்த சாமி ஆகியோர் சார்பில் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், “திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் தேர்வு கட்டணத்தை கூடுதலாக உயர்த்தி 07.10.24 அன்று ஆணையை வெளியிட்டு இருக்கிறது, பல்கலைக்கழக நிர்வாகம்.

திருச்சி, தஞ்சாவூர் திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் மற்றும் கரூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் பெரும்பாலும் ஏழை எளிய விவசாய மற்றும் விவசாயக் கூலி தொழிலாளர்கள் வீட்டு பிள்ளைகளே கல்வி பயின்று வருகின்றனர். பெறும் பொருளாதார நெருக்கடிகள் நிலையில் இருக்கும் நிலையில் தேர்வு கட்டணத்தை உயர்த்திருப்பது மாணவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இக்கல்வியாண்டில் தொடக்கத்திலிருந்தே பருவத் தேர்வுக்கான இளநிலை பாடப்பிரிவில் ஒரு பாடத்தின் எழுத்து தேர்வுக்கான கட்டணம் 75 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக உயர்த்தி இருக்கிறது. முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு 150 ரூபாயிலிருந்து 175 ரூபாயாக உயர்த்தி இருக்கிறது.

இளநிலை செய்முறை தேர்வுகளுக்கான கட்டணம் மூன்று மணி நேரத்திற்கு 100 ரூபாயிலிருந்து 140 ரூபாயும் ஆறு மணி நேரத்திற்கு 200 ரூபாயிலிருந்து 280 ரூபாயும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. தற்காலிகச் சான்றிதழ் காண கட்டணம் 200 ரூபாயிலிருந்து 350 ரூபாயும் மொத்த மதிப்பெண் சான்றிதழுக்கான கட்டணம் 200 ரூபாய் இருந்து 600 ரூபாய் வரை உயர்த்தப்பட்டிருக்கிறது.

ஏழை எளிய மாணவர்களுக்கும் உயர் கல்வி எவ்வித தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம் இப்போது அதற்கு மாறாக மாணவர்களிடமிருந்து எந்தெந்த வகையில் பணம் வசூலிக்கலாம் என்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.

மாணவர்களின் பருவ தேர்வு கட்டணத்தை இந்த ஆண்டு உயர்த்திய நிலையில் அதனை உடனடியாக செலுத்த வேண்டும் எனவும் அவ்வாறு செலுத்த தவறினால் அபராத தொகை என்ற பெயரில் நான்கு மடங்கு தொகையுடன் மற்றும் GSTயையும் இணைத்து மாணவரிடம் இருந்து பாரதிதாசன் பல்கலைக்கழகம் நிர்வாகம் அதிக பணம் வசூலிப்பது மிகவும் கண்டனத்துக்குரியது.

மாணவர்களின் நலன் கருதி உயர்த்தப்பட்டுள்ள தேர்வு கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற இந்திய மாணவர் சங்கம் தமிழ்நாடு மாநில குழு வலியுறுத்துகிறது. “ என்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலும், இந்திய மாணவர் சங்கத்தின் மாநில இணை செயலாளர் ஜி.கே.மோகன் தலைமையில் திருச்சி பாரதிதாசன் பல்கலையின் துணைவேந்தரை நேரில் சந்தித்தும் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியுள்ளனர்.

அங்குசம் செய்தி பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.