உப்பார்ப்பட்டியில் தீண்டாமை தடுப்புச்சுவரை அகற்ற பொது மக்கள் கோரிக்கை!
கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி இன்றி தவிக்கும் பொதுமக்கள்.
தேனி மாவட்டம் உப்பாரப்பட்டி ஊராட்சியில் தீண்டாமை தடுப்பு சுவரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
உப்பார்ப்பட்டி ஊராட்சியில் தீண்டாமை தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளதால் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி இன்றி தவிக்கும் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
உப்பாரப்பட்டி கிராமத்தில் பட்டியலின மக்கள் சுமார் 100 வீடுகள் வசித்து வருகின்றனர். உப்பார்பட்டி ஊராட்சியில் மெயின் ரோட்டில் புதிதாக வீட்டடி மனைக்கு அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பட்டியலின மக்கள் வசிக்கக்கூடிய பகுதிக்கு பாதை கொடுத்தால் மட்டுமே வீட்டடி மனைக்கு அனுமதி வழங்கப்படும் என உப்பார்பட்டி ஊராட்சியில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் வீட்டடி மனை அமைத்தவர் பாதை கொடுக்காமல் தீண்டாமை சுவர் கட்டியுள்ளனர். இதனால் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி இன்றி அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
உப்பார்பட்டி ஊராட்சி வீட்டடி மனை அமைப்பதற்கு முன்பே ஊராட்சி நிர்வாகம் சார்பில் பட்டியல் இன மக்கள் வசிக்கக்கூடிய பகுதிக்கு சாலை வசதி கொடுத்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டடி மனை அமைப்பதற்கு பிளான் அப்ரூவல் பாதை உள்ளதாக காட்டப்பட்டுள்ளது.
ஆனால் இதனை மீறி விட்டடி அமைத்தவர் பாதை கொடுக்காமலே தீண்டாமை தடுப்பு சுவர் அமைத்துள்ளார்.

எனவே இது குறித்து கடந்த 4.1. 2025 ஆம் ஆண்டு ஊரக வளர்ச்சி துறை உயர் அதிகாரிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர்சோமசுந்தரம் புகார் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் உப்பார்ப்பட்டி ஊராட்சியில் பதவிக்காலம் முடிந்து விட்டது.
இதனைத் தொடர்ந்து தற்பொழுது உப்பார்பட்டி ஊராட்சியில் தீண்டாமை தடுப்பு சுவர் அமைக்கப்பட்ட இடத்திற்கு அனுமதி மாவட்ட நிர்வாகம் வழங்கிவிட்டது.
இதனால் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தீண்டாமை சுவரை அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
— ஜெய்ஸ்ரீராம்.