அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

2026 சட்டமன்ற தோ்தல் ! பரிசு மழையில் நனையும் பொதுமக்கள் !

திருச்சியில் அடகு நகையை விற்க

தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தல் மதுரை மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு பரிசுபொருட்களை விநியோகம் செய்து வருகிறார்கள். திமுக மற்றும்அதிமுகவினர் சிம்மக்கல் கூடல் நகர் செல்லூர்ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் குடும்ப அட்டை நகல் மட்டும் ஆதார் எண் ஆகியவைகளை உடன் பிறப்புகள் பெற்றுக் கொண்டு ஸ்டாலின் மற்றும் ஜெ பிறந்தநாள் விழாவாக மதுரையில் கொண்டாடி அதன் மூலம் பொதுமக்களுக்கு ஹார்ட்பாக்ஸ், வேட்டி, சேலை, சில்வர் சம்மடம், நாற்காலி , குடும்பத்திற்கு தேவையான வீட்டுக்கு உபயோக பொருட்களை கொடுத்து வருகிறார்கள்.

குறிப்பாக மதுரை வடக்கு தொகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் தளபதி பொதுமக்களை நேரில் சென்று பார்ப்பதில்லை பொதுமக்கள் என்னை அலுவலகத்தில் வந்து பாருங்கள் என்கிறாராம். குறைகளை மனுக்களாக எடுத்துச்சென்றால் அருகில் காவல் ஆணையர் அலுவலகம் உள்ளது அங்கே செல்கிறார்களா ? அல்லது  எம்எல்ஏவிடம் குறைகளை கூறச் செல்கிறாகளா?என தெரியவில்லை என்கிறார்கள்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

உடன்பிறப்புகள் இந்த வடக்கு தொகுதி முன்பு மேற்கு தொகுதியாக இருந்தது. இதில் யாரும் ஒரு முறை ஜெயித்தவர்கள் மறுமுறை ஜெயித்ததாக சரித்திரம் இல்லை என்கிறார்கள். திமுகவினர் எம் எல் ஏ தளபதி இருப்பிடம் திருப்பரங்குன்றம் தொகுதியாக இருப்பதால் குறைகளை மக்கள் கூறுவதற்கு 10 கிலோமீட்டர் தாண்டி செல்வதாக புகார் கூறுகிறார்கள். தற்போது NDA கூட்டணியில் புதிதாக வடக்கு தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் டாக்டர். சரவணன் அதே தொகுதியில் உள்ளார். மருத்துவமனை அதே தொகுதிக்குள் வைத்துள்ளார். நடுத்தர மக்கள் பார்ப்பதற்கு இயல்பானவர் கொடுத்த புகார்களுக்கு உடனடியாக தீர்வு காண்பவர் சமீபத்தில் கூட செல்லூர் கம்மாய் தூர் வாரேன் நடைபாதை அமைத்தல் பந்தல்குடி கால்வாயை சுத்தம் செய்தல் ஆகி ய வேலைகளை சுட்டிக்காட்டியவுடன் உடனடியாக அதற்கு தீர்வு கிடைத்தது.

முதல்வர் பிறந்தநாள்

இதுபோக புதிதாக சரவணா மருத்துவமனை சூர்யா டிரஸ்ட் மூலமாக மதுரை மக்களுக்கு காலை மதியம் இரவு என ரூ.10க்கு கடந்த 3மாதங்களாக மதுரை மக்களுக்கு உணவளித்து வருகிறார் என்கிறார்கள் MGR கொண்டு வந்த உணவுத் திட்டத்தை முதன்முதலில் ஜெயலலிதா ஏழை எளியோருக்கு செய்தார். அதேபோல் தற்போது டாக்டர். சரவணன் செய்து வருகிறார். அதிமுக சார்பில் வடக்கு தொகுதியில் நல்ல வரவேற்பும் இவர்மீது நன்மதிப்பும் உள்ளது. சட்டமன்ற உறுப்பினராக ஜெயித்து வந்தால் எங்களது தொகுதிக்கு நிறைய மாற்றங்கள் வரும். கிடைக்கும் மனிதனுக்கு எவ்வளவு பொருட்கள் கொடுத்தாலும் போதும் என்ற  கூறமாட்டான் ஆனால் உணவு ஒன்றை மட்டும் தான் போதும் என்று கூறுவான் என ரத்தத்தின் ரத்தம் கூறுகிறார்கள்…

— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.