ஜனவரி – 27 சென்னையில் பொதுக்கல்வி பாதுகாப்பு மாநாடு !

1

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஜனவரி – 27 சென்னையில் பொதுக்கல்வி பாதுகாப்பு மாநாடு !

“தமிழ் வழிக் கற்றலை உறுதிப்படுத்து! பள்ளிகளில் பாடச்சுமையைக் குறைத்திடு! பள்ளிகளில் எமிஸ் பதிவுகளை முற்றிலுமாக கைவிடு! வகுப்பு 1 முதல் 8 வரை தடையற்ற தேர்ச்சி முறையைக் கைவிடு! ஆசிரியர்களுக்கு கல்வி சாராப்பணிகளை வழங்காதே! இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம், நம்ம ஸ்கூல் திட்டம் உள்ளிட்ட தேசியக் கல்விக்கொள்கை(2020)த் திட்டங்களை கைவிடு!” என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன், “ தமிழ்நாடு மாநில பொதுக் கல்வி பாதுகாப்பு மாநாடு” ஒன்றை நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார்கள் அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டியின் தமிழ்நாடு (AISEC) மாநில அமைப்பு.
எதிர்வரும் ஜனவரி-27 சனிக்கிழமையன்று சென்னை – சேப்பாக்கம் பத்திரிக்கை நிருபர்கள் கில்ட் அரங்கில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையில் நடைபெறும் என்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

பொதுக்கல்வி பாதுகாப்பு மாநாடு
பொதுக்கல்வி பாதுகாப்பு மாநாடு

AISEC, மாநிலத் தயாரிப்புக்குழு உறுப்பினர் திருமதி சு. உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில், பேரா அ.கருணானந்தன், மேனாள் துறைத் தலைவர், வரலாற்றுத் துறை விவேகானந்தா கல்லூரி; பேரா லெ.ஜவகர் நேசன், மேனாள் துணை வேந்தர், ஜே எஸ் எஸ் பல்கலைக்கழகம்; பேரா ப.சிவக்குமார், மேனாள் முதல்வர், குடியாத்தம் அரசு கல்லூரி; வா. அண்ணாமலை, அகில இந்தியச் செயலாளர், ஐபெட்டோ (AIFETO) ; பேரா. பிரான்சிஸ் குலோத்துங்கல், AISEC, அகில இந்திய செயற்குழு உறுப்பினர், கேரளா ஆகியோர் பங்கேற்று பேருரையாற்றவிருக்கிறார்கள்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலர் ச. மயில்; தமிழ்நாடு பட்டதாரிகள் ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் ஆர். பெருமாள்சாமி; சென்னை பல்கலைகழகத்தின் பேராசிரியர் பி.கே.அப்துல் ரஹிமான்; ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பழ.கௌதமன், ஐக்கிய விவசாயிகள் முன்னணி (SKM) யின் மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன்; அகில இந்திய ஜனநாயக மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.ஜே.வால்டேர் ; திண்டிவனம், அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் சே. சோ. ராமஜெயம் மற்றும் அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டியின் மாநில நிர்வாகிகள் வி.பி. நந்தகுமார்; பேரா க யோகராஜன்; பேரா S. ரகுரதி பாண்டியன்; லெனா குமார் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றவிருக்கின்றனர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

பொதுக்கல்வி பாதுகாப்பு மாநாடு
பொதுக்கல்வி பாதுகாப்பு மாநாடு

“பள்ளிக்கல்வி உயர்கல்வி இரண்டிலும் பொதுக்கல்வி முறை வஞ்சிக்கப்படும் சூழலை அன்றாடம் சந்தித்து வருகிறோம். பொதுக் கல்வியைப் பாதுகாப்பதோடு எதிர்காலத் தலைமுறையையும் சேர்த்து பாதுகாக்க வேண்டிய கடுமையான தருணத்தில் நிகழ்கால சமூகச் சூழல் நம்மை நிறுத்தியிருக்கிறது.

தனியார் மயம் பெருகிவரும் துறையாக கல்வித் துறை முற்றிலும் எதிர்திசையில் பயணிக்கிறது. இது குறித்த விழிப்புணர்வை அனைவருக்கும் எடுத்துச் செல்வதோடு அரசின் கல்வி நிறுவனங்களைப் பாதுகாக்கும் கடமையும் நமக்குண்டு.
இங்கு வாழும் ஒவ்வொரு நபருக்கும் இந்த சமூகத்தை நேசிக்கும் கடமை உணர்வு அவசியம். சமூகத்தை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் சமூகத்திற்கு சரியான கல்வியை எடுத்துச் செல்லும் வழிமுறைகளைப் பற்றி சிந்திக்கும் உரிமையும் அதை வெளிப்படுத்தும் உரிமையும் உண்டு.

அந்த வகையில் பொதுக்கல்விமுறை தான் அதற்கான நிரந்தரத் தீர்வாக இருக்கும் என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை. ஆகவே உரையாடுவோம் வாருங்கள். அரசு , அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரி ஆசிரியர்கள் , மாணவர்கள், கல்வி ஆர்வலர்கள், கல்வியில் மாற்றங்களை விரும்புவோர், பெற்றோர்கள், சமூக மாற்றத்தை விரும்புவோர்கள், எழுத்தாளர்கள் , கவிஞர்கள் , தனியார் நிறுவன ஊழியர்கள் , பல துறைகளில் பணியாற்றும் அலுவலர்கள் என அனைவரும் ஒன்று திரண்டு வாரீர்.

பொதுக் கல்வியைப் பாதுகாப்போம். அதுவே நம் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கும். ஆகவே இறுதி வேண்டுகோளாக உங்களிடம் முன்வைப்பது, உங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் பாதுகாப்பாக வாழ்வதற்காக மட்டுமாவது இம்மாநாட்டில் கலந்து கொள்ள வாருங்கள் நண்பர்களே.” என வேண்டுகோள் விடுத்திருக்கிறார், AISEC நிர்வாகியும் ஆசிரியையும் எழுத்தாளருமான சு. உமா மகேஸ்வரி.

– அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

1 Comment
  1. சுவடு மன்சூர் says

    மாநாடு வெல்லட்டும். வாழ்த்துகள்..

Leave A Reply

Your email address will not be published.