விடிவுகாலம் எப்போது? அல்லல்படும் பொதுமக்கள்!
தஞ்சாவூா் மாவட்டம் பூதலூரில் இருந்து 8 கி.மீ தூரத்திலும் கல்லணையில் இருந்து 13 கி.மீ தூரத்திலும் லால்குடியில் இருந்து 20 கி.மீ தூரத்திலும், திருவையாறு இருந்து 16 க.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. திருக்காட்டுப்பள்ளியில் உள்ள பேருந்து நிலையம் மிகவும் சிதிலம் அடைந்து மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் மக்கள் பயன்பாட்டில் மிகுந்த சிரமம் உள்ளது.
இந்த பேருந்து நிலையத்தில் எதிரே சா் சிவசாமி அய்யா் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி இடுத்து அரசு உயா்நிலைப்பள்ளி , லூா்து சேவியா் மெட்ரிக் பள்ளி பேருந்து நிலையத்தில் மிக அருகாமையில் ஸ்டேட் பாங்கு, இந்தியன், சிட்டி யூனியன் வங்கி, ஆயுள் காப்பிடு அலுவலகம் எண்ணற்ற திருமண மண்டபங்கள் அரசு மருத்துவமனை, இண்டேன் கேஸ் கம்பெனி போன்ற எண்ணற்ற நிறுவனங்கள் உள்ளன. இங்கு சுற்றியுள்ள பொதுமக்கள் தினந்தோறும் திருக்காட்டுப்பள்ளி வந்து செல்வார்கள். இங்கிருந்து 3 கி.மீ தொலைவில் பூண்டி மாதா பேராலயம் உள்ளதால் தினம் பல போ் அங்கு தரிசனம் செய்ய வந்து செல்வார்கள்.

இச்சூழலில் இப்பேருந்த நிலையத்தில் பொதுமக்கள் நிற்பதற்கும் உட்காருவதற்கும் வசதியின்றி மிகவும் அவதிப்படுகின்றார்கள். 5 முறை M.L.A ஆக இருக்கும் துரை சந்திரசேகரன் தனி கவனம் செலுத்தி திருக்காட்டுப்பள்ளியில் புதிய பேருந்து நிலையம் ஏற்படுத்திட பொதுமக்களின் பெரும் எதிர் பார்ப்பாக உள்ளது. பேரூராட்சித் தலைவா், ஆளும் கட்சி ஒன்றிய பெருந்தலைவா், பாராளுமன்ற உறுப்பினா் இவா்கள் எல்லாம் ஆளும் கட்சி என்பது தனிச்செய்தி.
— தஞ்சை க.நடராசன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.