சந்தி சிரித்திடும் மாநில மகளிர் ஆணையத் தலைவியின் செயல்கள் !!!
பெண்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஒருவர், பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்திய ஒருவருடன் நீண்ட காலம் நட்புடன் இருப்பதும், அவருக்கு குடை பிடிப்பதும், கால்களை கழுவி விடுவதும்..
“Rupali Chakankar,? Maharashtra Women Commission’s Chairperson was found siding with the accused. She hardly ever stood for the rights of the women and the victims.” – எவ்வளவு பெரிய வெட்கக்கேடு?
நியூமராலஜிஸ்ட் அசோக் கரத் மீது – பல பெண்களை பல வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி வந்ததாக கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இப்படிப்பட்ட ஒருவருடன் மகாராஷ்டிரா மாநில மகளிர் ஆணையத் தொடர்பில் இருந்தது மட்டுமல்லாமல், அவரது கால்களை கழுவி வணங்கியதும், குடை பிடித்ததும் போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது, மக்களிடையே நம்பிக்கையை குலைத்துள்ளது.

பொதுவெளியில் தலைவர்கள் எப்போதும் அனைவரின் பின்னணியையும் அறிந்து கொள்ள முடியாது என்ற வாதம் இங்கே பொருந்தாது. ஏனெனில் இது ஒரு சாதாரண புகைப்படம் அல்ல, குற்றச்சாட்டில் உள்ள ஒருவருக்கு வெளிப்படையாக மரியாதை செலுத்தப்பட்டதை வெளிச்சம் போட்டு காட்டும் புகைப்படம்.
தலைமை பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் தலைவர் பெண்கள் மற்றும் பாதிக்கப்பட்டோரின் உரிமைகளுக்காக தொடர்ந்து உறுதியாக குரல் கொடுக்கவில்லை என்ற எண்ணம் இந்தச் சம்பவத்தின் மூலம் மேலும் வலுப்பெறுகிறது.
அசோக் கரத் போன்றோர்களுக்கு “என்ன குற்றம் வேண்டுமானாலும் செய்துவிட்டு,” பின்னர் மகளிர் ஆணையத் தலைவியின் பாதுகாப்பு குடைக்குள் ஒளிந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை ஆணையத் தலைவி ஏற்படுத்தியுள்ளார்.
தலைமை என்பது பதவியல்ல. அது நெறிப்படுத்தும் துணிவு. பாதிக்கப்பட்டோரின் பக்கம் தெளிவாகவும் தயக்கமின்றியும் நிற்கும் தைரியம். அதற்கு பாதிக்கப்பட்டவரின் பக்கம் நின்று பார்க்கும் திறன் (empathy) மிகவும் முக்கியம். மகளிர் ஆணையத்திற்கு வரும் case-களை வெறும் பணம் பார்க்கும் தளமாக பார்க்காமல், சட்டமாக உட்கார்ந்து கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்யாமல், பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் பொறுப்பாக பார்க்க வேண்டும். அதேபோல் ஆணையத்திற்கு வரும் தவறான பொய்யான புகார்களை பகுத்தறியும் திறனும் வேண்டும். இங்கு Political Power மற்றும் Statutory Power இரண்டும் துஷ்பிரேயோகம் செய்யப்படுகிறது.
பாதிக்கப்படும் பெண்களுக்கு வெறும் அடையாள தலைவர்கள் தேவையில்லை. அவர்கள் பக்கத்தில் உறுதியாக நிற்கும் உண்மையான குரல்கள் தேவை.
தற்போது மகாராஷ்டிரா முதல்வரின் நடவடிக்கையால் இவர் பதவி விலகி இருந்தாலும், இவர்களைப் போன்ற தலைவர்கள் என்றுமே தவறான உதாரணங்கள் தான், இவர் போன்றத் தலைவர்கள் பெண்களுக்கு தேவையுமில்லை.
கல்யாணந்தி. ச, உறுப்பினர்,
கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம்,
தமிழ்நாடு அரசு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.