4 லட்சம் மதிபுள்ள 18 செல்போன்கள் ஒப்படைத்த புதுச்சேரி இணைய வழி காவல்துறை !
புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் (12-7-25) நடந்த மக்கள் மன்றத்தில் காவல் கண்காணிப்பாளர் Dr. S. பாஸ்கரன் PPS ( Cyber Crime) தலைமை வகித்தார் மற்றும் காவல் ஆய்வாளர்கள் தியாகராஜன், கீர்த்தி மற்றும் இதர காவலர்கள் கலந்து கொண்டனர். 25க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய புகார் மற்றும் குறைகளை தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சில புகார்தார்கள் அவர்கள் இணைய வழி மோசடிக்காரர்கள் மூலம் இழந்த பணத்தை விரைவில் கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை வைத்தனர். அதற்கு காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இணைய வழி குற்ற பிரிவு காவல் நிலைய ஆய்வாளர்களிடம் மேற்கூறிய புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கட்டளையிட்டார்.
மேலும் பொதுமக்கள் தவறவிட்ட 18 செல்போன்கள் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது அதன் மதிப்பு 4,00,000 ஆகும்.
மேலும் சமீபத்தில் நடைபெறும் இணைய வழி குற்றங்களான
சமூக வலைதளமான whatsapp டெலிகிராம் குழுக்களில் தெரியாத சில நபர்கள் கூறும் ஆன்லைன் டிரேடிங் சம்பந்தமான அறிவுரைகளை முற்றிலும் நம்ப வேண்டாம் அவர்கள் அனைவரும் இணைய வழி மோசடிக்காரர்கள்.
மும்பை போலீஸ், CBI, TRAI இருந்து பேசுவதாக கூறி தங்களுக்கு அழைப்புகள் வரலாம். இது இணைய வழி மோசடிக்காரர்கள் உங்களை பயமுறுத்தி பணத்தைப் பறிக்கும் முயற்சி ஆகையால் இதுபோன்று அழைப்புகள் வந்தால் உடனடியாக அந்த அழைப்பை துண்டிக்கவும்.
சமூக வலைதளங்களில் உடனடி கடன் பெறலாம் என வரும் விளம்பரத்தை நம்பி அந்த செயலியை பதிவிறக்கம் செய்து கடன் பெற வேண்டாம் அப்படி நீங்கள் கடன் பெற்றால் உங்களை ஆபாசமாக சித்தரித்து அனுப்பி உங்களை மிரட்டுவார்கள்
சமூக வலைதளங்களில் வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கலாம் என்று வரும் விளம்பரத்தை நம்பி யாரும் பணம் முதலீடு செய்ய வேண்டாம்
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், whatsapp போன்ற சமூக வலைதளங்களில் வரும் வேலை வாய்ப்பு விளம்பரம் ஆன்லைன் டிரேடிங் விளம்பரம் முதலீடு செய்கின்ற பணத்திற்கு இருமடங்காக பணம் தருகிறோம் என்ற விளம்பரங்களை முற்றிலும் நம்ப வேண்டாம் என்று மக்கள் மன்றத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் காவல் கண்காணிப்பாளர் இணைய வழியில் ஏமாறாமல் இருப்பதற்கு சம்பந்தமான விழிப்புணர்வும் மற்றும் அறிவுரையும் கூறினார்.