“புதுக்கோட்டை” அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகள் உதவித்தொகையில் ₹40லட்சம் மோசடி !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

புதுக்கோட்டை கரியாப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகள் உதவித்தொகையில் ₹40லட் சம் மோசடி நடந்துள்ளதாக சென்னை சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தமிழ்நாட்டில் முத்து லட்சுமி மகப்பேறு திட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு அரசு சார்பில் ₹14 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதன் படி கர்ப்பிணியின் 6வது மாதம் ₹6000, 9வது மாதம் ₹6000, குழந்தை பிறந்த 2வது மாதம் ₹2000 என ₹14 ஆயிரம் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இதனால் கர்ப்பிணிகள் பயனடைந்து வருகின்றனர்.

அங்குசம் இதழ்..

இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கரியாப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பணிகளுக்கு வழங்கப்படும் முத்துலட் சுமி மகப்பேறு திட்ட உதவித்தொகையில் முறைகேடு நடந்துள்ளதாக சென்னையில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோயியல் தடுப்பு இயக்குனரகத்துக்கு தகவல் வந்தது.

அதன்பேரில் கடந்த 9ம் தேதி சென்னையில் இருந்து புதுக்கோட்டை கரியாப்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்த அதிகாரிகள் குழுவினர் வெளியே தங்கவில்லை. ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே தங்கி இருந்தது கடந்த 3 நாட்களாக தொடா் ஆய்வில் ஈடுபட்டனா். அதில் முதலாவதாக அங்குள்ள கணினியில் உள்ள 2019-20, 2020-21, 2021-22ம் ஆண்டுகளில்  கர்ப்பிணிகளுக்கு வழங்க வேண்டிய உதவித்தொகை 97 போலி வங்கி கணக்குகளுக்கு போட்டு ₹40 லட்சத்துக்கு மேல்  மோசடி செய்தது தெரியவந்தது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

குறிப்பாக அரிமளம், கடியாப்பட்டி உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ள பகுதிகளில் அதிக அளவில் மோசடி நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இதையடுத்து பயனாளிகளை தொடர்பு கொண்ட அதிகாரிகள் குழுவினர் உங்களுக்கு உதவித்தொகை வந்ததா என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டீர்களா என்று விசாரித்தனர். அப்போது அவர்கள், வங்கி கணக்கு தவறாக உள்ளது. பெயர் தவறாக உள்ளது. ஆதார் கார்டு இணைக்கவில்லை என்று அதிகாரிகள் கூறியதுடன் விரைவில் பணம் வரும் என்று தெரிவித்ததாக பயனாளிகள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அதிகாரிகள் குழுவினர் தொடர் விசாரணையில், பயணானிகள் கொடுக்கும் விபரங் களை கணினியில் ஏற்றும் போது அங்கு பணியில் உள்ளவர்கள் வங்கி கணக்கு எண்ணையோ, பெயர் உள்ளிட்ட விபரங்களை தவறாக பதிவு செய்துள்ளனர். வங்கிக்கு சென்றால் இந்த கணக்கு தவறு என்று கூறி திருப்பி அனுப்பி வைக் கப்பட்டுள்ளது. விண்ணப் பித்த பயணாளிகள், வந்து கேட்டால் வங்கியில் தாமதம் ஆகிறது என எதாவுது ஒரு காரணத்தை சொல்லி அவர்களை அனுப்பி வைத்ததோடு, ஒரு மாதம் கழித்து வேறு ஒரு வங்கி கணக்கை கொடுத்து அந்த வங்கி கணக்கிற்கு பயணாளிகள் தொகையை வரவு வைத்துள்ளது தெரிய வந் துள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணையில்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2019-2020. 2020-2021, 2021-2022 ஆகிய ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பய ணாளிகளின் வங்கி கணக்கிற்கு பணம் செல்லாமல் குறிப்பிட்ட 93 வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்படுள்ளது தெரியவந் துள்ளது.

அந்த கால கட்டத்தில் பணியில் இருந்த துணை இயக்குனர், மருத்துவர்கள், பணியாளர்கள், கணினி இயக்குபவர்கள் என அனைவரையும் தனித்தனியாக விசாரித்த  அதிகாரிகளின்   தொடர் கள ஆய்வில் ஈடுபட்டதோடு மாவட்ட அலுவலர், மருத்துவர், கணினி இயக்குபவர்கள் உள்ளிட்ட உனவினர்களின் 93 வங்கி கணக்கை பயணாளிகள் போல் ஆவணங்களை தயார் செய்து வங்கிக்கு கொடுத்துள்ளனர்.

இதில் 3 ஆண்டுக ளில் ₹40 லட்சத்திற்கு மேல் மோசடி நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. அந்த 93 வங்கி கணக்கு புத்தகங்களை பெற்றுக்கொண்டதோடு யார் யாருக்கெல்லாம் உறவினர்கள் என தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.