அங்குசம் பார்வையில் ‘பூக்கி’
தயாரிப்பு : விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் மீரா விஜய் ஆண்டனி. ஒளிப்பதிவு & இயக்கம் : கணேஷ் சந்திரா, இசை & எடிட்டிங் : விஜய் ஆண்டனி, ஆர்டிஸ்ட் : அஜய் தீஷன், ஆர்.கே.தனுஷா, லக்ஷ்மி மஞ்சு, சுனில், பாண்டியராஜன், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, ஆதித்யா கதிர், பிளாக் பாண்டி, ஐஸ்வர்யா ரகுபதி, ஷியாரா ஷர்மி, பிரியங்கா, வசனம் : புதிய பரிதி, ஆர்ட் டைரக்டர் : பிரகதீஸ்வரன், நடனம் : ஹரிகரன், பி.ஆர்.ஓ.: சதீஷ் [ எய்ம்].
ஹீரோ அஜய் தீஷனும் ஹீரோயின் தனுஷாவும் ஆறு ஆண்டுகள் டீப்பா லவ் பண்ணிட்டு… திடீர்னு ஒரு நாள் பிரேக்கப் பண்ணுகிறார்கள். பிரேக்கப் ஆன பிறகு சரக்கு சப்ளை பண்ற அளவுக்கு ட்ரங்கர் ஆகிறார் ஹீரோ. கூட சேர்த்து குடிக்கும் விவேக் பிரசன்னாவிடமும் ஆதித்யா கதிரிடமும் ஃப்ளாஷ்பேக்கைச் சொல்கிறார். பிரேக்கப்பை மறப்பதற்காக ஜிம்முக்குப் போகிறார். அப்புறம் வெட்டியா ஊர் சுத்துறார். அப்புறம் அம்மா இந்துமதியுடன் உறவினர் வீட்டுக் கல்யாணங்களுக்குச் செல்கிறார். அங்கே தனது அப்பாவின் பால்யகால சினேகிதனின் மகளைப் பார்க்கிறார், கல்யாணம் வரைக்கும் போகிறது இவர்களின் லவ். லவ்வரின் அப்பாவால் அவமரியாதைக்குள்ளானதால் இந்த லவ்வையும் பிரேக்கப் பண்றார். அப்புறம் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறார்.
அங்கே ஹீரோயினோ பிரேக்கப்பிற்குப் பிறகு லேடி சைக்கியாட்ரிஸ்டைச் சந்திக்கிறார். ஹீரோ ஜிம்முக்குப் போனார்ல, இங்க ஹீரோயின் சாமியார் சுனில் மடத்துக்குப் போகிறார். அங்கே போனது மடத்தனம்னு ஃபீல் பண்ணி, அப்பாவின் அட்வைஸ்படி வேறொரு பையனை லவ் பண்ணுகிறார். கல்யாணம் வரைக்கும் போகிறார். ஆனாலும் அஜய்யை மறக்க முடியாமல் தவியாய் தவிக்கிறார். இந்த நேரத்துல தான் தனுஷாவின் ஃப்ரண்ட் ஐஸ்வர்யா ரகுபதி, “ நீ அவனை பிராப்பரா பிரேக்கப் பண்ணலடி. அதனால தான் அவன் நினைவாவே இருக்குற. அதுனால என்ன பண்ற நேரா போய் அவனை பார்த்து பிராப்பரா பிரேக்கப் பண்ணிட்டு ஃப்ரண்ட்லியா பிரிஞ்சு வந்துரு” என்ற மிகவும் அரிதான, இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத கேட்டிராத ஐடியாவைச் சொல்லி திகில் கிளப்புறார்.
”ஸ்ஸ்ஸ்….ஸப்பா ஓவரா கண்ணைக்கட்டுதே”ன்னு உங்க மனசுக்குள்ள மரண பீதி எப்படி இருக்கோ? அதே மரணபீதி தான் நமக்கும். இதுல க்ளைமாக்ஸை வேற நாம சொல்லித் தான் உங்களுக்குப் புரியணுமாக்கும்.
ஹீரோ அஜய் தீஷன் நடிப்பில் நல்ல மார்க் வாங்கி பாஸாகியிருந்த்காலும் இரண்டு மணி நேரப்படத்தில் ஒண்ணே முக்கால் மணி நேரம் க்ளிப்பிங்ஸ், கட்டிங்கிஸ்னு டிரெய்லர் மாதிரித் தான் படம் பிட்டு பிட்டா ஓடி ரசிகனை இம்சிக்குது.
ஹீரோயின் தனுஷாவும் அஜய் விரும்பும் ஷியராவும் பார்க்க பளிச்சுன்னு இருக்கிறார்கள், ஓரளவு நடிக்கவும் செய்திருக்கிறார்கள். ஆனா டைரக்டர் கணேஷ் சந்திராவின் ஸ்கிரிப்ட் உங்க ரெண்டு பேரையும் சோலி முடிச்சிருச்சுத்தா.
அஜய்யின் அப்பாவாக பாண்டியராஜன் பார்க்கவே பரிதாபமா இருக்கார். அவர் டயலாக் பேசுறது இன்னும் பரிதாபமா இருக்கு.
ஆமா டைரக்டர் தம்பி… இந்த விலாக்ஸ் வைப் ஆசிரமம், சாமியார் சுனில்….ஜாக்கெட் போடாத சிஷ்யைகள் இதெல்லாம் எதுக்கு தம்பி? நீங்க சாமியார் எவனிடமாச்சும் போய்ட்டு வந்திருக்கீகளோ? அப்புறம் 200 கோடி கவர்மெண்ட் காண்ட்ராக்ட், மந்திரியின் காண்டு, இதெல்லாம் வச்சு எங்களை நசுக்கிட்டீகளே தம்பி… அதிலும் சுனில் நடிப்பு மகா எரிச்சல்.
‘விஜய் ஆண்டனி மியூசிக்கல்’னு டைட்டில் கார்டு போடுவதற்கு முன்பே ஸ்கிரீனில் பெருசா போட்டார்கள். அதுக்கேத்த ஒர்த் இல்லையே?
லவ் பிரேக்கப்பை பிராப்பரா பண்ணனும்கிற அரிய கண்டு பிடிப்பை உலக சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியிருக்கார் டைரக்டர் கணேஷ் சந்திரா. அடுத்து வரும் டைரக்டர்களில் யாராவது சென்னை உயர்நீதிமன்றம், டெல்லி உச்சநீதிமன்றத்துக்குப் போய்த்தான் பிரேக்கப் ஆர்டர் வாங்கணும்னு சொல்லிட்டா என்ன பண்றது? இதை நினைச்சாத்தான் நமக்கு ஈரக்குலை நடுங்குது.
அங்குசம் பார்வையில் ‘பூக்கி’ 36/100
— ஆண்டவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.