கலெக்டரை கீழே தள்ளிய MP ஆதரவாளர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு !
ராமநாதபுரத்தில் நடைபெற்ற முதல்வர் கோப்பை காண நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியரை கீழே தள்ளி எம் பி ஆதரவாளர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு
ராமநாதபுரம் தனியார் பள்ளியில் நடைபெற்ற முதல்வர் கோப்பை காண மாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்குவதற்காக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் மற்றும் ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி ஆகியோர் அழைக்கப்பட்டு இருந்தனர்
விழா 3 மணிக்கு துவங்கும் என்ற நிலையில் அதற்கு முன்னதாகவே அங்கு வந்த அமைச்சர் கண்ணப்பன் வந்ததால் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. சிறிது நேரம் தாமதமாக வந்த எம்பி நவாஸ் கனி மாவட்ட ஆட்சியரிடம் நானும் மக்கள் பிரதிநிதி தானே நான் வருவதற்கு முன்பாக எப்படி விழாவை ஆரம்பிக்கலாம் என கேட்க,
அருகில் இருந்த அமைச்சரோ எப்போதும் போல் உரிமையுடன் அட வாயா வந்து உட்காரு என பேச திடீரென கோபப்பட்ட எம்பி எப்படி ஒருமையில் பேசலாம் நிகழ்ச்சியை எப்படி சீக்கிரமா ஆரம்பிக்கலாம் என இருவருக்கும் இடையே காரசார வாக்குவாதம் நடைபெற்றது.
இந்த சூழ்நிலையில் அமைச்சர் ஆதரவாளர்களுக்கும் எம்பி ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது சமாதானம் செய்ய சென்ற மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரனை பிடித்து எம்பி உதவியாளர் விஜயராமு நெஞ்சில் கை வைத்து கீழே தள்ளிவிட்டார். இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்தவரை பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் மீட்டனர் விழாவை பாதியிலேயே புறக்கணித்துவிட்டு நவாஸ் கனி எம்.பி சென்று விட்டார்
மாவட்ட ஆட்சியரை கீழே தள்ளிவிட்டது பற்றி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அலுவலர் தினேஷ்குமார் அளித்த புகாரின் நவாஸ் கனி எம்.பி உதவியாளர் விஜயராமு பேரில் நான்கு பிரிவுகளின் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியருக்கு பாதுகாப்பு இல்லை என்றால் நாங்கள் எப்படி பணி செய்வது என அவர் ஆதரவாக ராமநாதபுரம் மாவட்ட வருவாய் துறை மாவட்ட தலைவர் பழனிக்குமார் விடுத்துள்ள அறிக்கையில் அரசியல்வாதிகளுக்கிடையே ஏற்படும் பிரச்சனையில் அதிகாரிகளை அவமானப்படுத்தும் செயல் கண்டிக்கத்தக்கது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
– பாலாஜி