மாஜி டிஜிபி ‘பிளேபாய்’ மகன் மீது பாய்ந்தது வழக்கு….

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

முன்னாள் டிஜிபி திலகவதியின் மகன் மற்றும் மகனின் தோழி மீது போலீசார் வழக்குப்பதிவு

முன்னாள் டிஜிபி திலகவதியின் மருமகள் கொடுத்த புகாரின் பேரில் அவரின் மகன் பிரபு திலக் மற்றும் தோழி இந்திரா பிரியதர்ஷினி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

சேலத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சுருதி. இவருக்கும் முன்னாள் டிஜிபி திலகவதியின் மகன் பிரபு திலக்கிற்கும் கடந்த 2007 ம் ஆண்டு சேலத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது.

நீங்கள் வேலை பெறுவது எளிது...

இருவருக்கும் ஒரு மகன் (8) ஒரு மகள் (14) உள்ளனர். இந்த நிலையில் மருத்துவரான பிரபு திலக் தன்னுடன் விநாயகா மிஷன் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றிய சேலத்தைச் சேர்ந்த இந்திரா பிரியதர்ஷினி என்பவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.

3

இதனை தட்டி கேட்ட வழக்குரைஞர் சுருதியை தாக்கி , பிரபு திலக் மற்றும் அவரின் தோழி இந்திரா பிரியதர்ஷினி ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் சுருதி சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு (2022) செப்டம்பர் மாதம் புகார் அளித்தார். அதில், எனக்கும், முன்னாள் டி.ஜி.பி திலகவதியின் மகன் பிரபு திலக் என்பவருக்கும், 2007-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது, வரதட்சணையாக ஒரு கோடி ரூபாய் ரொக்கமும், 170 பவுன் நகையும் என் தந்தை வழங்கி இருந்தார். எங்களுக்கு மகள் , மகன் மகனும் உள்ளனர்.

4

சமீபகாலமாக என் கணவர் என்னை காரணம் இன்றி அடிப்பதும் துன்புறுத்துவதுமாய் இருந்து வருகிறார். கேட்டால் வரதட்சணை கேட்டு அடித்து விரட்டுகிறார். என் கணவர், சேலத்தில் உள்ள விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியர். எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. மது அருந்திவிட்டு என்னை அடித்து சித்ரவதை செய்து வந்தார். குழந்தைகளுக்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டேன்.

என் கணவரின் அம்மா ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்ததால், எப்போதும் என்னை மிரட்டி, `உன்னுடைய வாழ்க்கையை அழித்து விடுவோம்’ என்று கூறி கொலை மிரட்டல் விடுத்து வந்தார்.

மாஜி டிஜிபி 'பிளேபாய்' மகன் மீது பாய்ந்தது வழக்கு.... இப்படி 🙂
மாஜி டிஜிபி ‘பிளேபாய்’ மகன் மீது பாய்ந்தது வழக்கு…. இப்படி 🙂

தன்னுடன் பணியாற்றும் பெண் மருத்துவர் இந்திரா பிரியதர்ஷினி என்பவருடன், அவர் திருமணத்தை மீறிய உறவில் உள்ளார். இதுகுறித்து எனக்குத் தெரியவந்து நான் கேட்டபோது, கொலை மிரட்டல் விடுக்கிறார்.

இதனால் என் உயிருக்கு ஆபத்து இருந்து வருகிறது. எனவே, அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால் இந்த புகாரின் பேரில், சேலம் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், வழக்கறிஞர் சுருதி சென்னையில் தங்கி தனது நீதிமன்ற பணிகளை கவனித்து வருகிறார்.இதனிடையே சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் கடந்த ஆண்டு (25.10.2022) பிரபு திலக் மற்றும் அவரின் தோழி இந்திரா பிரியதர்ஷினி இருவரும் இருந்ததை கண்ட வழக்கறிஞர் வழக்குரைஞர் சுருதி, கணவரிடம் கேள்வி கேட்டுள்ளார் .

மிரட்டும் மாமியார் ! பிளேபாய் டாக்டர் !! வீதிக்கு வந்த மாஜி பெண் டிஜிபியின் குடும்ப விவகாரம் !
மிரட்டும் மாமியார் ! பிளேபாய் டாக்டர் !! வீதிக்கு வந்த மாஜி பெண் டிஜிபியின் குடும்ப விவகாரம் !

அதற்கு அவர்கள் இருவரும் சேர்ந்து சுருதியையும் அவரின் பெற்றோரையும் தாக்கி உள்ளனர். இது தொடர்பாக வழக்கறிஞர் சுருதி, வி5 திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் .

ஆனால் அந்தப் புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் போலீசார் எடுக்காத காரணத்தால், சென்னை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை வழக்குரைஞர் சுருதி நாடினார்.

இதனையடுத்து சென்னை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வழக்கு பதிவு செய்ய வி5 திருமங்கலம் போலீசாருக்கு உத்தரவிட்டது .இதனைத் தொடர்ந்து கடந்த 07.06.2023 அன்று போலீசார் குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணை முடிவில் முன்னாள் டிஜிபி திலகவதியின் மகன் பிரபு திலக் மற்றும் மகனின் தோழி டாக்டரின் பிரியதர்ஷினி ஆகிய இருவரும் கைது செய்யப்படலாம் என்று காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

– சோழன் தேவ் 

ஏற்கனவே இந்த சம்பவங்கள் குறித்து  அங்குசம் இணையத்தில்  வெளியான கட்டுரைக்கான லிங்

மிரட்டும் மாமியார் ! பிளேபாய் டாக்டர் !! வீதிக்கு வந்த மாஜி பெண் டிஜிபியின் குடும்ப விவகாரம் !

https://angusam.com/the-family-matter-of-former-woman-dgp-who-came-to-street/

 

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.