65வது நாசா மாநாட்டில் அசத்திய திருச்சி NITT கட்டிடக்கலைத்துறை !
65வது நாசா மாநாட்டில் அசத்திய திருச்சி NIT கட்டிடக்கலைத்துறை !
65வது ஆண்டு நாசா மாநாட்டில் என்.ஐ.டி திருச்சியின் கட்டிடக் கலைத் துறை அதிக போட்டிகளில் வென்று முதன்மை வெற்றியாளராக வாகை சூடியது.
தேசிய தொழில் நுட்ப கழகம், திருச்சியில் கட்டிடக் கலை துறை ஒரு அசாதாரண சாதனையை படைத்துள்ளது. 65வது ஆண்டு நாசா ( தேசிய கட்டிடக் கலை மாணவர்கள் சங்கம்) மாநாட்டில் அதிக போட்டிகளில் வென்று ஒட்டு மொத்த வெற்றியாளர்க்கு வழங்கப்படும் மிகவும் மதிப்புமிக்க ” Le Corbusier Trophy” என்ற விருதை மிகவும் வென்றெடுத்துள்ளது.
1957ஆம் ஆண்டு முதல் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் ஆண்டு தோறும் நடைபெறும் இம்மாநாட்டில் ‘ SAARC’ நாடுகளின் கட்டிடக்கலை மாணவர்களும் கலந்து கொள்கின்றனர். இந்த சிறப்பு மிகு நாசா மாநாடு கட்டிடக் கலைத் துறையில் ஒரு உச்ச நிகழ்வாக பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
NASA வில் வென்று சாதனை படைத்ததோடு மட்டுமின்றி இந்த துறையில் கல்வி மற்றும் ஆராய்ச்சி திறன்களும் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது, மேலும் ‘NIRF Ranking ‘ எனப்படும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் கட்டிடக்கலை பிரிவிற்கான தரவரிசைப் பட்டியலில் நாட்டிலேயே 4வது இடத்தை பெற்றுள்ளது. இந்த சாதனை, கட்டிடக் கலை துறையில் முன்னணி நிறுவனமான NIT நிலையை மேலும் உறுதிப்படுத்துகிறது.
இந்த இரட்டை அங்கீகாரத்தினால NITT வளாகமே கொண்டாட்டத்திலும், கோலாகலத்திலும் மூழ்கியுள்ளது. சாதனை படைத்த இந்த குழுவின் ஆத்மார்த்தமான அர்பணிப்பும், அபாரமான திறமைகள் அவர்களை உச்சத்திற்கு இட்டுச் சென்றுள்ளது; எல்லொரும் அடைய விரும்பும் விருதை வென்றெடுத்துள்ளது. NITT திருச்சி தொடர்ச்சியாக உன்னதமான திறமைகளை வெளிப்படுத்தி, தேசிய மற்றும் சர்வதேச மன்றங்களில் சிறந்த போட்டியாளராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது.
வெற்றி பெற்ற அணிக்கு NIT திருச்சியின் மதிப்புமிக்க இயக்குநர் டாக்டர் ஜி.அகிலா அவர்களும், கட்டிடக் கலை துறைத் தலைவர் டாக்டர் கே.திருமாறன் அவர்களும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் கடந்த ஆண்டு முழுவதும் மிகுந்த அர்ப்பணிப்புடனும் விடாமுயற்சியுடன் பணி ஆற்றிய இந்த குழுவின் உறுப்பினர்களையும் சிறந்த தலைமை பண்பினாலும், தனது கடின உழைப்பினாலும் இந்த வெற்றியை சாத்தியப்படுத்திய NITT குழுவின் பிரிவு செயலாளர் செல்வி. வர்ஷா இளங்கோவையும் மிகவும் பாராட்டினர்.
மேலும் மாணவர் கழுவை சிறப்பாக வழிநடத்திய பேராசிரியரும், ஆலோசகருமான Prof. அமலன் கௌசிக் அவர்களையும் வெகுவாக பாராட்டினர். இயக்குநர் மற்றும் துறைத் தலைவரின் முழுமையான ஆதரவும், சீர்மிகு ஆலோசனையும் குழுவினரின் இந்த அற்புதமான வெற்றிக்கு அடிகோலியது. மேலும் NITT யின் பதிவாளர், டீன் மற்றும் அனைத்து பேராசிரியர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
NASA மாநாட்டில் NITT திருச்சியின் கட்டிடக் கலைத் துறை பெற்ற பாராட்டுக்களின் பட்டியல் உண்மையிலேயே பிரமிக்கத்தக்கது, இந்த அணியினர் அனைவரும் அடைய துடிக்கும் ஒட்டு மொத்த வெற்றியாளருக்கான ‘Le Corbusier’ டிராபியுடன் ANDC, LIK மற்றும் LBT ஆகியவற்றின் பாராட்டு பத்திரங்களை பெற்றுள்ளனர் மேலும் Gsen, GRIHA மற்றும் MSL ஆகியவற்றிலிருந்து சிறப்பு விருதுகளையும் பெற்றனர். இவை அனைத்தும் அவர்களின் மேன்மையான செயல்திறனுக்கு சான்று பகிர்கின்றன.
இந்த அற்புதமான வெற்றி NITT திருச்சியின் அறிவார்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் அதீத திறமையையும் அர்ப்பனிப்பும் எடுத்துரைக்கிறது. மேலும் மாணவர்களுக்கு உயர்தர கல்வி மற்றும் அளப்பரிய வாய்ப்புகளை வழங்குவதற்காக NITT மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்படுவதை எடுத்துக் காட்டுகிறது. NASA மாநாட்டில் NITT திருச்சியின் வெற்றியானது அடுத்த தலைமுறை கட்டிடக் கலைஞர்களை உருவாக்குவதிலும், மேம்படுத்துவதிலும் அது ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயலாற்றுகிறது என்பதற்கு சிறந்த சான்றாகும்.
NITT திருச்சி இந்த வெற்றியில் மகிழ்ச்சி அடையும் அதே வேளையில் தனது கட்டிடக் கலைத் துறையானதை மேலும் சாதனைகள் செய்திடவும் புதிய மதிப்பீட்டுகளை இந்த களத்தில் உருவாக்கிடவும் ஊக்கம் அளிக்கிறது. எதிர்காலத்தில் மேலும் சாதனைகளை நிகழ்த்திட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தின் பொருட்டு தனது மாணவர்களிடையே உன்னதத்தை அடையும் உத்வேகத்தையும், புதுமையான சிந்தனைகளை வளர்த்தெடுக்கும் உறுதிப்பாட்டையும் கொண்டுள்ளது. இதன் மூலம் அவர்களின் பெருமைமிகு பங்களிப்புகள் கட்டிடக்கலை உலகில் அழியாத முத்திரையை பதிப்பிக்கும் என்பதில் ஐயமில்லை