அங்குசம் பார்வையில் ‘ராயன்’ – படம் எப்படி இருக்கு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

 அங்குசம் பார்வையில் ‘ராயன்’ தயாரிப்பு : ‘சன் பிக்சர்ஸ்’ கலாநிதி மாறன். டைரக்‌ஷன்: தனுஷ். நடிகர்—நடிகைகள் : தனுஷ், செல்வராகவன், துஷாரா விஜயன், பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், ’பருத்திவீரன்’ சரவணன், தீலிபன், அபர்ணா பாலமுரளி, இளவரசு, வரலட்சுமி சரத்குமார். தொழில்நுட்பக் கலைஞர்கள்—இசை: ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவு: ஓம் பிரகாஷ், ஸ்டண்ட் : பீட்டர் ஹெய்ன் ஆர்ட் டைரக்டர் : ஜாக்கி, எடிட்டிங்: பிரசன்னா, டான்ஸ் மாஸ்டர்ஸ் : பிரபுதேவா, பாபா பாஸ்கர், காஸ்ட்யூம் டிசைனர் : காவ்யா ஸ்ரீராம், பி.ஆர்.ஓ.ரியாஸ் கே.அகமது.

நெல்லை மாவட்டத்தில் காத்தவராயன், [ தனுஷ் ] முத்துவேல் ராயன் [ சந்தீஷ் கிஷன் ] மாணிக்க வேல்ராயன் [ காளிதாஸ் ஜெயராம் ] என அண்ணன் –தம்பிகள் மூன்று பேர். இவர்களுக்கு துர்கா [ துஷாரா விஜயன் ] என்ற தங்கை.  இவர்களின் தாயும் தந்தையும் ஒரு நாள் வெளியே சென்றவர்கள் வீடு திரும்பாததால், மழை பெய்யும் இரவு நேரம் ஊர்ப் பூசாரி வீட்டுக்குப் போகிறார்கள்.

Frontline hospital Trichy

அங்கு தங்கியிருக்கும் போது, குழந்தை துர்காவைக் கடத்த பூசாரி திட்டமிடுவதைத் தெரிந்ததும், ஆவேசாகும் காத்தவராயன் பூசாரியை வெட்டிச் சாய்த்துவிட்டு, தம்பிகளுடனும் தங்கையுடனும்  வேன் ஒன்றில் ஏறி சென்னைக்கு அதிலும் வடசென்னைக்கு வந்திறங்குகிறார்.

ராயன்
ராயன்

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

வடசென்னைன்னாலே உங்களுக்குப் புரிஞ்சிருக்கும். அங்கே இரண்டு தாதாக்கள் இருப்பார்கள், அவர்களுக்குள் தீராத பகை இருக்கும், ஆறாத கோபம் இருக்கும், மாறாத வஞ்சம் இருக்கும், ரத்தம், வெட்டுக்குத்து இருக்கும், கொலைகள் நடக்கும்னு.

நீங்க நினைக்கும் அம்புட்டு டெம்ப்ளேட்டும் இதுல இருக்கு. என்ன ஒரு சின்ன சேஞ்ச்சுன்னா…. அண்ணன் –தம்பிகள்—தங்கை பாசம் கொஞ்சம் மிக்ஸிங் ஆகியிருந்துச்சுன்னா, அதான் தனுஷ் டைரக்ட் பண்ணியிருக்கும் 50—ஆவது படமான இந்த ‘ராயன்’. இன்னொரு முக்கியமான சேஞ்சுன்னா, தனுஷுக்கு இதுல ஜோடி கிடையாது, டூயட் கிடையாது, ஓப்பனிங் பில்டப் கிடையாது, கானா பாட்டு கிடையாது, அவ்வளவு தான்.

வடசென்னையின் பரம்பரைப் பகையாளிகளாக சேதுராமன்[ எஸ்.ஜே.சூர்யா ] துரை [ பருத்திவீரன் சரவணன் ]. இவர்களுக்கு ‘ஸ்கெட்ச்’ போட்டுத் தூக்க நினைக்கும் போலீஸ் அதிகாரியாக பிரகாஷ் ராஜ். அண்ணன் காத்தவராயன் மீது அதீத பாசக்கார தங்கச்சியாக துஷாரா விஜயன், குடிகார ரவுடி சந்தீப் கிஷனுக்கு காதலியாக அபர்ணா பாலமுரளி,[ ஆத்தாடி.. தழுக்கு மொழுக்குன்னு எத்தாதண்டி சைஸ்ல இருக்காரு ]  கல்லூரி மாணவனாக காளிதாஸ் ஜெயராம் என கேரக்டர்களை நன்றாகவே டிசைன் பண்ணியுள்ளார் டைரக்டர் தனுஷ்.

ஆனால் கதைக்களம் வடசென்னை  என்பதால், இதே தனுஷ், வெற்றிமாறன் காம்போவில் வந்த ‘வடசென்னை’ படத்தையும் சுராஜ்—சுந்தர் சி. காம்பினேஷனில் வந்த ‘தலைநகரம்’ படத்தையும் இந்த ‘ராயனின்’ முக்கால்வாசிக் காட்சிகள் நினைவூட்டுகின்றன.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ராயன் -திரைப்படம்
ராயன் -திரைப்படம்

ஒன்றரை இஞ்ச் தலைமுடி, மீடியம் சைஸ் முரட்டு மீசை என தனுஷின் லுக், சந்தர்ப்ப சூழ்நிலையால தாதா ஆனபின்பு பாடி லாங்குவேஜ் என ராயன் கேரக்டருக்கு தன்னைக் கச்சிதமாக பொருத்திக் கொண்டுள்ளார் தனுஷ். ஆனால் படத்தில் அதீத அதிகமான வெட்டுக் குத்து, ரத்தம், பல கொலைகள் இதெல்லாம் ஃபேமிலி ஆடியன்ஸை ஈர்க்குமா என்பது சந்தேகம் தான்.

தனுஷின் தம்பிகளாக வரும் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் இவர்களைவிட தங்கச்சி துர்காவாக வரும் துஷாரா விஜயன் தான் நடிப்பில் அசத்தியிருக்கிறார். அதிலும் அண்ணன் காத்தவராயனைப் போட்டுத்தள்ள வரும் கும்பலை குத்திக் கிழிக்கும் சீனிலும் க்ளைமாக்சில்   சந்தீப் கிஷனைப் பார்த்து, “அண்ணனை எப்டிடா குத்துனே” என ஆவேசமாக கேட்டபடியே கத்தியை சந்தீப் வயிற்றில் சொருகும் க்ளைமாக்ஸ் சீனிலும் பின்னிவிட்டார்.

சென்னைக்கு வந்த காத்தவராயனுக்கு அடைக்கலம் தந்து, அவர்களுடனேயே பயணிக்கும் சேகராக செல்வராகவனும் கவனிக்க வைக்கிறார். வழக்கம் போல வில்லத்தனத்தில் வந்து போகிறார் எஸ்.ஜே.சூர்யா.

தனுஷுக்கு அடுத்து படத்தில் ஹீரோ என்றால்…. அது ஏ.ஆர்.ரஹ்மான் தான். மனுஷன் சீனுக்கு சீன் பேக்ரவுண்ட் மியூசிக்ல பின்னிப் பெடலெடுத்துட்டாரு. அதிலும் க்ளைமாக்சில் மட்டும் நான்கு வெரைட்டியான இசை மூலம் ரசிகர்களை  வசப்படுத்திவிட்டார். இன்னும் சொல்லப் போனால் காட்சி நகர்வுகளில் ரொம்பவே சோர்வுத்தன்மை ஏற்படும் இடங்களிலெல்லாம் ரஹ்மானின் இசை தான் எனெர்ஜிட்டிக்.

ராயன்
ராயன்

ரஹ்மானுக்கு அடுத்து பிரமிக்க வைப்பவர்கள் ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர்ஹெய்னும் ஆர்ட் டைரக்டர் ஜாக்கியும் கேமராமேன் ஓம் பிரகாஷும் தான். எல்லாம் சரி டைரக்டரே… அம்மாவும் அப்பாவும் காணாமல் போகிறார்கள். அதனால சென்னைக்கு வந்தோம்னு சொல்றீக.

நெல்லை மாவட்டத்துல, அதுவும் ஒரு கிராமத்துல வேற சொந்தம், சுருத்து, ஒட்டு ஒறவு எதுவுமேயில்லையா? கிராமத்து ஜனங்க உதவமாட்டாகளா? ராத்திரி மழை பெய்யும் போது, உங்க வீட்லயிருந்து தம்பி, தங்கச்சியுடன் பூசாரி வீட்டுக்கு ஏன்  போறீக? வடசென்னைல அம்மாம்பெரிய தாதா துரையையும் அவனோட ஆட்கள் பத்துப் பதினஞ்சு பேரையும் போட்டுத் தள்ளிட்டு, விடிஞ்சதும் ஒங்க பாட்ல சர்வசாதாரணமா தம்பிகளோட போறீகளே எப்படி மிஸ்டர் காத்தவராயன்?

-மதுரை மாறன்   

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.