திருச்சி மாநகராட்சி – மண்டல தலைவர்கள்
யார் ? யார் ?
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குள் இருந்த பொன்மலை, ஸ்ரீரங்கம், அரியமங்கலம், கோ.அபிஷேகபுரம் ஆகிய நான்கு கோட்டங்கள் தற்போது 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த மண்டலங்களுக்கு 1,2,3,4,5 என எண் வரிசையில் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த 5 மாநகராட்சி மண்டலங்களின் குழுத் தலைவர் பதவியை பிடிக்கவே தற்போது திமுக கவுன்சிலர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது.
ஒன்றாவது மண்டலத்தில் 1-7, 12-15, 19, 21 என மொத்தம் 13 வார்டுகள் உள்ளன. திமுக 10 இடங்களையும, கூட்டணி கட்சிகளான மதிமுக மற்றும் காங்கிரஸ் ஆகியவை தலா ஒரு இடங்களையும், அதிமுக ஒரு இடத்தையும் பெற்றுள்ளது.
1வது மண்டல குழு தலைவர் பதவியை பிடிப்பதற்காக ஸ்ரீரங்கம் திமுக பகுதி செயலாளர் ராம்குமாரின் மனைவி ஆண்டாள் ராம்குமார் போட்டியின்றி தேர்வாகியுள்ளதாக தெரிகிறது.
2வது மண்டலத்தில் 17, 18, 20, 30-34, 47-50, 59 என 13 வார்டுகள் உள்ளன. இதில் திமுக 7 இடங்களையும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக ஆகியவை தலா ஒரு இடங்களிலும், அமமுக ஒரு இடமும், சுயேட்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
2வது மண்டல குழு தலைவர் பதவிக்கு அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர் மண்டி சேகர், அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆதரவாளர் பொன்மலை பகுதி செயலாளர் தர்மராஜ் மற்றும் மகளிர் அணி நிர்வாகி லீலா மற்றும் ஜெயநிர்மலா ஆகியோரிடையே போட்டி நிலவியர்
இந்த மண்டலம் தெற்கு மாவட்ட திமுகவின் கீழ் வருவதால் தெற்கு மாவட்ட திமுக தலைமை முடிவே உறுதி செய்யப்படும் என்று திமுக வட்டாரத்தில் கூறப்படுவதால், ஒரே சமூகத்தை சேர்ந்த இரண்டு பேருக்கு சிபாரிசு செய்யக்கூடாது என்கிற அடிப்படையிலும் கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் சிறுபான்மையினருக்கு வேண்டும் என்கிற பிடிவாதத்தில் ஜெயநிர்மலா தேர்வு செய்யப்பட்டுள்ளார் .
3வது மணடலத்தில் 16, 35-46 வரை என மொத்தம் 13 வார்டுகள் உள்ளன. இதில் திமுக 9 இடங்களையும் கூட்டணி கட்சிகளான சிபிஎம் ஓர் இடத்திலும், காங்கிரஸ் இரண்டு இடங்களையும், அதிமுக ஓர் இடத்தையும் பெற்றுள்ளது.
3வது மண்டல குழுத் தலைவராக, திருச்சி மாநகராட்சி மேயர், துணைமேயர் பதவிக்கான போட்டியில் முக்கிய இடத்தில் இருந்த மலைக்கோட்டை பகுதி செயலாளர் மதிவாணன் உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. தலைவர் போட்டியில் முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரனின் மகன் சிவக்குமாரும் களம் இறங்கி தற்போது ஒதுங்கிக் கொண்டதாக உபிக்கள் வட்டாரங்கள் கூறுகின்றன.
4வது மண்டலத்தில் 51-54, 56-59, 60-65 என 13 வார்டுகள் உள்ளன. இக்கோட்டத்தில் திமுக 12 வார்டுகளையும் அதிமுக ஓர் இடத்தையும் பெற்றுள்ளது.
4வது மண்டல குழுத் தலைவர் பதவியைப் பிடிக்க திருச்சி மாநகராட்சியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக மாவட்ட துணைச் செயலாளர் முத்துசெல்வம், தொடர்ந்து 4-வது முறையாக கவுன்சிலர் பதவியை கைப்பற்றி இருக்கும் கிராப்பட்டி செல்வம் மனைவி கவிதா செல்வம், பகுதி செயலாளர் காஜாமலை விஜய் ஆகிய மூவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இதில் காஜாமலை விஜய், தனக்கு ஆதரவாக வாக்களிக்கும் கவுன்சிலர்களை கவனித்து வைத்திருப்பதாகவும், “இங்கு நான் தான் மண்டலத் தலைவர்” எனக் கூறி வருவதாகவும் உ.பிக்களிடையே பேச்சு உலா வருகிறது. தேர்தல் வரை போட்டா போட்டி நிலவியது. இந்த 3 பேருக்கு இடையே ஒரு முடிவுக்கு வராத நிலையில் இதற்கு இடையில் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மாநகராட்சியில் சீனியர் கவுன்சிலர் ஆனா துர்காதேவிக்கு
5வது மண்டலத்தில் 8-11, 22-29, 55 என 13 வார்டுகள் உள்ளன. திமுக கூட்டணி கட்சிகளான சிபிஐ, காங்கிரஸ் தலா ஓர் இடத்தில் உள்ளது.
5வது மண்டல குழு தலைவர் பதவியை குறிவைத்து பலரும் முயற்சி எடுத்துக் கொண்டிருக்க மகளிர் அணி நிர்வாகி விஜயா ஜெயராஜ் (தேதி அறிவிக்கப்பட்டு நடைபெறாமல் நிறுத்தப்பட்ட தேர்தலில் மேயர் வேட்பாளராக விஜயா ஜெயராஜ் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது), முன்னாள் கோட்டத் தலைவரும் தில்லைநகர் பகுதி செயலாளரின் மனைவியுமான விஜயலட்சுமி கண்ணன், முன்னாள் திமுக கொறடா நாகராஜன் ஆகியோர் இந்த ரேஸில் உள்ளனர்.
இப்படி ஐந்து மண்டலங்களிலும் மண்டல குழுத் தலைவர் பதவியை கைப்பற்ற திமுகவினர் இடையே கடுமையான போட்டி நடைபெறும் கடுமையான போட்டிக்கு நடுவே யார் மண்டல குழு தலைவர் பதவியை பிடிக்க கடைசி நிமிடம் வரை திக் திக்.. நிமிடங்களாக மாறி வருகிறது…