வைகோ மகனுக்காக மதிமுகவில் அட்ஜஸ்மென்ட்
துரை வையாபுரிக்காக
திருத்தப்படும் மதிமுக ‘பைலா’
சமீபத்தில் நடந்த மதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் திருப்பூர் துரைசாமி, “மதிமுகவின் பைலாவிலேயே இல்லாத தலைமை நிலைய செயலாளர் பதவியை எப்படி உருவாக்கினீர்கள்” என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார்.
இதற்கு வைகோ, “முறைப்படி தேர்தல் நடத்தி தான் தேர்வு செய்தோம்” என்று கூற, திருப்பூர் துரைசாமியோ, “பைலாவிலேயே இல்லாத ஒரு பதவிக்கு ஏன் தேர்தல், அனைவரும் தேர்தல் வேண்டாம் என்று கூற, நீங்கள் மட்டும் தேர்தல் நடத்த சொல்லக் காரணம் என்ன, தேர்தல் என்று பொதுக் குழுவில் தான் முடிவு செய்யப்பட்டது என்றால் பேலட் பேப்பர், வாக்குப்பெட்டி எப்படி உடனே தயாரிக்கப்பட்டது” என்று பேசியிருக்கிறார்.
இதையடுத்து மதிமுக பைலாவில் தலைமை கழக செயலாளர் பதவி சேர்க்கும் பணி தொடங்கி இருக்கிறது.