மதுரையை வச்சு செஞ்ச … மா”மழை” !
மதுரை மாநகரில் வெளுத்து வாங்கிய கனமழை -மதுரை ஆலங்குளம், செல்லூர் கண்மாய் மற்றும் பந்தல்குடி கால்வாய் நிரம்பி தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுப்பு – மூழ்கிய குடியிருப்பு பகுதிகள்.
மதுரை மாநகரில் நேற்று மதியம் மூன்று மணி நேரத்திற்கு மேலாக திடீரென கனமழை பெய்தது. இதன் காரணமாக மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி பகுதியான ஆலங்குளம், செல்லூர் கண்மாய்கள் நிரம்பி பந்தல்குடி கால்வாய்களில் நரம்பியது.
இதனால் நேற்றிரவு முதல் நீர் நிரம்பி தெருவுக்குள் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. இதன் காரணமாக முல்லைநகர், செல்லூர், 50 அடி ரோடு, கட்டபொம்மன் நகர், நரிமேடு, பந்தல்குடி, குடியிருப்பு பகுதிகள் முழுவதிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் அங்குள்ள பொதுமக்கள் அவசர அவசரமாக உடைமைகளை எடுத்துக்கொண்டு வெளியேறினர்.
பந்தல்குடி கால்வாயில் இருந்து வெளியேறக்கூடிய நீர் ஒவ்வொரு வீடுகளில் முன்பாக முழங்கால் அளவிற்கு வெள்ளம் போல பெருக்கெடுத்து மழை நீர் ஓடுகிறது.
செல்லூர் மற்றும் தத்தனேரி பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியதோடு நரிமேடு பகுதியில் அமைந்துள்ள 3க்கும் மேற்பட்ட பள்ளிகள் நீரில் மூழ்கியதோடு மருத்துவமனைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களும் நீரில் மூழ்கியது.
மதுரை செல்லூர் முல்லைநகர் நரிமேடு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் மழை நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வீட்டிற்குள்ளே முடங்கியுள்ளனர்.
— ஷாகுல், படங்கள் -ஆனந்தன்.