ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் – தேனியில் புரட்சிகர சோசியலிஸ்ட் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் – தேனியில் புரட்சிகர சோசியலிஸ்ட் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
தேனி மாவட்டம், பழைய பேருந்து நிலையம் அருகே 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புரட்சிகர சோசியலிஸ்ட் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மதுரை சாலையில் அமைந்துள்ள பங்களாமேடு பகுதியில் மழைக்காலங்களில் தேங்கும் நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பல வருடங்களாக தீர்க்கப்படாத ராஜவாய்க்கால் தூர்வாரி முறையாக ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும். தேனி மாவட்ட முழுவதிலும் உள்ள பஞ்சமி நிலங்களை கையகப்படுத்தி ஏழை, எளிய பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கிட வேண்டும். தேனி கர்ணல் பென்னிகுக் பேருந்து நிலையத்திற்குள் உள்ள ஆக்கிரமைப்பை முறையாக அகற்றிடுதல் வேண்டும். தேனி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திற்கு அருகே அமைய உள்ள மேம்பாலத்தை உடனடியாக முடித்து அடிப்படை தேவையான போக்குவரத்தினை சரி செய்திட வேண்டும். தேனி மீறு சமூத்திர கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி நடைமேடை சுற்றுலா தளமாக அமைத்திட வேண்டும்.
பூதிப்புரம் சாலையை சீரமைப்பு செய்திட வேண்டும். தேனி சார்பதிவாளர் அலுவலகத்தில் அரசு உரிமை பெற்ற எழுத்தாளர்களுக்கு அனுமதி வழங்கிட வேண்டும். தேனி ஸ்ரீராம் தியேட்டர் திட்டச்சாலையை அரண்மனைப்புதூர் திட்டச்சாலை இணைத்திட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.