கறிக்காக 3 புள்ளி மான்களை சுட்டு கொன்ற 5 ஆடு திருடர்கள் கைது !
பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் காவல் சரகம், ரங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்த 1) வேட்டை மணி (எ) மணிகண்டன் 24/23 s/o சோலைமுத்து, ரங்கநாதபுரம், பெரம்பலூர். 2) கோவிந்தன் 33/23 s/o கணேசன், வெள்ளனூர், பெரம்பலூர் 3) கார்த்திக்19/23 s/o பெருமாள், வெள்ளனூர், பெரம்பலூர். 4) ராமச்சந்திரன்30/23 s/o முருகேசன் ரங்கநாதபுரம், பெரம்பலூர். 5) மணி (எ) சொக்கன் 17/23 s/o பெருமாள், வெள்ளனூர், பெரம்பலூர். ஆகியோர்கள் நேற்று 21.01.23 ஆம் தேதி நள்ளிரவில் திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, எதுமலை காப்புக்காடுகள் வனப்பகுதியில் மூன்று மான்களை உரிமம் இல்லாத இரண்டு நாட்டு துப்பாக்கிகள் (sbml)மூலம் இறைச்சிக்காக சுட்டு கொன்று உள்ளனர்.

கொன்ற 3 மான்களை பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் காவல் சரகம் தம்பிராம்பட்டி கிராமத்தில் உள்ள நாகப்பன் என்பவரது வயலில் மேற்படி மான்களை வைத்திருந்த பொழுது, பெரம்பலூர் தனிப்படை உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் ஐந்து காவலர்கள் ஆடு திருடும் கும்பலை தேடிக்கொண்டிருக்கும் பொழுது, தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் மேற்படி சம்பவ இடத்திற்கு இன்று 22.01.23 ஆம் தேதி அதிகாலை சுமார் 05.00 மணி அளவில் மேற்படி ஐந்து நபர்களையும் கைது செய்து மற்றும் உரிமம் இல்லாத இரண்டு நாட்டு துப்பாக்கிகள்(sbml) , இறந்து போன மூன்று மான்களையும் கைப்பற்றி உள்ளனர்.

மேலும் வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்பட்ட TATA ACE VENTURE TN45 BA 9837 பயணிகள் வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர்.மேலும் மேற்படி நபர்களை பெரம்பலூர் வனத்துறையினரிடம் இன்று22.01.23 ஆம் தேதி காலை சுமார் 09.00 மணி அளவில் மேல் நடவடிக்கை எடுக்க ஒப்படைத்துள்ளனர். மேலும் மேற்படி சம்பவ இடம் திருச்சி மாவட்ட எல்லையில் உள்ளதால் மேற்படி நபர்களை துறையூர் வனசரகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
-ஜோஸ்