ரஜினிகாந்தின் மகள் கும்பகோணத்தில் !
ரஜினிகாந்தின் இளைய மகள் கும்பகோணத்தில் !
நடிகர் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா வீட்டில் உள்ள லாக்கரில் உள்ள நகை திருட்டு போனது என்று கொடுத்திருந்தார். அடுத்த கொஞ்ச நாளிலே தன்னுடைய சொகுசு கார் சாவி காணவில்லை என்று கொடுத்து இருந்தார். இப்படி தொடர் நெருக்கடிகளுக்கு பிறகு அவர்.. ஆன்மீக பயணமாக கும்பகோணம் வந்திருந்தார்.
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரில் பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் தலமான திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான பெருநலமாமுலையம்மை சமேத மகாலிங்கசாமி கோவில் உள்ளது.
இக்கோவிலில் நடிகர் ரஜினிகாந் தின் இளைய மகள் சவுந்தர்யா தனது கணவர் விசாகனுடன் 05.06.2023 தரிசனம் செய்தார். அப்போது கோவில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா மற்றும் அவரது கணவர் விசாகன் தம்பதியினர் நேரில் சந்தித்து ஆசிபெற்றனர். அவர்களுக்கு தருமை ஆதீனம் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி ஆசி வழங்கினார்.
தொடர்ந்து சவுந்தர்யா- விசாகன் தம்பதியினர் கோவிலில் உள்ள விநாயகர், மகாலிங்கசாமி, பெருநலமாமுலையம்மை, மூகாம்பிகை அம்மன் உள்ளிட்ட சன்னதிகளில் வழிபாடு செய்தனர். தொடர்ந்து கோவிலில் உள்ள கோசாலையில் வழிபாடு மேற்கொண்டனர்.
-ஜார்ஜ்