ராமஜெயம் கொலை வழக்கு  – தமிழகத்தில் திறமையான 5 இன்ஸ் உள்பட 40 பேர் நியமனம் ! ஏன்?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

 

ராமஜெயம் கொலை வழக்கு  –

அங்குசம் இதழ்..

தமிழகத்தில் திறமையான 5 இன்ஸ் உள்பட 40 பேர் நியமனம் !

 

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம். பிரபல தொழிலதிபரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி அதிகாலை நடைபயிற்சி சென்றபோது, கடத்தி கொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருச்சி-கல்லணை சாலையில் திருவளர்ச்சோலை அருகே கிடந்தது. ராமஜெயம் கொலை வழக்கை மாநகர காவல்துறை, சி.பி.சி.ஐ.டி., சி.பி.ஐ. விசாரணை நடத்தியும் கடந்த 10 ஆண்டுகளாக இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

இந்தநிலையில் இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது. போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில், போலீஸ் துணை சூப்பிரண்டு மதன், சி.பி.ஐ. அதிகாரி ரவி அடங்கிய சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. இந்தக்குழு திருச்சியில் முகாமிட்டு விசாரணையை தொடங்கி உள்ளனர். ராமஜெயம் கொலை வழக்கில் தகவல் தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்றும், தகவல் தருபவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

 

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இதற்கிடையே ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க 5 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 40 பேர் கொண்ட தனிப்படை உருவாக்கப்பட்டுள்ளது. அதில், இன்ஸ்பெக்டர்கள் ஞானவேலன் (துவாக்குடி), சண்முகவேல் (மாநகர சைபர் கிரைம்), பாலமுருகன் (அருப்புக்கோட்டை), வீரக்குமார் (சென்னை பெருநகரம்), டி.குமார் (ஓமலூர்) ஆகிய 5 இன்ஸ்பெக்டர்கள், முத்துப்பாண்டி (அலங்காநல்லூர்), முருகன் (மதுரை தெற்குவாசல்), செந்தில்குமார் (மணிகண்டம்), அண்ணாதுரை(விழுப்புரம்), லோகேஸ்வரன்(எஸ்.பி.சி.ஐ.டி.) உள்பட 14 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஏட்டுக்கள் என 40  பேர்இடம் பெற்றுள்ளனர்.

 

இந்த 40 பேரும் பல்வேறு குற்ற வழக்குகளில் திறமையாக பணியாற்றியவர்கள் ஆவர். திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கு, பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கு, நவல்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் கொலை வழக்கு உள்ளிட்ட வழக்குகளில் திறம்பட பணியாற்றி குற்றவாளிகளை கண்டறிய காரணமாக இருந்துள்ளனர்.

ஏற்கனவே ராமஜெயம் கொலை வழக்கை விசாரித்த உயர் அதிகாரிகள் முதல் எட்டு வரை ஒருவரை கூட இந்த புதுக்குழுவில் சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொலை நடந்த போது.. அப்போ திருச்சி மாநகர காவல்துறை ஆணையராக இருந்தவர் சைலேஷ்குமார் யாதவ் , வழக்கு விசாரணை அதிகாரியாக இருந்தவர் ஜெயச்சந்திரன் இவர் சசிகலா திவாகரனின் சம்மந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே, ராமஜெயம் கொலை வழக்கில் எப்படியாவது குற்றவாளிகளை கண்டுபிடித்துவிடவேண்டும் என்ற முனைப்புடன் இந்த 40 பேரும் விசாரணை களத்தில் இறங்க இருப்பதாக சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரி ஒருவர் கூறினார்.

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.