ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் ஏணி ஏற்றம் பெருமா ? சறுக்குமா ?

தற்சமயம் மோடி ஜெயித்து மீண்டும் ஆட்சிக்கு வந்து விட்டால் நவாஸ் கனியும் ஜெயித்து விட்டால் இவர் சென்று மோடியிடம் தொகுதி மக்களுக்கு எதுவும் கேட்பாரா?” என இப்போதே பிரச்சாரத்தை பாஜகவினர் ...

0

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் ஏணி ஏற்றம் பெருமா ? சறுக்குமா ?

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் கடந்த முறை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சேர்ந்த நவாஸ் கனி வெற்றி பெற்றார்.  கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதிகளில் தலைகாட்ட வில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இவருடைய சாதனையாக பெரும்பாலான இடங்களில் ஹைமாஸ் விளக்கு அமைத்தது மட்டுமே. ஆனாலும், அதுவும் எரியவில்லை என்கின்றனர் பொதுமக்கள். மற்றபடி சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஒன்றும் செய்யவில்லை.

நவாஸ் கனி
நவாஸ் கனி

திமுகவினரை மட்டுமே நம்பி களத்தில் உள்ளார். திமுக நிர்வாகிகளோ ஒருவித சுணக்கத்தில் உள்ளனர். இது பற்றி திமுக நிர்வாகிகளிடம் விசாரித்த போது ”தலைமை சொல்லுக்கு கட்டுப்பட்டு நாங்கள் எப்படியும் ஜெயிக்க வைப்போம்” என்றனர். ”இருந்தாலும் திமுகவைச் சேர்ந்த பவானி ராஜேந்திரனுக்கோ இன்பா ரகு, பெருநாழி போஸ், மண்டபம் ஏ.சி ஜீவானந்தம், ராஜீவ் காந்தி, சுப திவாகர் போன்றோருக்கு கிடைத்திருந்தால் இன்னும் உற்சாகமாக வேலை பார்த்திருப்போம்” என்றனர். இதற்கிடையே ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா, முத்துராமலிங்கம் சகோதரர் மூவேந்தரனுக்கும் எப்படியாவது சீட்டு வாங்கிவிட வேண்டும் என காத்திருந்தனர். அது கிடைக்கவில்லை என்ற போது சற்று மனக் கவலையில் உள்ளனர்.

- Advertisement -

- Advertisement -

அமைச்சர் ராஜ கண்ணப்பன்

சில மாதங்களுக்கு முன்பாக ராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ கண்ணப்பன், எம்.பி. நவாஸ் கனி, சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா, முத்துராமலிங்கம் ஆகியோர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அரை மணி நேரம் தாமதமாக வந்த எம்.பி. நவாஸ் கனியோ, ”எப்படி நிகழ்ச்சி நான் வராமல் ஆரம்பிக்கலாம்” என மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரனிடம் எகிற, அப்போது அங்கிருந்த அமைச்சர் ராஜகண்ணப்பன், ”வாயா வந்து உட்காரையா” என எப்போதும் உரிமையுடன் பேச, ”நான் ஒரு எம்பி. மக்கள் இவ்வளவு பேர் உட்கார்ந்து இருக்கும்பொழுது என்னை ஒருமையில் பேசினால் என்ன நினைப்பார்கள்” என இரு தரப்பு ஆதரவாளரிடையே கைகலப்பு ஏற்பட தடுக்கச் சென்ற மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரனை எம்.பி.யின்   ஆதரவாளர் விஜயராமு கீழே தள்ளிவிட, அப்போது பெரும் சர்ச்சையானது. இதை சமூக வலைதளத்தில் திமுகவில் உள்ள ஒரு  கோஷ்டியினர் பரப்பி வருகின்றனர்.

4 bismi svs

ராமநாதபுரம் மாவட்டத்தில் பொறுப்பு அமைச்சராக ராஜ கண்ணப்பன் இருந்த போதும் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் திமுகவினர் வைக்கும் பிளக்ஸ்களில் அமைச்சர் ராஜகண்ணப்பனின் புகைப்படத்தை தவிர்த்து வருகின்றனர். அப்படியே அவரது புகைப்படம் இருந்தாலும் அவர்களை மாவட்ட செயலாளர் ஓரங்கட்டி விடுகிறார். இது பற்றி தலைமைக்கு பல்வேறு புகார்கள் கட்சியினர் அனுப்பியும் தலைமையோ இதில் பெரிதாக ஏதும் அக்கறை காட்டவில்லை. தற்சமயம் இதுவும் ஏணிக்கு ஒரு சறுக்கலாக இருக்கும் என கூறுகின்றனர் திமுக நிர்வாகிகள்.

அன்வர் ராஜா

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் அன்வர் ராஜா, மணிகண்டன் மற்றும் மாவட்டச் செயலாளர் முனியசாமி அவரது மனைவி கீர்த்திகா மணிகண்டனின் அண்ணன் மனைவி கவிதா ஆகியோரும் அதிமுக சார்பில் சீட்டு கேட்டுவந்த நிலையில், பா ஜெயபெருமாள் என்பவரை களத்தில் இறக்கியிருக்கிறது, அதிமுக.

இதற்கிடையே பாரதிய ஜனதா கட்சி சார்பில், கூட்டணியில் தொடர்ந்தாலும் கட்சியின் செல்வாக்கை காட்டுவதற்காக ஓபிஎஸ் சுயேட்சையாக களமிறங்குகிறார்.  அவரது எதிர் தரப்போ, போட்டியாக ஓ.பன்னீர்செல்வம் பெயர் கொண்டவர்களை எல்லாம் தேடிப்பிடித்து களமிறக்கி வருகிறது.

”கடந்த தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வெற்றி பெற்ற நவாஸ் கனி பெரிதாக தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. அவர் மோடியிடம் சென்று தொகுதிக்கு எதுவும் கேட்கவில்லை. அதேபோல் தற்சமயம் மோடி ஜெயித்து மீண்டும் ஆட்சிக்கு வந்து விட்டால் நவாஸ் கனியும் ஜெயித்து விட்டால் இவர் சென்று மோடியிடம் தொகுதி மக்களுக்கு எதுவும் கேட்பாரா?” என இப்போதே பிரச்சாரத்தை பாஜகவினர் தொடங்கிவிட்டதாக தகவல்.

பாலாஜி படங்கள் : வினோத்குமார்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.