ஏயுடி சார்பில் பேராசிரியர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி !
பொறையாறு கல்லூரியில் ஏயுடி சார்பில் பேராசிரியர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது. – “தமிழ்நாடு அரசு உதவிப்பெறும் கல்லூரி ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்” – பொதுச்செயலாளர் பேட்டி
மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் TBML கல்லூரியில் தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் கல்லூரி பேராசிரியர்களுக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி முகாம் கடந்த 27.09.2025ஆம் நாள் நடைப்பெற்றது.

சென்னை, ஈரோடு, கோவை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் பேராசிரியர்கள் முகாமில் பங்கேற்றனர். தஞ்சை மண்டல தலைவர் முனைவர் கோகுலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். சங்கத்தின் தலைவர் பேராசிரியர் காந்திராஜ் பயிற்சிக்குத் தலைமை ஏற்று உரையாற்றினார். பயிற்சி முகாமின் நோக்கம் குறித்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் முனைவர்.சேவியர் செல்வகுமார் உரையாற்றினார்.
த.பே.மா.லு கல்லூரியின் முதல்வர்.முனைவர் ஜான்சன் ஜெயக்குமார் அவர்கள் முகாமை துவக்கி வைத்து Awareness, Readiness and Oneness என்ற தலைப்புகளில் நாம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை பற்றி உரையாற்றி வாழ்த்துரை வழங்கினார்.
தொழில்நுட்ப முதல் அமர்விற்கு சங்கத்தின் துணைத் தலைவர் முனைவர் கிருஷ்ணராஜ் தலைமை வசித்தார். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அரசியலமைப்பு கட்டமைப்பு கொள்கைகள்” என்ற தலைப்பில் முன்னாள் தலைவர் முனைவர் ரவிச்சந்திரன், “கூட்டமைப்பு போராட்டங்கள், சாதனைகள்” என்ற தலைப்பில் திருச்சி மண்டல முன்னாள் தலைவர் முனைவர் பெலிசியா ஜெயக்குமார், “தனியார் கல்லூரிகளின் ஒழுங்குமுறை சட்டம், 1976″பற்றி முன்னாள் தேசிய செயலாளரும், முன்னாள் தலைவருமான முனைவர் ஜெயகாந்தி ஆகியோர் பயிற்சியளித்து உரையாற்றினர்.

தொடர்ந்து நடைப்பெற்ற இரண்டாவது தொழில்நுட்ப அமர்வுக்குப் பொருளாளர் முனைவர் சார்லஸ் தலைமை வகித்தார். “சங்கத்தின் போராட்டத்தின் மைல்கற்கள் மற்றும் பங்களிப்புகள்” என்ற தலைப்பில் முன்னாள் தஞ்சை மண்டல தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழக மேனாள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் முனைவர் நெடுஞ்செழியன் “பல்கலைக்கழக செயல்திறனை வலுப்படுத்துவதில் ஆசிரியர் சங்கங்களின் பங்கு” என்ற தலைப்பில் தஞ்சாவூர் மண்டல செயலாளர் முனைவர் சொக்கலிங்கம் ஆகியோர் பயிற்சியளித்து உரையாற்றினர்.
முகாமை தொடர்ந்து சங்கத்தின் பொதுச்செயலாளர் முனைவர்.சேவியர் செல்வக்குமார் நிர்வாகிகளுடன் செய்தியாளர்களை சந்தித்த போது, “அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணிமேம்பாட்டுக்கான பணப்பலன்கள். எம்.பில் மற்றும் பிஎச்டி பட்டத்திற்கான ஊக்க ஊதியம் வழங்கிடு, பழைய ஓய்வூதிய திட்டத்ததை அமல்படுத்து, தேசியக்கல்விகொள்கை 2020-ஐ திரும்பப் பெறு, பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாத்திடு, சமவேலைக்கு சமஊதியம், எட்டுமணி நேர வேலையை உறுதிப்படுத்துவது.
முறைசாரா தொழிலாளர்களுக்கு ரூ.26000/- குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து போராடியும் எந்தவித நடவடிக்கையும் இல்லையென்றும் விரைவில் செயற்குழுக்கூடி அடுத்தக் கட்ட போராட்டத்தை அறிவிக்கும் என கூறினார்.
நிறைவாக தஞ்சை மண்டல செயலாளர் முனைவர் ரமேஷ் நன்றி கூறினார். நிறைவாக, பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியினை, த.பே.மா.லு கல்லூரி பேராசிரியர் ஈவா நேச நற்குணம் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
ஒரு நாள் பயிற்சி முகாமினை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அனைத்து மண்டல நிர்வாகிகள், த.பே.மா.லு கல்லூரி கிளை பொறுப்பாளர்கள், மிகச் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.
– சிறப்பு செய்தியாளர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.