அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘ரேகை’

திருச்சியில் அடகு நகையை விற்க

தயாரிப்பு : ‘எஸ்.எஸ்.ஜி.குரூப்’ எஸ்.சிங்காரவேலன். ரிலீஸ்: ஜி-5 ஓடிடி. டைரக்டர்: எம்.தினகரன். கதையின் அடிப்படை: எம்.ராஜேஷ்குமார், ஆர்டிஸ்ட்: பால ஹாசன், பவித்ரா ஜனனி, அஞ்சலி, வினோதினி வைத்தியநாதன், ஒளிப்பதிவு: மகேந்திரா எம்.ஹென்ரி, இசை: ராஜ் பிரதாப், எடிட்டிங் : துரை, பி.ஆர்.ஓ.: சதீஷ் ( AIM)

தென்காசி மாவட்டத்தின் பாய்ஸ் ஹாஸ்டல் ஒன்றில் இளைஞன் ஒருவன் அதிகாலை 4 மணிக்கு கொல்லப்படுகிறான். விசாரணைக்கு வருகிறது போலீஸ். பாத்ரூம் உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு, பக்கெட் தண்ணீரிலுக்குள் முகம் மட்டும் முங்கிய நிலையில் இருப்பதாலும் ஆசிட் பாட்டில் ஒன்று வெடித்துச் சிதறிக் கிடப்பதாலும் விபத்து தான் என்ற முடிவுக்கு வருகிறது போலீஸ். அந்த இளைஞன் குற்றாலம் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக இருக்கும் பாலஹாசனுக்கு நெருக்கமானவன் என்பதால், விசாரணையில் அவரும் களம் இறங்குகிறார்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

இந்த விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே அதே பகுதியில் வெவ்வேறு ஏரியாக்களில் நான்கு இளைஞர்கள் விபத்தில் மரணமடைந்த தகவலும் இறந்தவர்களின் கைரேகை ஒரே மாதிரியாக இருக்கும் தகவலும் கிடைக்க அதிர்ச்சியாகிறார் பாலஹாசன். இந்த கைரேகை மர்மத்தின்பின்னணி என்ன என்பதற்கு அதிர்ச்சியளிக்கும் விடை கடைசி எபிசோடில்.

ரேகை புகழ் பெற்ற க்ரைம் நாவலிஸ்ட் ராஜேஷ்குமார் எழுதி 1990-களில் வெளியான ‘உலகை விலைகேள்’ என்ற மெடிக்கம் க்ரைம் நாவலின் ஒரு சிறு பகுதியை பேஸிக்காக வைத்து எட்டு எபிசோடுகளையும் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாமல் பக்காவாக டைரக்ட் பண்ணியிருக்கார் டைரக்டர் எம்.தினகரன். ஒவ்வொரு எபிசோடிலும் ஒரு புதிர், அந்த புதிருக்கான விடை, அதைத் தொடர்ந்து அடுத்த எபிசோடில் இன்னொரு புதிர் என ராஜேஷ்குமார் நாவலைப் படித்த அனுபவத்தை இந்த வெப் சீரிஸ் ஸ்கீரினில் பிரசெண்ட் பண்ணியுள்ளார் டைரக்டர்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

போலீஸ் கெட்டப்புக்கு புதிய வரவாக பாலஹாசன் நச்சுன்னு மேட்ச் ஆகியிருக்கார். இவருக்கும் அதே ஸ்டேஷனில் இருக்கும் கான்ஸ்டபிள் பவித்ரா ஜனனிக்கும் இடையிலான லவ் எபிசோட் சுவாரஸ்யமாகத் தான் இருக்கு. பவித்ராவுக்கும் வேறொருவருக்கும் நிச்சயதார்த்தம் ஆன மாதிரி முதலில் காட்டினாலும் வழக்கம் போல க்ளைமாக்ஸில் நிச்சயபிக்கப்பட்ட மாப்பிள்ளை தியாகி ஆவார், ஹாசனும் பவித்ராவும் ஒன்று சேர்வார்கள் என்பது நமக்குத் தெரிந்தது தான். எத்தனை தமிழ் சினிமாவில் பார்த்திருக்கோம்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

மெடிக்கல் மாஃபியாவாக அஞ்சலி வந்தாலும் க்ளைமாக்ஸில் வில்லி முகம் காட்டி திகைக்க வைக்கிறார் அரசாங்க டாக்டர்ர் வினோதினி வைத்தியநாதன்.

“யோவ்..குற்றவாளிய எப்பவுமே நாம சமூகத்துக்கு எதிரியாத்தான்யா பார்க்கணும். ஆனா நம்மாளுங்களோ தனிப்பட்ட எதிரியா பார்க்குறது தான்யா டேஞ்சர்” –பாலஹாசனின் மேலதிகாரி பேசும் டயலாக் டைரக்டர் டச். பாத்ரூம் தாழ்ப்பாள் உள்பக்கமாக எப்படிப் போடப்பட்டது? என்பதற்கான விடை ராஜேஷ்குமார் டச்.

தென்காசியை குறிப்பாக குற்றாலத்தையும் குறுகலான சந்து பொந்துகளையும் காட்சிப்படுத்தியிருக்கிறார் கேமராமேன்  மகேந்திரா ஹென்றி. ராஜ்பிரதாப்பின் பின்னணி இசை க்ரைம் ஜானருக்கு சப்போர்ட்டாக இருக்கிறது. இந்த சீரிஸின் செகண்ட் இன்னிங்ஸுக்கு லீட் போட்டு முடித்திருக்கிறார்கள்.

‘ரேகை’ ஆச்சர்யக்குறிகளும் அதிர்ச்சித் தகவல்களும்.

—   ஜெ.டி.ஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.