திருச்சி மேற்கு மாவட்ட தமுமுக சார்பில் தூத்துக்குடி மக்களுக்கு ரூ.4 இலட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள்!
திருச்சி மேற்கு மாவட்ட தமுமுக சார்பில் தூத்துக்குடி மக்களுக்கு ரூ.4 இலட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள்!
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு திருச்சி மேற்கு மாவட்ட தமுமுக சார்பில் இரண்டாம் கட்ட நிவாரணமாக 500 குடும்பங்களுக்கு ரூபாய் 4.00 இலட்சம் மதிப்புள்ள அரிசி, பருப்பு, மாவு வகைகள், பாய், போர்வை, பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களுடன் தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராஹிம் ஷா தலைமையில் வாகனம் புறப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் அ.பைஸ் அகமது MC, மமக மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் ஹுமாயூன் கபீர், மாநில செயற்குழு உறுப்பினர் சபீர், IT Wing மாநில துணை செயலாளர் நஜீர், மாவட்ட துணை செயலாளர் அசாருதீன், மருத்துவ அணி செயலாளர் முகமது தல்ஹா, MVS செயலாளர் பஜ்லூர் ரஹ்மான், சீராஜ்தீன், உஸ்மான், பஜார் பக்ருதீன், அப்துல்லா உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.