அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திமுகவுக்கு இளைஞர்களின் புதிய ரத்தம் பாய்ச்சுங்கள்- எழுத்தாளர் ஜெயதேவன்

0

திருச்சியில் அடகு நகையை விற்க

மதிப்புமிகு முதல்வா் ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு வேண்டுகோளை சமூகத்தின் சார்பாக முன்வைக்கிறேன்.   2026 தேர்தல் ஒப்பிட்டு அளவில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிட்டும் என்று திடமாக நம்புகிறேன்.

அவ்வாறு கிட்டும் போது சில விஷயங்களை மிகுந்த கவனத்துடன் தாங்கள் கையாள வேண்டும் என்பதை இந்த செய்தி மூலம் பணிவோடு தெரியப்படுத்திக் கொள்கிறேன். செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகியோர் நீக்கத்தை தமிழகம் பெரிதும் வரவேற்கிறது.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

ஆனால் அதைவிட செந்தில் பாலாஜி அவர்களை அமைச்சரவையில் மீண்டும் சேர்த்ததை தவிர்த்து இருக்கலாம். அவருக்கான முக்கியத்துவம் கோவை மண்டலத்தில் வேண்டும் என்பதற்காக சேர்த்திருக்கிறீர்கள். அது திமுகவுக்கு பலமா பலவீனமா என்றால் முடிவில் பலவீனமாகத்தான் முடிந்திருக்கிறது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

அவர் மீது வேண்டும் என்றே அமலாக்கத்துறை துரத்தி துரத்தி அடிக்கிறது. பாமரனுக்கு கூட அது தெரிகிறது. ஆனாலும் பெயில் கிடைத்த உடனே அவரை அமைச்சரவையில் சேர்த்தது அவசரமான முடிவு..

இப்போது ராஜினாமா கடிதம் வாங்கியது மிகவும் நல்ல விஷயம்.. அதனால் திமுகவின் இமேஜ் ஒருபடி உயர்ந்துள்ளது. ஆனாலும் ஒரு விதத்தில் செந்தில் பாலாஜி அவர்கள் இரக்கத்துக்கு உரியவர்தான்.

தனி மனிதனாக ஒரு ஓபன் ஹார்ட் சர்ஜரி நடைபெறும் பொழுது கூட கட்டிய மனைவி பக்கத்தில் இல்லாமல் போவது என்பது ஒரு மனிதன் வாழ்வில் மாபெரும் அவலம்.  அந்த அவலத்தை அவர் சந்தித்திருக்கிறார்.  அந்த விதத்தில் ஒரு மனிதனாக நான் இரக்கப்படுகிறேன்.

பொன்முடி ராஜினாமா என்பது எல்லா விஷயங்களையும் விட கூடுதல் முக்கியத்துவம் ஆனது இது அவரோடு நிறுத்திக் கொள்வது ஆகாது கூடாது.

அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

அடுத்து ஆட்சி அமைகின்ற பொழுது இன்னும் சில பெரிய தலைகள் இருக்கின்றன அவர்களால் அடுத்த முறை நீங்கள் ஒரு வேலை ஆட்சி அமைத்தால் மீண்டும் வேறு வேறு வடிவில் குடைச்சல் வரும் அவர்கள் பெயர்களை நான் இங்கே குறிப்பிட விரும்பவில்லை 30 ஆண்டுகளுக்கு மேலாக 40 ஆண்டுகளுக்கு மேலாக மாவட்டச் செயலாளர் இருக்கக்கூடிய அவர்களை மீண்டும் அமைச்சரவையில் இடம் தர வேண்டாம்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ், பழனிவேல்  தியாகராசன் மற்றும் தங்கம் தென்னரசு போன்ற சர்ச்சைகளில் சிக்காத நடுத்தர வயது அமைச்சர்களை இனிமேல் தேர்வு செய்யுங்கள் அதோடு இன்னும் இளைஞர்களை பொறுப்புக்கு தயார் செய்யுங்கள் ஏனென்றால் உங்களுக்கு பின்னால் உதயநிதி அவர்கள் கட்சி பொறுப்புக்கும் ஒருவேளை ஆட்சிப் பொறுப்புக்கும் வந்தால் திரு ரஜினிகாந்த் அவர்கள் ஒரு மேடையில் சொன்னது போல இந்தப் பழைய ஸ்டூடண்ட்ஸ் அவர்களை உங்களை போல சமாளித்து கையாள உதயநிதி அவர்களுக்கு ஆற்றல் இருக்குமா என்று சொல்ல முடியாது.  ஆகவே புதிய ரத்தம் திமுகவுக்கு பாய்ச்சுங்கள்.

சர்ச்சைகளில் சிக்காத திமுகவினர்முன்பை விட இப்போது ஓரளவு இளைஞர்கள் திமுகவில் சேர்ந்துள்ளனர்.  இது நல்ல விஷயம் தான் இருந்தாலும் அவர்களை கொத்திச் செல்ல அந்த இளைஞர்களை குறி வைத்து சீமான்  மற்றும் விஜய் போன்றவர்கள் இருக்கிறார்கள். ஆகவே,  திமுகவில் உள்ள இளைஞர்களை தக்க வைத்துக் கொள்வது சவாலான விஷயம் தான் நான் சொல்வது கட்சி தொண்டர்களை அல்ல திமுக அனுதாபிகளை அல்லது வாக்காளர்களை.

வருங்காலத்தில் ஒரு நிம்மதியான ஆட்சி தர வேண்டும் என்றால் பொன்முடி மற்றும் துரைமுருகன் போன்ற வயதானவர்களுக்கு பொறுப்புக்கள் தர வேண்டாம்.

அமைச்சர் துரைமுருகன்.
அமைச்சர் துரைமுருகன்.

துரைமுருகன் அவர்கள் அமைதியான வாழ்க்கை வாழ அவர்களை விடுவித்து விடுங்கள் பார்க்க பாவமாக இருக்கிறது போதும் இதுவரை மக்கள் பணியாற்றியது.

அன்புள்ள முதல்வர் அவர்களே எந்த அளவுக்கு நீங்கள் வாக்காளர்களை தயார் படுத்தி வைத்துள்ளார்கள் அந்த அளவுக்கு சரிவை தரக்கூடிய சக்திகளையும் பக்கத்தில் வைத்திருக்கிறீர்கள் அடுத்த முறை வரும்பொழுது அந்த சக்திகளை நீக்கி விட்டால் ஒரு நிம்மதியான ஆட்சி அடுத்து தர முடியும்.

இவை எல்லாம் நீங்கள் வருவீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதி உள்ளேன். ஓர் ஆண்டில் என்ன மாற்றம் வேண்டுமானாலும் நிகழலாம் அப்போது  இந்த ஆலோசனைகள் பயன் என்றும் போகலாம்.

 

—  ஜெயதேவன்,   எழுத்தாளர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.