தேர்தல் ஜுரம் ; ஓய்வில் ஸ்டாலின் ! சிகிச்சையில் பழனிச்சாமி !
தேர்தல் ஜுரம் ; ஓய்வில் ஸ்டாலின் ! சிகிச்சையில் பழனிச்சாமி ! தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிந்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட தலைவர்கள் சில நாட்கள் ஓய்வில் இருப்பது வழக்கம் இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் விதிமுறைகள் முடியும் வரை பெரிய முடிவுகளையும், முக்கிய அறிவிப்புகளை வெளியிட முடியாது.
இதனால் தேர்தல் பணியில் தொடர்ந்து களத்தில் இருந்ததால் 5 நாட்கள் சுற்றுப்பயணமாக கொடைக்கானலுக்கு சென்றவர் அங்குள்ள பாம்பார்புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அவர் தங்கி ஓய்வெடுத்து வருகிறார். கட்சியினர் யாரும் அவரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.
இதற்கிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள பசுமைப் பள்ளத்தாக்கு பகுதிக்கு ,நேற்று மாலை 5.45 மணியளவில் சென்று அங்குள்ள கோல்ப் கிளப்பில் சுமார் அரை மணி நேரம் கோல்ப் விளையாடி மகிழ்ந்தார் . அதே நேரத்தில் முதல்வர் மனைவி துர்காவும், கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்
அதே நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர். எடப்பாடி பழனிசாமியும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்ததால் வீட்டில் ஓய்வில் இருப்பார் என்று நினைத்து நேற்று முன்தினம் அவரிடம் அனுமதி பெற்று கடலூர் நிர்வாகிகள் சிலர் அவரை பார்க்க சேலம் வீட்டிற்கு சென்றுள்ளனர். வீட்டில் யாரும் இல்லாததால் பிஏ, விற்கு கால் செய்து தலைவர் இங்கே இல்லை. எப்படி பார்ப்பது என கேட்டுள்ளனர் இப்போதைக்கு அவரை பார்க்க முடியாது.
சேலத்தில் காத்திருக்க வேண்டாம்.. அவர் தக்க சமயத்தில் உங்களை அழைப்பார் என்று பிஏ கூறியதாகவும் , இதையடுத்து கடலூர் நிர்வாகிகள் வேறு மாவட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு போன் செய்து தலைவர் எடப்பாடி எங்கே ? நம்ம அண்ணன் எடப்பாடி எங்கு போனார் என்று முணுமுணுத்தால் சேலத்தில் இந்த தகவல் தீயாக பரவியது , இதைனையடுத்து எடப்பாடி பழனிசாமி திடிரென தேடிய நிர்வாகிகளிடம் வீடியோ காலில் தோன்றி முக்கியமான வேலையாக வெளியில் உள்ளேன் நீங்கள் கவலைப்பட வேண்டாம் விரைவில் சந்திக்கிறேன் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது
இந்த நிலையில் தான் எடப்பாடி பழனிசாமி கேரளாவில் உள்ள வயநாட்டில் குடும்பத்தோடு சுற்றுலா சென்றுள்ளார் எனவும் அங்கு 15 நாட்கள் வரை தங்கி ஆயுர்வேத குளியல் மற்றும் ஸ்பெஷல் மூலிகை சிகிச்சை பெறவே அண்ணன் வயநாட்டிற்கு சென்றுள்ளதாக நமக்கு நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தனர்
மேலும் கேரளாவுக்கு ஓய்வுக்காகதான் சென்றுள்ளார் , ஒபிஎஸ் போல அவரும் மூலிகை சிகிச்சைக்கு சென்றதை ரகசியமாக வைத்துள்ளார் எனவும் , இல்லை அவர் கேரளாவில் உள்ள சக்தி வாய்ந்த கோவிலுக்கு சென்று நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி வாகை சூட யாகத்தில் ஈடுபட்டு வருகிறார் என்றும் சில ரத்தத்தின் ரத்தங்கள் மாறுபட்ட தகவல்களை தெரிவித்து வருகின்றனர்
– கேஎம்ஜி