விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடி விபத்து 3 பேர் உடல் சிதறி பலி – 20 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

0

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடி விபத்து 3 பேர் உடல் சிதறி பலி பலர் படுகாயம் 20-கும் மேற்பட்ட வீடுகள் சேதம் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஆவியூரில் சேது, ஸ்ரீராம், ஆகியோருக்கு சொந்தமான R.S.R. என்ற கல்குவாரி செயல்பட்டு வருகிறது.தொழிலாளர்கள் வழக்கம் போல் பாறை உடைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அருகில் பாறைகளை உடைக்க பயன்படுத்தப்படும் வெடிமருந்து இருப்பு வைக்கும் அறையில் புதிதாக கொள்முதல் செய்யப்பட்ட வெடி மருந்துகளை தொழிலாளர்கள் இறக்கும்போது எதிர்பாராத விதமாக வெடி பொருள் கீழே விழுந்து உராய்வு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி உள்ளது.

வெடி விபத்து
வெடி விபத்து
4 bismi svs

இதில் சம்பவ இடத்திலேயே 3 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியாகி உள்ளனர். மேலும் பாறை உடைக்கும் பணியில் இருந்த பலர் குவாரியின் உள்ளே சிக்கி படுகாயத்துடன் உள்ளதாகவும்.மேலும் உயிரிழப்பு அதிகமாகும் என சொல்லப்படுகிறது, இந்த விபத்து தொடர்பாக விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெராரிஸ்கான் அப்துல்லா, வெடி பொருள் நிபுணர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்,

- Advertisement -

- Advertisement -

மேலும் வெடிவிபத்தில் ஏற்பட்ட அதிர்வில் சுமார் 5 கிலோ மீட்டர் அளவில் அமைந்திருக்கும் 20க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது, இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் அந்த கல்குவாரியை நிரந்தரமாக மூட கோரியும் சேதம் அடைந்த வீடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாரீஸ்வரன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.