நிரந்தரப் பணியிடங்கள் உருவாக்கப்படாது ! ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் கழகம் கண்டனம்!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

தமிழ்நாடு முதலமைச்சர் 110 விதியின் கீழ் சட்டசபையில், பிஎஸ்சி நர்சிங் கல்லூரிப் படிப்புக்கான ஏழு செவிலியர் கல்லூரிகள் புதியதாக உருவாக்கப்படும் என்று அறிவித்ததை  தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் கழகம் வெகுவாக வரவேற்கிறது.அதே சமயம் 16. 09. 26 அன்று வெளியிடப்பட்ட அரசாணைகள், கல்லூரிகள் தொடங்குவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறைச் செயலாளர், தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு  அனுப்பிவைத்துள்ளது.

அதில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள்,  கண்டிப்பாக தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் மட்டும்தான் பணியமத்தப்பட வேண்டும், நிரந்தர பணியிடங்கள் உருவாக்கப்படாது, அரசாங்கத்திற்கு ஓய்வூதியம் வேறு எந்த தொடர் பொறுப்புகளை ஏற்படுத்தாது உறுதி  செய்த பின்னரே, புதிய செவிலியர் கல்லூரிகள் தொடங்க அனுமதிக்கப்படும் என்ற நிபந்தனையைகளை குறிப்பிட்டு, வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

எனவே தமிழ அரசு தனது தார்மீக, பொறுப்புகளையும் மற்றும் தனது சமூக கடமைகளையும் தட்டிக் கழித்து  சட்டத்திற்கு புறம்பாக மருத்துவக் கட்டமைப்புகளை சீரழிக்கும் முயற்சியை, தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. இந்த சட்டத்துக்கு புறம்பான வழிகாட்டல் நெறிமுறைகள் உள்ளடக்கிய அரசாணைகளை அனைத்தும் உடனடியாக அரசு திரும்ப பெற வேண்டும் என்று தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் கழகம் அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

Dr. N. பெரியதம்பி

 பொதுச் செயலாளர்

TANRECTA

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.