“இனிமேல் உஷாரா இருப்பேன்” –‘ரெட்ட தல’ ஹீரோயின் !
பிடிஜி யுனிவர்சல் நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக அருண் விஜய் நடிப்பில், ‘மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், பக்கா ஆக்சன் படமாக உருவாகியுள்ளது ‘ரெட்ட தல’.
வரும் 25 ஆம் தேதி, உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாவதால் படத்தின் டிரெய்லர் & சாங் ரிலீஸ் ஃபங்ஷன் டிசம்பர் 15- ஆம் தேதி மதியம் சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.
இந்நிகழ்வில் பேசியோர்…..
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்
“திருக்குமரன் என்னுடைய உதவி இயக்குனர். கஜினி, துப்பாக்கி படத்தில் பணி புரிந்தார் எனக்கு மிகவும் பிடித்தமான வர். மிகவும் திறமைசாலி.இந்தப் படத்தின் தலைப்பு என்னுடையது தான். அதைக் கேட்டதும் கண்டிப்பாக கொடுப்பேன் என்று அவருக்கு தெரியும். நான் கொடுக்கலேன்னாலும் அவனே எடுத்துட்டுப் போயிருப்பான். இந்தப் படத்திற்கு அது சரியாக பொருந்தி யுள்ளது. கூடிய விரைவில் என்னுடைய தயாரிப்பி லும் ஒரு படம் இயக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். அருண் விஜய் 15 வருடங்களுக்கு பின்னும் அதே போல, இன்னும் அப்படியே இளமையாக இருக்கிறார். மிகப்பெரும் ஆச்சர்யம் தான். அவர் ஒரு கடின உழைப்பாளி என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. தமிழ் சினிமாவில் அவருக்கு இன்னும் பெரிய இடங்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன். படத்தில் பணி புரிந்த அத்தனை நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் படத்திற்கு பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளனர். கண்டிப்பாக பெரிய வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறேன்”

இயக்குநர் முத்தையா
“இயக்குநர் திருவும் நானும் உதவி இயக்குநராக இருந்ததிலிருந்து பழகி வருகிறோம். இந்த படம் நிச்சயம் அவருக்கும், அருண் விஜய்க்கும் ஒரு பெரிய வெற்றிப் படமாக அமையும்”.
இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம்
“இந்தப் படத்தின் தலைப்பில் அஜித் சாரை வைத்து, இயக்குநர் முருகதாஸ் இயக்குவதாக நிறைய செய்திகள் கேள்விப்பட்டேன். இன்று அதே பெயரில் அருண் விஜய்யை வைத்து, இயக்குநர் திரு இயக்கியுள்ளார். படத்தின் டிரெய்லர் உலகத்திரத்தில் இருக்கிறது, கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி அடையும்”.
இயக்குநர் பாலாஜி வேணுகோபால்
“சில படங்கள் ஆண்டின் இறுதியில் வரும், அது அந்த வருடத்தில் வெளியான அனைத்து படங்களை யும் மறக்கடித்து விடும், அது போல இந்தப் படம் இருக்கும்”.
இயக்குநர் கோகுல்
“இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். ஏன்னா அப்போது தான் தயாரிப்பாளர் எனக்கொரு படம் கொடுப்பார். அருண் விஜய் கடின உழைப்பாளி.அவரின் உழைப்பிற்கு இந்தப்படம் ஒரு சான்று”.
இயக்குநர் அறிவழகன்
“நானும், திருவும் நீண்ட கால நண்பர்கள். கண்டிப்பாக எனக்கு இது மகிழ்வான தருணம். இந்தப் படம் தயாரிப்பாளருக்கு பெரிய வெற்றியைக் கொடுக்க வேண்டும் “.
சித்தி இத்னானி
“என்னுடைய முதல் படத்திற்கு பிறகு நான் கொஞ்சம் ரிலாக்ஸாக இருந்துட்டேன்னு நினைக்கிறேன். அந்த எண்ணத்தை இந்தப் படம் ஆரம்பிப்பதற்கு முன்னர் விட்டு விட்டேன். இனிமேல் உஷாராகி தேடலுடன் பணியாற்ற போகிறேன். இந்த படத்தில் எனக்கு மிகவும் முக்கிய கதாபாத்திரம். அதுவே என்னை இங்கு நிறுத்தியுள்ளது. கண்டிப்பாக அது உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு அளித்த இயக்குநர் திரு சாருக்கும் அருண் விஜய் சாருக்கும் நன்றி. அவருடன் பணி புரிந்தது எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. நானும் தமிழ் கற்றுக் கொண்டே இருக்கிறேன். இன்னும் சில நாட்களில் முழுவதுமாக தமிழ் கற்றுக் கொள்வேன் என்று நம்புகிறேன். இந்த படம் அனைவருக்கும் ஒரு நல்ல என்டர்டெயின்மென்ட் படமாக இருக்கும்”
எடிட்டர் ஆண்டனி
“இந்தப் படத்தில் திருவுடன் இணைந்து பணி புரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கு எடிட்டிங்கில் மிகவும் உதவியாக இருந்த என்னுடைய உதவியாளர் வெரோனிகாவிற்கு நன்றி. இந்தப் படத்தில் முழுக்க முழுக்க எடிட்டிங்கில் பணி புரிந்துள்ளார்”.
கிரிஷ் திருக்குமரன்
“விழாவிற்கு வந்த இயக்குநர்கள், இந்தப்படத்தில் என்னுடன் பணி புரிந்த உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி. எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் பாபி சாருக்கும், அருண் விஜய் சாருக்கும் நன்றி. இந்தப் படம் ஒரு நல்ல திரை அனுபவத்தை அனைவருக்கும் கொடுக்கும்”.
அருண் விஜய்
“டைரக்டர் திரு சார் அதிகம பேசுவார் என்று நினைத்தேன், ஆனால் படம் பேசும் என்று சுருக்கமாக பேசியுள்ளார். இந்தப் படத்தின் கதை என்னை வெகுவாக கவர்ந்தது. மேலும் எனக்கு சவாலாக இருந்தது. இந்தப் படத்தின் முக்கிய தூணாக இருந்தது எடிட்டர் ஆண்டனி சார். படம் படு வேகமாக இருந்தது, அதை சரியாக கட் செய்து கொடுத்துள்ளார். படத்தில் பாடல்களும் காட்சிகளும் உயர்ந்த தரத்தில் இருக்கும். நடிகை சித்தி இத்னானி தனது முழு உழைப்பைக் கொடுத்துள்ளார். தமிழ் சினிமா இதற்கு பின் அவருக்கு பெரிய வரவேற்பு கொடுக்கு மென நம்புகிறேன். இந்தப் படத்தில் அதிக ஆக்சன் காட்சிகள் இருக்கிறது. அது நன்றாகவே வந்துள்ளது. இப்படத்திற்காக அனைவரும் பெரும் உழைப்பு கொடுத்துள்ளோம், கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்”
முழுக்க முழுக்க ஸ்டைலீஷாக ஆக்சன், ரொமான்ஸ் கலந்து, ஒரு கலர்ஃபுல் எண்டர்டெயினராக உருவாகும் இப்படத்தில், அருண் விஜய் மாறுபட்ட இரட்டை வேடத்தில் மிரட்டியிருக்கிறார்.
அருண் விஜய், சித்தி இத்னானியுடன் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பெராடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தொழில் நுட்பக் கலைஞர்கள்
இசை – சாம் சி.எஸ்.
ஒளிப்பதிவு: டிஜோ டாமி,
எடிட்டர் – ஆண்டனி,
கலை இயக்கம்: அருண்சங்கர் காஸ்ட்யூம் டிசைன்: கிருத்திகா சேகர்
நடனம்: சுரேன், பாபி ஆண்டனி,
மக்கள் தொடர்பு: சதீஷ்(எய்ம்)








Comments are closed, but trackbacks and pingbacks are open.