அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கட்டாய கல்வி உரிமைச் சட்ட நிதி : தமிழகத்துக்கு கிடைத்தது எப்படி ?

திருச்சியில் அடகு நகையை விற்க

கட்டாய கல்வி உரிமைச் சட்ட நிதி ஒதுக்கீடு விவகாரம் ! என்ன நடந்தது ? யார் மேல் தவறு ? விரிவான பின்னணி !

”கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை நடத்தாததால் இந்த ஆண்டு 1.5 இலட்சம் ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் முன் பருவ கல்வியில் சேர்க்கப்படவில்லை… மத்திய அரசிடம் இருந்து பணத்தை பெறுவதற்கான தீவிர சட்டபூர்வமான நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்காதது தமிழ்நாடு அரசின் குற்றம். தமிழ்நாடு அரசு செய்த குற்றத்திற்காக இந்த ஆண்டு தமிழ்நாட்டில் 8 இலட்சம் ஏழை குழந்தைகள் பாதிக்கப்பட்டார்கள்” என்பதாக அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார், மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் வே.ஈசுவரன்.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழாக மாணவர் சேர்க்கை தடைபட்டு போனதற்கான பின்னணி என்ன? என்பது குறித்தும் அதில் தமது மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கின் காரணமாகவே மாற்றம் ஏற்பட்டது என்பதாகவும் குறிப்பிடுகிறார், வே.ஈசுவரன்.

இந்த விவகாரம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை நடத்தாததால் இந்த ஆண்டு 1.5 லட்சம் ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் முன் பருவ கல்வியில் சேர்க்கப்படவில்லை. அரசு பள்ளிகளில் முன்பருவக் கல்வி இல்லாததால், ஏழை மாணவர்கள் முன் பருவக் கல்வி பெறுவதற்கு இந்த சட்டம் மட்டுமே ஒரே வாய்ப்பு. மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 20 ஆம் தேதி இணையதளம் மூலமாக இந்த சேர்க்கையை தொடங்கி மே மாதம் இறுதியில் சேர்க்கை முடிவு பெறும்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு எந்தவித முன் அறிவிப்பும் இன்றி சேர்க்கை தொடங்காமல் மக்களுக்கும் தெளிவுபடுத்தாமல் காலதாமதம் வந்தது. நான் பல கடிதங்களை மாநில அரசுக்கு எழுதியும் எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக, கட்டாய கல்வி உரிமை சட்ட சேர்க்கையை தொடங்கக் கோரி நான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தேன்.

இதன் பின்பு தான் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக கட்டாய கல்வி உரிமை சட்டத்திற்கான பணத்தை தராததால் இந்த ஆண்டு சேர்க்கை தொடங்கவில்லை என மாநில அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. அப்போதும் கூட, இறுதி முடிவை தெரிவிக்காமல் பள்ளிக்கல்வித்துறை கூட்டத்தில் இது குறித்து பேசி முடிவு சொல்கிறோம் என்று நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதிவு செய்தது.

இதன் பின்பு எனது வழக்கின் தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் 10/06/25 ஆம் தேதி வெளிவந்தது. மத்திய அரசை பணம் கொடுக்க வேண்டும் எனவும் பணம் கொடுக்கும் வரை கால தாமதப்படுத்தாமல் சேர்க்கை தொடங்க வேண்டும் என மாநில அரசுக்கும் உயர் நீதிமன்றம் வலியுறுத்தியது. ஆனாலும், மத்திய அரசு பணமும் கொடுக்கவில்லை மாநில அரசு சேர்க்கையும் நடத்தவில்லை.

நீதிமன்றம்மாநில அரசின் மீது நான் வழக்கு பதிவு (13/05/25) செய்த பின்பு தான் மத்திய அரசிடம் கல்வி நிதி பெற 20/ 05 /25 ஆம் தேதி அவசர அவசரமாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு பதிவு செய்தது. தமிழ்நாடு அரசு வேண்டுமென்றே காலதாமதப்படுத்தியது.

மத்திய அரசு தனது கருத்தை வலியுறுத்தி மாநில அரசுக்கு 15/9/22 ஆம் தேதி முதல் 30 08 /24 ஆம் தேதி வரை 11 கடிதங்களை  எழுதி உள்ளது. மாநில அரசும் தனது கருத்தை வலியுறுத்தி 06/07/24 மற்றும் 27/ 08 /24 ஆகிய தேதிகளில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. இது மட்டும் இல்லாமல், தமிழக முதல்வரும் 27/09/ 24 ஆம் தேதி இந்திய பிரதமருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இதன் பிறகும் மத்திய அரசு பணம் தராத போது கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு நீதிமன்றம் சென்று இருக்க வேண்டும். கட்டாய கல்வி உரிமை சட்ட மாணவர் சேர்க்கையை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தமிழ்நாடு அரசு நிறுத்தி வைப்பது சட்டப்படி குற்றமாகும்.

மத்திய அரசு பணம் தரவில்லை என்றால், அதற்கான நடவடிக்கைகளை முன்கூட்டியே தமிழக அரசு எடுத்திருக்க வேண்டும். ஏனென்றால், மத்திய அரசு தனது கடிதத்தின் மூலம் தனது நிலையை தெரிவித்துவிட்டது.

எனது வழக்கின் தீர்ப்பு 10 /06/25 தேதி வெளிவந்தது தமிழ்நாடு அரசிற்கு தீர்ப்பில் உடன்பாடு இல்லையெனில், உடனடியாக உச்ச நீதிமன்றத்திற்கு சென்றிருக்க வேண்டும்.

ஆனால், மாநில அரசு சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையும் அமுல்படுத்தாமல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யாமல் பல மாதங்களாக இழுத்தடித்தது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

அதன் பிறகு தீர்ப்பை நிறைவேற்றாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழ்நாடு அரசின் மீது நான் தொடுத்தேன்.

அந்த வழக்கு 07/08/25 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இரண்டு மாதங்களாக எதுவும் செய்யாமல் இருந்து விட்டு  எனது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வந்த அதே தேதியில் அவசர அவசரமாக 07 /08/ 25 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு விண்ணப்பத்தை நுழைத்து விட்டு தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தோம் என்று உயர் நீதிமன்றத்தில்  தெரிவித்தது. இதன் காரணமாக, மேலும் ஒரு வார காலம் எனது வழக்கு தள்ளிப்போனது.

தமிழ்நாடு அரசுதமிழ்நாடு அரசு காலதாமதம் செய்யும் ஒவ்வொரு நாளும் ஏழை குழந்தைகளின் கல்வி பறிபோகிறது என்பதை பற்றி எல்லாம் தமிழ்நாடு அரசு கவலைப்படாமல், மிகவும் மெத்தனமாக அக்கறையில்லாமல் தமிழ்நாடு அரசு செயல்பட்டது.

மத்திய அரசு பணம் தராமல் இருப்பது சட்டப்படி சரியல்ல என்று எனது வழக்கில் நீதிமன்றமே தீர்ப்பளித்து விட்டது. ஆனால், மத்திய அரசிடம் இருந்து பணத்தை பெறுவதற்கான தீவிர சட்டபூர்வமான நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்காதது தமிழ்நாடு அரசின் குற்றம். தமிழ்நாடு அரசு செய்த குற்றத்திற்காக இந்த ஆண்டு தமிழ்நாட்டில் 8இ லட்சம் ஏழை குழந்தைகள் பாதிக்கப்பட்டார்கள்.

தமிழ்நாடு அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நான் தொடுக்காமல் இருந்தால் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்திற்கும் சென்று இருக்காது.

நான் தொடர்ச்சியாக நீதிமன்ற போராட்டம் நடத்தியதன் காரணமாக, தமிழ்நாடு அரசு நீதிமன்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டது.

மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக  ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் மறியல் போராட்டங்கள் என்று கோவையிலும் சென்னையிலும் தொடர்ந்து நடத்தினோம்.

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அரசியல் இயக்கங்கள் எதுவும் தமிழ்நாட்டிற்கான கல்வி உரிமை பிரச்சனையில் தீவிர குரல் எழுப்பாத நிலையில் தீவிரமாக செயல்படாத நிலையில் சாதாரண இயக்கமான மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் களத்திலும் நீதிமன்றத்திலும் தொடர்ந்து போராடியது.

உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் வழங்கியது இதன் அடுத்த விசாரணை இந்த மாதத்தில் நடைபெற இருந்தது.

உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதற்கு முன்பே மத்திய அரசு தமிழ்நாடு அரசுக்கு கல்வி உரிமைக்கான பணத்தை விடுவித்து விட்டது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்திற்கான மாணவர் சேர்க்கையையும் தமிழ்நாடு அரசு தொடங்கிவிட்டது.

புதிய கல்விக் கொள்கையை அமுல்படுத்தாமல் கட்டாய கல்வி உரிமை சட்டத்திற்கான நிதியையும் மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாடு அரசு பெற்றது.

தமிழ்நாட்டின் உரிமையை மீட்டு தந்ததோடு ஏழை குழந்தைகளுக்கான கல்வி உரிமையையும் மீட்டுத் தந்தோம். எதுவும் முடியும் எதுவும் இல்லாமல், போராடுவோம் வெற்றி பெறுவோம்.” என்பதாக அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்,  மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் வே.ஈசுவரன்.

 

–              அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.