மேலவளவு முதல் திருமங்கலம் வரை மறுக்கப்படும் பட்டியலின மக்களின் உரிமைகள் !
தமிழ்நாடு தேர்தல் ஆணையம்
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமங்கலம் ஊராட்சியில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து ஒரு வாரத்தில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK
கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் திருமங்கலம் ஊராட்சி தலைவராக D.அன்பு என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், உடல்நலக்குறைவால் கடந்த ஜனவரி – 16, 2023 அன்று ஊராட்சி மன்றத் தலைவர் அன்பு இறந்ததையடுத்து, தலைவரி பதவி காலி என்பதாக அறிவிக்கப்பட்டதோடு சரி. தேர்தல் விதிமுறைகளின்படி, காலியான ஊராட்சிமன்றத்தலைவர் பதவிக்கான தேர்தலை அடுத்த 6 மாதங்களுக்குள்ளாக நடத்தி முடித்திருக்க வேண்டும். முழுமையாக ஓராண்டை நெருங்கிவிட்ட நிலையில் இப்போது வரையில் எந்தவிதமான நடவடிக்கையையும் இல்லை.
இடைப்பட்ட இந்த ஓராண்டில், அந்தக்குறிப்பிட்ட ஊராட்சியில் மக்களின் அடிப்படைத் தேவைகள், வளர்ச்சிப்பணிகள் அனைத்தும் முடங்கிக்கிடக்கின்றன. தற்போது, துணைத்தலைவராக இருப்பவரை வைத்து ஒப்புக்கு ஊராட்சியை நிர்வாகத்தை நடத்தி வருகின்றனர்.
Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited
கடந்த 30 ஆண்டுகளாக பொதுத்தொகுதியாக இருந்து வந்த திருமங்கலம் ஊராட்சி, கடந்த 2021 இல்தான் சுழற்சி முறையில் தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்டது. தனித்தொகுதியின் முதல் ஊராட்சித் தலைவராக அன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில்தான் இறந்து போனார்.
2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க
மேலவளவு
தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்ட ஒரு ஊராட்சியில், பட்டியலின சாதியினரை அல்லாத ஒருவர் துணைத்தலைவராக இருக்கும் நிலையில் அவரை வைத்தே ஊராட்சி நிர்வாகத்தை தொடர்ந்து நடத்தி வருவதை தேர்தல் ஆணையத்தும் தமிழக அரசுக்கும் புகாராக கொண்டு சென்றிருக்கின்றனர் அக்கிராம மக்கள். ஆனாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததன் காரணமாக, அதே கிராமத்தைச் சேர்ந்த எழிலழரசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்காக தாக்கல் செய்திருந்தார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வின் முன்பாக விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.ஐ.ஷாருக்குமார் வாதங்களை முன்வைத்தார். இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து இன்னும் ஒரு வாரத்தில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கின்றனர்.
அனைத்து மக்களின் பிரதிநிதித்துவத்தை உத்தரவாதப்படுத்தும் நோக்கில்தான், தனித்தொகுதி – பொதுத்தொகுதி என்ற ஏற்பாடே கொண்டு வரப்பட்டிருக்கிறது. அதுவரை பொதுத்தொகுதியாக இருந்து வந்ததை சுழற்சி முறையில் தனித்தொகுதியாக மாற்றியதைக் கண்டித்து தேர்தலைப் புறக்கணிக்கும் கிராமங்களும் தமிழகத்தில் இருக்கத்தான் செய்கின்றன. தேர்தலில் வென்ற பிறகும் பதவியேற்கவிடாமல் அடாவடி செய்த சம்பவங்களும் அரங்கேறியிருக்கின்றன.
மேலவளவு ஒரு எல்லை எனில், திருமங்கலம் போன்ற ஊராட்சிகள் மற்றொரு எல்லை. இரண்டிற்கும் நடுவில் சிக்கித் தவிக்கிறது பட்டியலின மக்களின் உரிமைகள்!
– ஆதிரன்
திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending