ரோஜா ரீ எண்ட்ரியாகும் படம் ஆரம்பம்!
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் நியோ கேஸ்ட்டில் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது.
தனது ஏழாவது தயாரிப்பை நியோ கேஸ்ட்டில் கிரியேஷன்ஸுடன் இணைந்து தயாரிக்கிறது மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ். சத்யா கரிகாலன் மற்றும் யுவராஜ் கணேசன் தயாரிக்கின்றனர்.

‘ஜமா’ படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாரி இளவழகன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாகவும் நடிக்கிறார். தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ரோஜா ரீ-என்ட்ரி கொடுக்கிறார். இவருடன் சேத்தன், யூடியூபர் பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இசை: பரத் சங்கர் ஒளிப்பதிவு :ஷெல்லி ஆர் கேலிஸ்ட் படத்தொகுப்பு : பார்த்தா கலை இயக்கம்: மகேந்திரன் மக்கள் தொடர்பு: யுவராஜ்
சென்னையின் பெரம்பூர் பகுதியை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும்
இப்படம் வருகிற சம்மரில் ரசிகர்களை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
— ஜெடிஆர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.