திமுக பிரமுகருக்கு ஆதரவாக கொலை மிரட்டல் விடுக்கும் ரௌடி..!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திமுக பிரமுகருக்கு ஆதரவாக கொலை மிரட்டல் விடுக்கும் ரௌடி..!

கிருஷ்ணகிரி மாவட்ட திமுகவில் முக்கிய பிரமுகர் அவர். பெண்களுக்கு வேலை வாங்கித் தருவது என்றால் ரொம்பவும் குஜாலாகிவிடுவார். காரணம் இவருக்கு ‘அட்ஜஸ்ட்’ செய்து கொள்ளும் பெண்களுக்கு தான் இவர் வேலை வாங்கித் தருவார்.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

இப்படி நாளொரு வேலையும் பொழுதொரு குஜாலிலும் ஓடிக்கொண்டிருந்த அந்த பிரமுகர், ‘உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் சீட் வாங்கித் தருகிறேன்’ என ஒரு பெண்ணிடம் ஆசை வார்த்தைக் கூறி அலையவிட, அவருடன் சென்ற பெண் ஒருவர் அந்த திமுக பிரமுகரிடம் வேலை கேட்டு கோரிக்கை வைக்க, அய்யாவுக்கு குஜால் மூடு கிளம்பியதில் அந்த பெண்ணை செல்போனில் அழைத்து, ஆசையாய் அழைப்புவிடுக்கிறார்.

இதில் கடுப்பான அந்தப் பெண், அமைச்சர் காந்தியிடம் இது குறித்து புகார் கூற, அமைச்சரோ அந்த குஜால் திமுக பார்ட்டியை கூப்பிட்டு, “உன் வயசுக்கு இதெல்லாம் தேவையாஞ் உள்ளாட்சி தேர்தல் நேரத்தில ஏன்யா இந்த மாதிரி வில்லங்கத்த வெலைக்கு வாங்குறஞ் காதும்காதும் வச்சா மாதிரி பிரச்சனைய முடியா” எனக் கூறியதோடு அந்த பெண்ணையும் அழைத்து சமாதானம் செய்து அனுப்பியதோடு தன் வேலையை முடித்துக் கொண்டார் அமைச்சர். ஆனால், அமைச்சரிடம் அசிங்கப்பட்டு விட்டோமே என ஆத்திரமான அந்த முக்கிய பிரமுகர், திமுகவில், உள்ள ஒரு பிரிவின் துணை அமைப்பாளரான அந்த ரௌடியை அணுகி. அவர் மூலம் புகார் கூறிய பெண்ணின் மீது கொலை மிரட்டல் விடுக்கிறார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அந்த ரௌடியின் அன்றாட வேலையே அடுத்தவன் சொத்தை அபகரிப்பது, கஞ்சா போன்ற போதை பொருட்களை விற்பது, இரவில் பைக்கில் செல்பவர்களை வழிமறித்து மறுநாள், பணத்தை வாங்கிக் கொண்டு பைக்கை திருப்பித் தருவது, கட்டப்பஞ்சாயத்து.. என அனைத்து மக்கள் விரோத, சட்டவிரோத வேலைகளை செய்வது தான். பொது மக்கள் அந்த ரௌடி குறித்து புகார் அளித்தும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. காரணம் அந்த ரௌடிக்கு காவல்துறை, வரை செல்வாக்கு உண்டு

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.