திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் ரூ.2 லட்சம் திருட்டு

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சென்னை பாடியை சேர்ந்தவர் வெங்கடேஷ்(வயது 40). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தார். பின்னர் நேற்று முன்தினம் மீண்டும் சென்னை செல்வதற்காக புதுக்கோட்டையில் இருந்து பஸ்சில் தனது மனைவியுடன் திருச்சி வந்தார். அப்போது அவர்கள் வைத்து இருந்த பையில் துணிகளுடன் சேர்த்து ரூ.2 லட்சம் இருந்தது. மத்திய பஸ் நிலையம் வந்த அவர்கள் சென்னை செல்லும் பஸ்சில் ஏறி அமர்ந்தனர். பஸ் புறப்பட தயாராக இருந்தபோது, எதார்த்தமாக வெங்கடேஷ் பையை பார்த்தார்.

அப்போது அந்த ‘பை’ திறந்து கிடந்தது. அதனுள் வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் திருட்டு போய் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதி, மத்திய பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் மையத்துக்கு சென்று அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் கூறினர். பின்னர் அங்கிருந்து கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தனர்.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, புதுக்கோட்டையில் இருந்து திருச்சி மத்திய பஸ் நிலையத்துக்கு வந்தபோது, பஸ்சில் 2 பெண்கள் தங்கள் அருகில் அமர்ந்திருந்ததாகவும், அவர்கள் மீது சந்தேகம் உள்ளது என்றும் கூறினர். இதையடுத்து போலீசார் மத்திய பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அதில் சந்தேகப்படும்படியாக பெண்கள் யாராவது சென்னை பஸ்சில் இருந்து பணத்துடன் இறங்கி செல்கிறார்களா? என்று பார்த்தனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.