திருப்பத்தூர் தேர்தல் வெற்றியும்… தாய் பத்திரிக்கை தொடக்கமும்…

0

எம்.ஜி.ஆருக்கு இப்போது பத்திரிக்கை தொடங்கும் ஆசை வந்திருந்தது. மீண்டும் என்றுதான் சொல்ல வேண்டும். ஏற்கனவே தொடங்கி இருந்த பத்திரிக்கையை சரிவர நடத்த முடியவில்லை. கருணாநிதிக்கு குங்குமம் பத்திரிக்கை இருப்பது போல தனக்கென்று ஒன்று இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தார் எம்.ஜி.ஆர்.

உடனே அவருக்கு நினைவிற்கு வந்தது வார்த்தை சித்தர் வலம்புரிஜான். அழைத்து வரப்பட்டார். புதிய பத்திரிக்கை தொடங்குகிறேன் நீங்கள்தான் அதன் ஆசிரியர். பத்திரிக்கையின் பெயர் ”தாய்”. எம்.ஜி.ஆரே சொல்லிவிட்ட பிறகு மறுபேச்சே இல்லை. ஆகட்டும் என்று சொல்லிவிட்டு வந்தார் வலம்புரிஜான். தாய் பத்திரிக்கை நிர்வாகப்பொறுப்பு ஜானகி எம்.ஜி.ஆரின் வளர்ப்பு பிள்ளை அப்பு (எ) ரவீந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டது.

https://businesstrichy.com/the-royal-mahal/

பத்திரிக்கை தொடர்ந்து வெளிவர ஆரம்பித்தது. ஊழலுக்கு எதிரான ஆட்சி என்றுதான் எம்.ஜி.ஆர் ஆட்சியை எல்லோரும் புகழ்ந்து கொண்டிருந்தனர். ஆனால் அவரது ஆட்சியிலும் ஊழல் ஊடுறுவிவிடும் என்பதற்கு சாட்சியாக அமைந்தது எரிசாராய ஊழல். வெளிக்கொண்டு வந்தது பத்திரிக்கைகளே. ஆனால் தமிழ்நாட்டு பத்திரிக்கைகள் அல்ல. கேரள பத்திரிக்கைகள். அடையாளம் தெரியாத சில முக்கிய நபர்கள் அந்தரங்கமாக சில உத்திகள் மூலம், சுத்திகரிக்கப்பட்ட சாராயம் வெளிமாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறது.

இதில் கோடிக்கணக்கான ரூபாய் புழங்கிக்கொண்டிருக்கிறது. இதுதான் அந்த பத்திரிக்கைகள் எழுதிய கட்டுரைகளின் சாரம். எம்.ஜி.ஆர் ஆட்சியில் ஊழல்? சிக்கென பிடித்துக்கொண்டார் கருணாநிதி. மக்கள் மன்றம், சட்டமன்றம் எல்லாவற்றிலும் எரிசாராய வாடை வேகமாக அடித்தது. மேடைக்கு மேடை எரிசாராய ஊழலைப் பற்றியே பேசினார்கள். சிக்கலுக்கு மேல் சிக்கல். என்ன செய்வதென்றே தெரியவில்லை எம்.ஜி.ஆருக்கு. கையை பிசைந்து கொண்டார். ரேகையே அழிந்துவிடும் அளவிற்கு. ஓய்வு பெற்ற நீதிபதி கைலாசம் தலைமையில் கமிஷன் ஒன்று அமைக்கப்பெற்று சாராய பரிவர்த்தனை குறித்த விசாரிக்கும் என்று  சொல்லிட்டார் எம்.ஜி.ஆர்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

ஆனால் எதிர்கட்சி தலைவர் கருணாநிதிக்கும் மற்ற எதிர்கட்சிகளுக்கும் திருப்தி ஏற்படவில்லை. நீதிபதி கைலாசத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். வெறுத்துப்போன கைலாசம் கமிஷனில் இருந்தே விலகிக்கொண்டார். கைலாசம் இருந்த இடத்திற்கு சதாசிவம் வந்தார். ஆனாலும் விவகாரம் விஸ்வரூபம் எடுக்கவே மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டது. ஒரிசா மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த எஸ்.கே.ரே என்பவர் தலைமையில் விசாரணைக்கமிஷன் ஒன்றை மத்திய அரசு நியமித்தது.

இந்த இடத்தில் இன்னொரு அரசியல் விளையாட்டும் நடந்தேறியது. கட்சித் தொடங்கிய புதிதில் கருணாநிதிக்கு எதிராக எம்.ஜி.ஆர் தயாரித்துக் கொடுத்த புகார் பட்டியலின் அடிப்படையில் கருணாநிதி மற்றும் அவருடைய அமைச்சர் சகாக்கள் மீதும் விசாரணை நடத்த சர்க்காரியா கமிஷன் நியமிக்கப்பட்டதல்லவா? அதையொட்டி சில அமைச்சர்கள் மீது குற்றப்புலனாய்வுத்துறை வழக்குகளையும் தொடர்ந்திருந்தது. திடுதுப்பென அந்த வழக்குகளை மத்திய அரசு விலக்கிக்கொண்டது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

கேட்டதற்கு முக்கிய சாட்சிகள் தடம்புரண்டு விட்டார்கள் என்று சொல்லப்பட்டது. எரிசாராய ஊழல் எம்.ஜி.ஆர் ஆட்சியை காவு வாங்கிவிடுமோ என்று அ.தி.மு.க.வினர் அச்சப்பட்டனர். ஆனால் அப்படியொரு விஷப்பரிட்சைக்கு பிரதமர் இந்திராகாந்தி தயாராக இல்லை. பின்னர் எரிசாராய வாடை மெல்ல மெல்ல குறைந்து மறைந்தே போய்விட்டது. இதன் மூலம் எப்போதெல்லாம் சர்க்காரியா கமிஷன் என்று அதிமுகவினர் விமரிசிக்கின்றனரோ அப்போதெல்லாம் ரே கமிஷன் என்று திமுகவினர் பதிலடி கொடுக்க வாய்ப்பு கொடுத்ததுதான் மிச்சம். மற்றபடி எம்.ஜி.ஆரை அசைக்கக்கூட முடியவில்லை.

எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்தபிறகு பல இடைத்தேர்தல்களை சந்திக்க வேண்டி இருந்தது. இப்போது திருப்பத்தூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. வழக்கம்போல் எம்.ஜி.ஆர் என்ன முடிவு எடுப்பாரோ என்று எல்லோரும் ஆவலுடன் காத்திருந்தனர். வேட்பாளரை தேர்வு செய்வதற்காக ஆட்சிமன்ற குழுவின் கூட்டம் திருப்பத்தூரில் நடக்க இருந்தது.

கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்தாகிவிட்டதே தவிர, எம்.ஜி.ஆர் மனதில் பல கணக்குகள் ஓடிக்கொண்டிருந்தது. இடைத்தேர்தல் வந்தால் ஏற்கனவே அந்த தொகுதியில் எந்த கட்சி வெற்றி பெற்றதோ அந்தக்கட்சிக்கு தொகுதியை விட்டுக்கொடுத்துவிடவேண்டும் என்ற பார்முலாவை எம்.ஜி.ஆர் கடந்த காலத்தில் பயன்படுத்தியது உண்டு. அதை திருப்பத்தூருக்கும் பயன்படுத்தலாம் என்று எம்.ஜி.ஆர் நினைத்தார். திருப்பத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர் இந்திரா காங்கிரசை சேர்ந்த வால்மீகி. அந்த தொகுதியில் போட்டியிடாமல் ஒதுங்குவதன் மூலம் உடைந்து போன காங். உறவை ஒட்டவைக்க முடியும் என்று நம்பினார் எம்.ஜி.ஆர். அந்த செய்தி பத்திரிக்கைகளிலும் வெளியானது.

தி.மு.க. தரப்பிலும் கிட்டத்தட்ட அதே நிலைப்பாடு. எங்கள் கூட்டணியில் காங். வெற்றிபெற்ற அந்த தொகுதியில் காங்கிரசே நிற்கும். அதற்கு எங்கள் ஆதரவு என்று தி.மு.க. அறிவித்தது. மாநிலத்தில் இரண்டு பெரிய கட்சிகள் தாமாக முன்வந்து ஆதரவளிக்கிறேன் என்று சொன்னதற்கு பிறகும் காங். அமைதியாக இருந்து விடுமா? திருப்பத்தூரில் காங். தனித்து போட்டியிடும் மற்ற கட்சிகள் அவர்களாகவே இந்திரா காங்கிரசை ஆதரிக்க முன்வந்தால் ஏற்றுக்கொள்வோம் என்றார் மத்திய அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன்.

தமிழக காங். தலைவர் எம்.பி.சுப்பிரமணியமும் இன்னும் பல படிகள் மேலே சென்று பேசினார். எங்களுக்கு ஆதரவு கொடுக்க எந்த அரசியல் கட்சி வந்தாலும் வரவேற்போம். ஆனால் எங்கள் கட்சி மேடைகளில் அவர்களை ஏற்றமாட்டோம். அவர்களின் கட்சிக்கொடி கூட எங்களது பிரச்சார வாகனங்களில் ஏற்றப்படமாட்டாது என்றார். இத்தனை நடந்ததற்கு பிறகும் காங். வேட்பாளரை எம்.ஜி.ஆர் ஆதரிக்கும் தன் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. நான் உபதேவதைகளை கண்டுகொள்ள மாட்டேன். மூலவரே முக்கியம் என்று சொல்லிவிட்டு தேர்தலில் காங். வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்தார் எம்.ஜி.ஆர் அந்த தேர்தலில் காங். வெற்றி பெற்றது.

-ஆர்.பி.பூபேஷ்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.