கட்சிகொடியில் தாமரைக்கு பதில் அண்ணாவை வைத்த எம்.ஜி.ஆர் !

0

கட்சிகொடியில் தாமரைக்கு பதில் அண்ணாவை வைத்த எம்.ஜி.ஆர் !

1972ம் ஆண்டு மதியம் ஒரு மணிக்கு சத்யா ஸ்டியோவில் இருந்த எம்.ஜி.ஆருக்கு தி.மு.கவில் இருந்து அவர் நீக்கப்பட்ட செய்தியை பத்திரிகையாளர்கள் கூறினார்கள்.

2 dhanalakshmi joseph

அப்போது அவர் அதிர்ச்சியில் உறைந்துபோய் உட்கார்ந்து விடுவார் என்று அங்கிருந்த அனைவரும் எதிர்பார்த்தனர். மாறாக, எம்.ஜி.ஆர் முகத்தில் புன்னகை பூக்க எல்லோரும் பாயசம் சாப்பிடுங்கள் என்ற அதிர்ச்சியை பத்திரிகையாளர்களுக்கு அளித்தார்.

அதுமட்டுமின்றி, இன்று எனக்கு மிகவும் மகிழ்ச்சியூட்டும் நாள் என்றும் கூறினார். இதைத்தொடர்ந்து, 17 அக்டோபர் 1972 அ.தி.மு.க உதயமானது. லாரிகளில், பேருந்துகளில், ரயில்களில் என எங்கும் ரசிகர்கள் பட்டாளம் நிரம்பி இருந்தது.

- Advertisement -

- Advertisement -

4 bismi svs

‘‘எம்.ஜி.ஆர் வாழ்க! கருணாநிதி ஒழிக!!’’ என்ற கோஷம் தமிழகம் முழுவதும் ஒலித்தது. மேலும், தமிழகம் முழுவதிலும் செல்லும் வாகனங்களில் பெரும்பாலானவற்றில் எம்.ஜி.ஆரின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. ஒரு விழாவில் மறைந்த துக்ளக் ஆசிரியர் சோ கூட, நானும் அந்த சமயத்தில் எம்.ஜி.ஆரின் ஸ்டிக்கரை ஒட்டிக் கொண்டு தான் வீட்டிற்கு சென்றேன் என்று கூறியுள்ளார்.

இந்த சூழ்நிலையில் எம்.ஜி.ஆர் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட கருப்பு, சிவப்பு கொடியில் தாமரை பொரித்து தமிழகம் எங்கும் கொடிகள் ஏற்றப்பட்டன. இதில், திருப்தி அடையாத எம்.ஜி.ஆர் சினிமாத்துறையைச் சேர்ந்த ஆர்ட் இயக்குனர் அங்கமுத்துவை அழைத்து கொடி விவரங்களை கூறி, அவருடைய ஆலோசனையின் பெயரில் கருப்பு, சிவப்பு வண்ணத்தில் அண்ணா உருவத்தைப் அமைத்து கொடியை வெளியிட்டனர்.அதுவே இன்றளவும் அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ கொடியாக விளங்குகிறது. 

எம்.ஜி.ஆருக்கு புரட்சி நடிகர் என்று துரோகி கருணாநிதியால் வழங்கப்பட்ட பட்டம் இனி தேவையில்லை என்றும், இனி புரட்சித் தலைவர் என்று அழைப்போம் எனவும் 29 அக்டோபர் 1972 ல் நடந்த பொதுக்கூட்டத்தில் கே.ஏ.கே பேசினார். அதிலிருந்தே புரட்சித்தலைவர் என அனைவராலும் எம்.ஜி.ஆர் அழைக்கப்பட்டார்.

பத்திரிகையாளர் சந்திப்பின் போது நிருபர் ஒருவர், தமிழ்நாட்டில் உங்களுக்கு எவ்வளவு ஆதரவு என்று கேட்டார். சற்றும் யோசிக்காத எம்.ஜி.ஆர் 1,000க்கு 999பேர் என பதிலளித்தார். இக்கூற்று உண்மையாகும் படி இறுதி வரையில் மக்களின் அபரிமிதமான அன்பையும், ஆதரவையும் பெற்று முதல்வராக இருந்தார். இப்போதும் அ.தி.மு.கவிற்கு எம்.ஜி.ஆரின் வாக்கு பெருவாரியாக உள்ளது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மையே.

–ஹரிகிருஷ்ணன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.