பகிரங்கமா கொடுத்த, மறுத்த முத்தங்கள்

0

இங்கே கிளிக் பண்ணுங்க.. - வேலை பெறுவது எளிது..

1950க்கு மேல் தமிழ் சினிமா துறையில் மக்கள் திலகமும், நடிகர் திலகமும் போட்டி போட்டுக்கொண்டு நடித்தார்கள். இதே போல் ஒரு காலத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதரும், பி.யு.சின்னப்பாவும் சினிமாத் துறையை ஒரு கலக்கு கலக்கினார்கள். இவர்களுக்கு பிறகு, மக்கள் திலகமும், நடிகர் திலகமும் இந்த இரு திலகங்களும் சேர்ந்து 1954ல் “கூண்டு கிளி” என்ற படத்தில் நடித்தார்கள். அந்த படம் வெளிவந்த பிறகு இரு திலகங்களுடைய ரசிகர்கள் திருப்திஅடையவில்லை. படமும் சரியாக ஓடவில்லை (100 நாள் ஓடவில்லை) அதில் இருந்து இருவரும் சேர்ந்து நடிப்பதில்லை.

ஒரு தாயின் கையால் உணவு உண்ட இவர்கள் 1954க்கு பிறகு, மக்கள் திலகம் அவர்கள் அண்ணாவுடைய அன்பையும், நடிகர் திலகம் காமராஜர் அவர்களதுஅன்புக்கு உரியவர்களாக இருந்தார்கள். சினிமாவில் இந்த இருவருக்கும் பெரும் அளவில் மதிப்பு இருந்தது. ரசிகர்களும் மிக அதிக அளவில்உருவானார்கள். தமிழ் நாடு மட்டும் இன்றி இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இலங்கை இப்படி உலக நாடுகளிலும் ரசிகர் மன்றங்கள் ஏற்பட்டது.

தற்போது விற்பனையில் அங்குசம் இதழ்...

இதேபோல் அரசியலில் உயர்ந்து நின்றார்கள். இருவருமே தனது இல்லங்களுக்கு தாய் பெயரை சூட்டினார்கள். இவர்கள் இருவருக்கும் ராசியில் சற்றுவேறுபாடு இருந்தது. ஆனால், ரசிகர்கள் ஒற்றுமை இல்லாமல் வளர்ந்து வந்தார்கள்.

4

சினிமாவில் இந்த ஒரு திலகங்களுக்கும் திரைக்கதைபடி முடிவில் இறக்கும்படி எம்.ஜி.ஆர். “மதுரை வீரன் ” படத்தில் மாறுகால் மாறுகை வெட்டப்பட்டது. கட்டபொம்மன் படத்தில் சிவாஜிக்கு தூக்கு மேடை அமைந்துஇருந்தது. இதை எப்படி ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்று வினவும் போது, படத்தின் கதை அம்சம் இவர்களுடைய நடிப்பு இதுதான் ரசிகர்களுக்கு முக்கியம். கடைசி காட்சியில் தியேட்டருக்குள் இருப்பது இல்லை. எப்படியோ அந்த இரு படமும் மிக அதிக நாள் ஓடி மிக மிக அதிகமான வசூலைகொடுத்தது.

செம்ம சூப்பரான திரைப்படம்..

இப்படி இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் உயர்ந்து வந்தார்கள். இவர்களுடைய வாழ்க்கையில் இடைஇடையே சிறுசிறு சறுக்ககல்கள் ஏற்பட்டாலும், புகழ் உயர்ந்து கொண்டே வந்தது.
சிவாஜி, சத்யராஜ் நடித்த ‘ஜல்லிக்கட்டு’ திரைப் படத்தின் நூறாவது நாள் விழா. சீஃப் கெஸ்ட் சி.எம். ‘‘உலகம் முழுக்கத் தேடிப்பார்க்கிறேன்… என் தம்பிசிவாஜிக்கு இணையாக ஒரு நடிகனும் இல்லை…’’ என்று சிவாஜி நடிப்புக்குப் புகழாரம் சூட்டுகிறார்.

எம்.ஜி.ஆர். கலங்கிய கண்களோடு ஷீல்டு வாங்க வந்த சிவாஜியை அரவணைத்து கன்னத்தில் பாசப்பெருக்குடன் ‘பஞ்ச்’ முத்தம் கொடுக்கிறார். ‘‘எனக்கும் முத்தம் வேண்டும்…’’ என்று அடம் பிடித்து எம்.ஜி.ஆர் முன்னால் கன்னத்தை நீட்டுகிறார், நம்பியார். ‘நோ’ சொல்லி மறுத்து விடுகிறார், எம்.ஜி.ஆர்.

உலகம் அறிந்த இவர்கள் அண்ணன் முந்தியும், தம்பி பிந்தியும் இந்த உலகத்தை விட்டு மறைந்து விட்டார்கள். அவர்களின் புகழ் மட்டும் மறையவில்லை இவர்கள் இருவரும் திரை உலகுக்கு இரண்டு தூண்களாக இருந்தார்கள்.

5
Leave A Reply

Your email address will not be published.