பொன்மனச்செம்மல்-எம்ஜிஆர்

0

தொப்பியும் இல்லாமல், கண்ணாடியும் அணியாமல் என் முன்னே உட்கார்ந்திருந்தார் எம்.ஜி.ஆர். ஒரு நாள் முழுக்க அவரோடு இருந்து அவரது அசைவுகளை எழுதுவதற்காக நான் அவர் அறையில் அமர்ந்திருந்தேன். அவரது ஆற்காடு முதலி வீட்டில் (இப்போது நினைவகம் இருக்கிறது) அவர் இருந்த காலத்தில், தினம் மதியம் 100 பேராவது சாப்பிடுவார்கள்.அது சாப்பாடு இல்லை. விருந்து. ராமவரத்திலும் காலையில் ஒரு 50, 60 பேராவது சாப்பிடுவார்கள்.பகல் 12 மணியிலிருந்து மதியம் இரண்டு இரண்டரை மணி வரைக்கும் யாரைப் பார்த்தாலும், ‘சாப்டீங்களா?’ என்பதுதான் அவரது முதல் கேள்வியாக இருக்கும். சாப்பிட்டுவிட்டு அவரது அறைக்கு வந்த என்னைப் பார்த்து “சாப்டீங்களா?” என்றார்.

ஏன் சாப்பாடு சாப்பாடு என வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார் என்று எனக்குள் ஒரு கேள்வி.

என் கேள்வியை ஆரம்பித்தேன். அதற்கு பதிலாக எம்.ஜி.ஆர். தனது இளமைக்கால சம்பவம் ஒன்றை விவரிக்க ஆரம்பித்தார்….

“அப்போது நான் பாய்ஸ் கம்பெனியில் நடிச்சிக்கிட்டு இருக்கேன்.

(பாய்ஸ் கம்பெனி என்பது ஒரு குழுவாகத் தொழில்முறை நடிகர்களை வைத்து நாடகம் போடும் நிறுவனங்கள்.

அதில் சிறுவர்கள் நிறைய இருப்பார்கள்.

வறுமையின் காரணமாகவும்,

கலை ஆர்வம் காரணமாகவும் வந்து சேரும் சிறுவர்கள்.

எல்லோரும் ஒன்றாகத் தங்கி, ஒன்றாக உண்டு, ஊர் ஊராகப் போய் நாடகம் போடுவார்கள். சிறுவர்களுக்குப் பயிற்சி அளிக்க வாத்தியார்களும் இருப்பார்கள்)

குரல் உடையற வயசு.

அந்த வயசில இருக்கிறவனுக்குப் பாடம் கொடுக்க மாட்டாங்க.

பாட முடியாதில்ல?.

வேஷம் இல்லாதவனுக்கு கம்பெனியில மரியாதை கிடையாது.

ஆசிரியர்கள் வேண்டாத மாணவர்களைப் பழி தீர்த்துக் கொள்வதும் அப்போதுதான்.

வாழ்க்கை பெரிய நரகமாக ஆகிவிடும்.

ஒரு நாளைக்கு சாப்பிட உட்கார்ந்திருக்கோம்.

நல்ல பசி.

இலை போட்டாச்சு.

காயும் ஊறுகாயும் வைச்சுட்டுப் போயிருக்காங்க.

சோறு வந்துகிட்டே இருக்கு.

என்னை பிடிக்காத வாத்தியார் ஒருத்தர் நான் சாப்பிட உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்தாரு. வேகமாக கிட்ட வந்தாரு.

ஏண்டா, உங்களுக்கெல்லாம் முதப் பந்தி கேட்குதா?’னு கையைப் பிடிச்சு எழுப்பிவிட்டார்.

கையில சோறு எடுத்து வாயில போடப்போற நேரத்தில எழுப்பிவிட்டா எப்படி இருக்கும்?

ஆனா அந்த நேரத்தில எனக்கு பசியைவிட அவமானம்தான் அதிகமாக இருந்தது.

தனியா போய் அழுதேன்.

அவரை எதிர்த்து யாரும் சண்டை போட முடியாது.

கேள்வி கேட்க முடியாது.

தன் கிட்ட அதிகாரம் இருக்குனுதானே எழுப்பிவிடறாரு?

எனக்கு என்னிக்காவது அதிகாரம் வந்தா நாலு பேருக்குச் சோறு போடுவேன்,

எவன் சோத்தையும் பறிக்க மாட்டேன்னு அன்னிக்கு நினைச்சேன்.

இன்னிக்கு எல்லோரும் என்னை ‘வாத்தியார்.. வாத்தியார்’னு கூப்பிடும்போது எனக்கு அவங்களுக்கு சோறு போடற கடமை இருக்குங்கிற நினைப்பு வருது.

அடுத்த வேளைச் சோற்றுக்கு உத்தரவாதம் இருக்கிறவங்க ஏழைகள் சோற்றைப் பற்றி என்ன வேணா கேள்வி கேட்கலாம்.

எனக்கு அதைப்பத்தி கவலை இல்லீங்க.”

உண்மையிலேயே அவர்

பொன்_மனச்செம்மல் தான்.

(எழுத்தாளர், ஊடகவியலாளர் மாலன்)

வழங்கியவர்: ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.