அந்த ஐந்து பெண்கள் ? விரட்டியடித்த திருச்சி மாநகர இன்ஸ்பெக்டர் !

0

அந்த ஐந்து பெண்கள்  ? விரட்டியடித்த திருச்சி மாநகர இன்ஸ்பெக்டர் !

 

திருச்சி மாநகரின் இதய பகுதியில் அமைந்துள்ள காவல் நிலையம். மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் காவல்நிலையம் அது. (27/10/2020) மாலை  காவல் நிலையத்தில் இன்ஸ் பணியில் இருக்கிறார்.

 

கலைஞர் பிறந்தநாள்

கலைஞர் பிறந்தநாள்

அப்போது ரோந்து ஜீப்பில் லேடி எஸ்யை சுமார் 25லிருந்து 30 வயது மதிக்கத்தக்க ஐந்து பெண்களை  அழைத்து வந்து காவல்நிலையத்திற்கு வெளியே நிறுத்தி கடுமையாக வார்த்தைகளில் விசாரிக்கிறார். .

 

அந்தப் பெண்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்த போது பையில் தாலிக்கயிறுகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த லேடி எஸ்.ஐ. “ஏன்டி தாலி பைக்குள்ள வச்சு இங்க என்னா பண்ணிகிட்டு இருக்கீங்க”…என்று அரட்டி உருட்டி விசாரிக்க அந்த 5 பெண்களும் நாங்கள்… மதுரையை சேர்ந்தவர்கள் என்று மெதுவாக பதில் சொல்கிறார்கள்.

 

- Advertisement -

ஒருகட்டத்தில் அந்த லேடி எஸ்.ஐக்கு இவர்கள் யார் என்ற விவரம் தெரிய வர உடனே அவர்களை தன்னுடை செல்போனில் புகைப்படங்கள் எடுத்துக்கொள்கிறார்.

 

4 bismi svs

அப்போது திடீர் என ஒரு நபர் அந்த ஐந்து பெண்களுக்கு சிபாரிசு  செய்து காவல் ஆய்வாளரை தனியே சந்தித்து பேசுகிறார்..

 

சிறிது நேரம் கழித்து பின்னர் வெளியில் வந்த காவல் ஆய்வாளர் அந்தப் பெண்களை கடுமையாக திட்டி இனி உங்களை இந்த பகுதியில் பார்த்தால் உங்கள் மீது நடவடிக்கை எடுத்து விடுவேன் என்று சத்தமிட்டு விரட்டி அடித்து உள்ளார்.

 

கண்ணுக்கு முன் தவறுகள் நடந்தும் அதனை தட்டிக் கேட்க வேண்டிய அந்த இன்ஸ்பெக்டர் யாரோ ஒரு நபர் அந்தப் பெண்களை வைத்து தவறான செயலில் ஈடுபடுத்துவதும் அதிகாரிகள் துணை போகிறார்.

 

அந்த காவல்நிலையத்தி்ற்கு எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா,  போதை என தலைவிரித்து ஆடுகிறது…

பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் பேசக்கூடிய அதிகாரிகள் பஞ்சாயத்து செய்து வழக்கை கணக்கில் காட்டாத வேலைகள் செய்யும் போது பொதுமக்கள் எப்படி காவல்துறையை நம்பி எப்படி வருவார்கள் ?

 

 

-ஜித்தன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.