முதல்வர் வேட்பாளர் சகாயம் ஐஏஎஸ் ! கட்சி தலைவர் ரஜினி ! சரவெடி தீபாவளி !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

முதல்வர் வேட்பாளர்  சகாயம் ஐஏஎஸ் !

கட்சி தலைவர் ரஜினி !  சரவெடி தீபாவளி !

 

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

கடந்த 20  ஆண்டுகளாக ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து நகைச்சுவை, நக்கல் ஏன பல்வேறு பரிணாமங்கள் வளர்ந்து கடைசியில் அந்த இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்கிறார்.. அவரின் நெருக்கமான நண்பர்கள்…

தமிழ்நாட்டில் அனைவரும் அறியப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி, அதிகாரிகளின் அனைவராலும் அறியப்படுபவராகச் சகாயம் ஐஏஎஸ் உள்ளார். துறையைக் கடந்து அனைத்துத் தரப்பு மக்களும் பேசும் அளவிற்கான ஐஏஎஸ் அதிகாரியாக உள்ளவர்தான் சகாயம். அதற்குக் காரணம் நேர்மையான அதிகாரியாகச் செயல்பட்டு வருவது என்று கூறப்படுகிறது.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

கடந்த சில வருடங்களாகவே சகாயம் ஐஏஎஸ். ஆதரவாளர் பலர் மக்கள் பாதை என்கிற அமைப்பினை ஆரம்பித்து, தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு நேரடியாக மாத்திரை மருந்து உதவிகள் செய்து வருகிறார்கள். அந்த அமைப்பினர் சில ஆண்டுகளுக்கு முன்பு சகாயம் ஐஏஎஸ். நேரடி அரசியலுக்கு வர வேண்டும் என்று தமிழகம் முழுவதும் ஆட்களைத் திரட்டி பேரணியாக மதுரையில் மிகப்பெரிய கூட்டத்தைத் திரட்டியிருந்தனர். ஆனால் சகாயம் ஐஏஎஸ் பக்கத்தில் இருந்து சரியான பதில் வராத நிலையில் அந்த இளைஞர்கள் கூட்டம் தற்போது நாம் தமிழர் கட்சியில் பல கலந்து இருக்கிறார்கள்.

2018ம் ஆண்டு நடிகர் ஆரி நடத்திய ‘மாறுவோம் மாற்றுவோம்’ என்ற வேளாண்மை முக்கியத்துவத்தைச் சொல்லும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சகாயம் ஐ.ஏ.எஸ். ” இயக்குநர் அமீர் ஊருக்கு வாருங்கள் என அழைப்பது போல் அரசியலுக்கு அரசியலுக்கு வாருங்கள் என அழைக்கிறார். ஊழலை நான் எப்போது எதிர்த்தேனோ அப்போதே நான் அரசியலுக்கு வந்துவிட்டேன்”. என்று பேசி அவ்வப்போது ரஜினி மாதிரி பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.

இந்த நிலையில் தான் சீனியர் ஐஏஎஸ்.சகாயத்திற்கு அரசு உரிய பொறுப்பையும் மரியாதையும் வழங்கவில்லை என்ற பரவலான கருத்துக்களும் பல சமயங்களில் எழுந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் சகாயம் ஐஏஎஸ் – க்கு ஊதியம் அளிப்பதில் அரசு சுணக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. சீனியர் சிவில் சர்வீஸ் அதிகாரியாக உள்ள சகாயத்திற்கு உரிய பதவியும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

இதனால் இன்னும் சிறிது மாதங்களில் சகாயம் அதிரடியாக அரசியல் களம் காண இருப்பதாகவும் , சகாயத்துக்குத் தொண்டு நிறுவனங்களை நடத்துவோரின் ஆதரவு அதிகமாக இருப்பதாகவும் , மக்கள் பாதை இயக்கத்தின் மூலமாக நேரடி அரசியலுக்கு வர வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

அதே சமயம் சமீபத்தில் ரஜினி உடல்நிலை குறித்து வெளியான தகவலுக்குப் பதிலளித்துள்ள ரஜினி, அதில் உடல்நிலை குறித்து உள்ள தகவல் உண்மை என்று கூறியிருந்தார். இந்த நிலையில் ரஜினி முதல் அமைச்சருக்கான வேட்பாளரைத் தேடிக் கொண்டிருப்பதாகவும் அப்படி முதலில் தென்பட்ட அண்ணாமலை ஐபிஎஸ் பாஜகவில் இணைந்து விட்டதால், சகாயத்தை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த அவரிடம் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

சகாயத்தை முதல்வராக அறிவித்து நாம் தமிழர் கட்சி, இன்னும் சில கட்சிகளோடு கூட்டணியில் இணைத்து தேர்தலை சந்திக்க ரஜினி திட்டமிட்டுள்ளாராம்.

நவம்பர் மாதத்தில் தீபாவளிக்குள் ரஜினி சகாயம் சந்திப்பு நடக்கும் என்று மன்றத்தின் முக்கிய ஆளுமைகள் கூறுகின்றனர். ரஜனி நேரடியாகப் பிரச்சாரத்திற்கு வராமல் தமிழகத்தில் குறிப்பிட்ட சில இடங்களுக்கு மட்டும் பிரச்சாரம் செய்து விட்டுத் தமிழகம் முழுவதும் சகாயம் ஐஏஎஸ்.யை முன்னிலை படுத்திப் பிரச்சாரம் செய்வதற்கு வியுகம் வகுத்து இருக்கிறார்கள் என்று பல்வேறு பட்ட தகவல்கள் உலா வருகின்றது.

இது குறித்துத் தகவல் அறிய மக்கள் பாதையின் முக்கியப் புள்ளியை தொடர்புகொண்டோம், அவர், சகாயம் ஐஏஎஸ் கான உரிய மரியாதையைக் கூட இந்த அரசால் வழங்க முடியவில்லை, அவரை உளவு பார்ப்பதற்கே உளவு அதிகாரிகளை நியமித்திருக்கிறது அரசு. அவர் சில மேடைகளில் சமூகம் சார்ந்த கருத்துக்களைப் பேசியிருக்கிறார், இதனாலேயே அவர் அரசியல் சார்ந்தவர் என்று கருதி ஒதுக்கும் நடவடிக்கைகளையும் அரசு செய்து வருகிறது. இந்த நிலையில்தான் அவர் ராஜினாமா செய்யப் போகிறார் என்ற கருத்தும் வருகிறது. உண்மையில் இங்கு உண்மையான அதிகாரிகளுக்கு உரிய மரியாதை வழங்கப்படுவது கிடையாது, இதனால் அவர், இந்தப் பதவியில் நீடிப்பது சிரமமாகவே உள்ளது.

மேலும் எங்களுடைய மக்கள் பாதையையும், அவரையும் ஒருங்கிணைத்து பேசும் பெரும்பாலான கருத்துக்கள் முற்றிலும் உண்மையில்லை. அவரை ஒரு வழிகாட்டியாகக் கொண்டு மட்டுமே நாங்கள் செயல்படுகிறோம், இப்படியிருக்க ஒருவேளை அவர் பதவியை ராஜினாமா செய்தாலும் அவர் நேரடி அரசியலில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு மிகக் குறைவு. இந்த நிலையில்தான் பல்வேறு யூகங்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன, அப்படியாக ரஜினி கட்சி தொடங்கினால். கட்சிக்குத் தலைமை ரஜினி என்றும், ஆட்சி சகாயம் தலைமையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது முற்றியும் தவறான தகவல் என்கிறார். ..

சகாயம் ஐஏஎஸ் குறித்த தகவல்களுக்கு நேரடியாக வாய் திறந்து இந்த அரசியல் பரபரப்புகளுக்குக் கருத்து தெரிவிக்கும் வரை இது போன்ற தகவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கும் என்பது மட்டும் உண்மை .

ஆக இந்த ரஜினி – சகாயம் அரசியல் சரவெடி புஸ்வானமா ? அணுகுண்டா என்று தெரிந்து கொள்ளத் தீபாவளி வரை காத்திருக்க வேண்டும்….

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.