720 மாணவர்களிடம் ரூ.42 கோடி வசூலித்து மோசடி !! தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு இந்திய கப்பல்துறை நோட்டீஸ் !….
720 மாணவர்களிடம் ரூ.42 கோடி வசூலித்து மோசடி !! தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு இந்திய கப்பல்துறை நோட்டீஸ் !….
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நடத்தும் கல்லூரியில், மாணவர்களிடம் முறைகேடாக பல கோடி ரூபாய் வசூலித்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த திருநாவுக்கரசரை மாற்றிவிட்டு, அவருக்கு பதிலாக கே.எஸ்.அழகிரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தற்போது மோசடி புகார் ஒன்றில் கே.எஸ்.அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர் சிக்கி உள்ளனர்.
கே.எஸ்.அழகிரி தனது சொந்த மாவட்டமான சிதம்பரத்தில் மறைந்த காங்கிரஸ் தலைவர் காமராஜ் பெயரில் கல்லூரி ஒன்றை நடத்தி வருகிறார். இந்த கல்லூரியின் உரிமையாளர்களாக அவரது மனைவி, மகள்கள் என குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர். இந்த கல்லூரியில் கப்பல் தொழில் நுட்ப சார்ந்த பல்வேறு படிப்புகள் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது.
*கப்பல் தொழில் நுட்பம் தொடர்பாக 6 மாதகால பயிற்சி அளிக்க 720 மாணவர்களிடம் ரூ.42 கோடி வசூலிக்கப்பட்டு, மேலும் பயிற்சி முடிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கல்லூரி ஏற்படுத்தி தரும் எனவும் அறிவித்திருந்தது. அதில் ஒரு நாள் மட்டுமே மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாக தெரிகிறது.*
பயிற்சி அளிக்காமல் ஏமாற்றி வந்த கல்லூரி நிர்வாகத்திடம் மாணவர்கள் சார்பில் பல முறை முறையிட்டும், கல்லூரி நிர்வாகம் சரியான விளக்கம் அளிக்கவில்லை.மேலும் மாணவர்கள் பயிற்சி முடித்தாக சான்றிதழ் வழங்கி கல்லூரி நிர்வாகம் மோசடி செய்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அகில இந்திய கப்பல் துறை இயக்குநரகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் மாணவர்களிடம் மோசடி செய்த விவகாரம் தொடர்பாக கே.எஸ்.அழகிரி மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு விளக்கம் கேட்டு இந்திய கப்பல் துறை இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மறைந்த தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா நேற்று காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மூத்த கே.எஸ்.அழகிரி கலந்து கொள்ளாதது, தமிழக காங்கிரசாரிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களிடம் மோசடி விவகாரம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. காமராஜர் பெயரில் மாணவர்களிடம் பணமோசடி செய்துள்ள கே.எஸ்.அழகிரி மீது காங்கிரஸ் தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாக சத்திய மூர்த்தி பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.