அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ரூ.1.20 லட்சத்துக்கு விற்கப்பட்ட 9 நாட்களேயான பெண் குழந்தை !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம், ரெட்டிபட்டி, ஆஞ்சனேயர் கோயில் பகுதியைச் சேர்ந்தவர்கள் தறித் தொழிலாளியான சந்தோஷ் மற்றும் சிவகாமி தம்பதி, இவர்களுக்கு அண்மையில் இரண்டாவது பெண் குழந்தை பிறந்திருக்கிறது.

குழந்தை விற்பனைஇந்நிலையில், தங்களுக்குப் பிறந்த 9 நாள்களேயான அக்குழந்தையை ரூ. 1.20 லட்சத்திற்கு சட்ட விரோதமாக விற்பனை செய்ததாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், மகுடஞ்சாவடி போலீஸார் குழந்தையின் வீட்டுக்கு சென்றனர், அப்போது வீடு பூட்டியிருந்ததால் அருகில் வசித்து வருபவர்களிடம் விசாரித்தனர், இவர்களுக்கு பெங்களுரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 9 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்ததாகவும், ஆனால் இவர்கள் 14 ஆம் தேதி ஊருக்கு திரும்பி தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்து இறந்து விட்டதாக தெரிவித்து வந்திருக்கின்றனர்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

இறுதியாக விசாரணையின் முடிவில், குழந்தையின் பெற்றோர், தேவராஜ் என்பவர் மூலம் ரஞ்சித் என்பவருக்கு சட்ட விரோதமாக கடந்த 14-ஆம் தேதி குழந்தையை விற்றது தெரியவந்தது. இதனால் குழந்தையை சட்ட விரோதமாக விற்ற தந்தை சந்தோஷ் மற்றும் தாய் சிவகாமி உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 —    மு. குபேரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.