சமத்துவ பொங்கல் விழா நடத்த முட்டுக்கட்டை போடும் திமுக பிரமுகர் ?
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மணக்கால், இடையாற்றுமங்கலம் மேலவாழை கிராமத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில் ஜாதி மத பேதமின்றி அரசியல் கட்சி சார்பின்றி ஆண்டுதோறும் சமத்துவ பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம்.
வழக்கம் போலவே, இந்த ஆண்டிற்கான சமத்துவ பொங்கல் விழாவை ஜனவரி 10 ம் அன்று கொண்டாட அனைத்து ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள், கிராமமக்கள் செய்திருந்தனர்.

இந்நிலையில், மேலவாழை கிராமத்தை சேர்ந்த திமுக பிரமுகர் மரிய பிரான்சிஸ் தலைமையில் சிலர் சமத்துவ பொங்கல் நடத்த கிராமமக்கள் விரும்பவில்லை என்று பொய்யான தகவலை லால்குடி காவல் நிலையத்தில் புகாராக கொடுத்துள்ளார். போலீசாரின் தலையீட்டையடுத்து, மேலவாழை கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட முடியாமல் போனதால் கிராமமக்கள் ஏமாற்றமடைந்தனர்.
இந்த பின்னணியில், சமத்துவ பொங்கல் விழாவை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில், மரிய பிரான்ஸ்சிஸ் உள்நோக்கத்துடன் பொய்யான தகவலை போலீசாரிடம் தெரிவித்திருக்கிறார் என்று குற்றஞ்சாட்டியும்; மேலவாழை கிராமத்தில் ஜனவரி 11 ம் தேதி சமத்துவ பொங்கல் விழாவை நடத்துவதற்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரியும் சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இலால்குடி போலீசு நிலையத்தில் கோரிக்கை மனுவை வழங்கியுள்ளனர்.
இந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
— அங்குசம் செய்திப்பிரிவு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.