ரம்ஜான் அன்று ‘சர்தார்-2’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பிரின்ஸ் பிக்சர்ஸ் &  ஐ.வி. என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ‘சர்தார்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து,  கார்த்தி நடிப்பில், பி.எஸ். மித்ரன்  இயக்கத்தில், இப்போது ‘சர்தார் 2’ உருவாகியுள்ளது. முதல் பாகத்தை விட பரபரப்பான த்ரில்லராக, பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஃபர்ஸ்ட் லுக் டீசர்  ரம்ஜான் அன்று ( மார்ச் 31) பகல் 12.30-க்கு சென்னை ஃபோரம் மாலில் உள்ள பிவிஆர் தியேட்டரில் கோலாகலமாக வெளியிடப்பட்டது.

அப்போது பேசியவர்கள்….

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

ஹீரோ கார்த்தி

“சர்தார் என பெயர் வைத்ததிலிருந்தே அந்தப்படத்தின் மீது எனக்கு நிறைய பிரியம் இருந்தது. நம் கிராமத்தில் இருந்து ஒருவனை தேர்ந்தெடுத்து அவனுக்கு டிரெய்னிங் தந்து,  உளவாளியாக அனுப்பி வைத்தார்கள். இது உண்மையில் நடந்தது.  அதை அருமையான கதையாக்கி படமெடுத்தார் மித்ரன். இப்போது அந்த பாத்திரம் திரும்ப வருவது மகிழ்ச்சி. எல்லோரும் முதன் முறையாக ஒரு உளவாளி தனக்காக இல்லாமல், நாட்டுக்காக போராடுகிறான்  என இந்தப்படத்தைக் குறிப்பிட்டுச் சொன்னார்கள் அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

ஹீரோ கார்த்திஇந்தப்படத்தில் இன்னும் பெரிய போரை நடத்தவுள்ளார் சர்தார். அதிலும் எஸ் ஜே சூர்யா சாருடன் நடிப்பது மகிழ்ச்சி. மித்ரன் மிகப்பிரம்மாண்டமாக இந்தக்கதையை உருவாக்கியுள்ளார். செட்டில் போய்ப் பார்க்கும் போது அவ்வளவு பிரமிப்பாக இருக்கும். நிறைய செலவு செய்து தயாரிப்பாளர் லக்‌ஷ்மண் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். எஸ் ஜே சூர்யா சார் இதிலும் அசத்தியுள்ளார். சாம் சி எஸ் கைதிக்கு பிறகு அட்டகாசமான இசையைத் தந்துள்ளார். படம் உங்களை கண்டிப்பாக திருப்திப்படுத்தும். இந்த ஃபர்ஸ்ட் லுக்கை உங்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறோம்”.

இயக்குநர் பி.எஸ்.மித்ரன்

“முதன் முதலில் சர்தார் எடுக்கும்போது சர்தார் எப்படி இருக்க வேண்டும் என்பது என் மனதில் இருந்தது. கார்த்திக்கு மேக்கப் போட்டு முதல் சீன் எடுக்கும்போதே இந்த கேரக்டர் மூலம் நிறைய கதை சொல்ல முடியும் என்று தோன்றியது. அப்போதே இந்தப் பயணம் துவங்கிவிட்டது. இந்தப்படம் சர்தார் ப்ரீக்குவல் மற்றும் சீக்குவல் என இரண்டாகவும் இருக்கும். சர்தாரின் ப்ளாஷ்பேக்கில் இந்தக் கதை நடக்கும். இது மிகப்பெரிய கேன்வாஸில் உருவாகும் படம். அதற்கு லக்‌ஷ்மண் சாருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.. இந்த ஃபர்ஸ்ட் லுக் ரிலீசுக்கு காரணமே சர்தார் யாரை எதிர்க்கப் போகிறார் என்பதை அறிமுகப்படுத்ததத் தான். எஸ் .ஜே சூர்யா சார் கதை கேட்டு முடிக்கும் முன்பே ஒத்துக்கொண்டு இதில் அசத்தியுள்ளார். படம் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்”.

தயாரிப்பாளர் லக்‌ஷ்மண் குமார்

” சர்தார்  முடித்தபோது அதன் இரண்டாம் பாகம் ஆரம்பிக்கலாம் என ஹீரோவும் இயக்குநரும் முடிவு செய்தார்கள்.இது பெரிய கேன்வாஸில் இருக்கும் ஓகேவா என கேட்டார் மித்ரன்.. சர்தார் படம் கார்த்தி கேரியரில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர். அதற்காக அவர் கடுமையாக உழைத்திருந்தார். அதனால் இது பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என உடனே ஓகே சொன்னேன்.

தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார்
தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார்

சர்தார் மேக்கப் போடவே அவ்வளவு நேரம் கஷ்டப்பட்டார். இதில் கார்த்தி இன்னும் கடுமையாக உழைத்துள்ளார். உங்களுக்கு இந்த ஃபர்ஸ்ட் லுக் டீசரை வழங்குவதில் பெருமை கொள்கிறோம். படமும் உங்களுக்கு பிடிக்குமென நம்புகிறோம்”.

நடிகர் எஸ் ஜே சூர்யா

“இந்தப்படம் ஒரு ரிமார்க்கபிள் படம். இதில்  என் கேரக்டர் மிக வித்தியாசமாக இருந்தது. நம்ம நேட்டிவிட்டியுடன் இன்டர்நேஷனல் தரத்தில் நம் மக்களுக்கு புரிகிற மாதிரி, மிக அழகாக இந்தக்கதையை உருவாக்கியுள்ளார். இறைவன் நல்ல நல்ல டைரக்டராக எனக்குத் தருகிறான். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிபெறும் எனும் நம்பிக்கை இருக்கிறது.  கார்த்தி சார், அவர் என்ன சொன்னாலும் நடத்திக் காட்டும் தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார், தரமாக உழைக்கும் இயக்குநர் மூவரும் மிகச்சிறந்த மனிதர்கள்.   இந்த ‘சர்தார் -2’பெரிய வெற்றியைத் தருவார்”.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

இசையமைப்பாளர் சாம் சிஎஸ்

“இது மிகப்பெரிய மேடை.  மித்ரன்  எப்போதும் ஹாலிவுட் தரத்தில், நம் கதையை சொல்லும் இயக்குநர். அவருடன் படம் செய்ய வேண்டும் என்பது என் ஆசை. தூக்கத்தில் எழுப்பினாலும் ஸ்பை த்ரில்லருக்கு இசையமைப்பேன். எனக்கு பிடித்த ஜானர் இது .கார்த்தி சாருடன் கைதி படத்திற்கு பிறகு வேலை பார்க்கிறேன். மிகத் தனித்துவமான திறமைசாலி.  இந்தப்படத்தில் வேலை பார்த்தது மகிழ்ச்சி. பிரின்ஸ் பிக்சர்ஸ் என் குடும்பம் மாதிரி. இவர்களுடன் பல ஜானர்களில் வேலை பார்த்துள்ளேன்.  இன்னும் பல படங்கள் பணியாற்ற வேண்டும்”.

ஆர்ட்டிஸ்ட்ஸ்

கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன், யோகி பாபு.

டெக்னீஷியன்கள்

இசை – சாம் சிஎஸ்

ஒளிப்பதிவு – ஜார்ஜ் சி வில்லியம்ஸ்.

சண்டைப் பயிற்சி – திலீப் சுப்பராயன், சேத்தன் டிசோசா

கலை இயக்குனர் – ராஜீவன் நம்பியார்

படத்தொகுப்பு – விஜய் வேலு குட்டி

தயாரிப்பு நிர்வாகம் – பால் பாண்டி

இணை தயாரிப்பு – ஏ. வெங்கடேஷ்

தயாரிப்பு – பிரின்ஸ் பிக்சர்ஸ் &  ஐ.வி. என்டர்டெயின்மென்ட் எஸ்.லக்‌ஷ்மண் குமார், இஷான் சக்சேனா.

மக்கள் தொடர்பு – சதீஷ்குமார் (S2 மீடியா)

 

—   மதுரை மாறன்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.