‘சட்டமும் நீதியும்’ வெப் சீரிஸ்! சக்சஸ் மீட்!
’18 கிரியேட்டர்ஸ்’ பேனரில் சசிகலா பிரபாகரன் தயாரித்து ஜி-5 ஓடிடி யில் ஜூலை.18—ஆம் தேதி ஸ்ட்ரீமிங்கானது ‘சட்டமும் நீதியும்’ வெப் சீரிஸ். பாலாஜி செல்வராஜ் டைரக்ட் பண்ணிய இந்த சீரிஸில் ‘பருத்திவீரன்’ சரவணன், நம்ரிதா, அருள் டி.சங்கர், குப்புசாமி உட்பட பலர் நடித்திருந்தனர். ஸ்ட்ரீமிங்கான ஆறு நாட்களிலேயே 51 மில்லியன் பார்வைகளைக் கடந்து சக்சஸ் சாதனை படைத்துள்ள இந்த ‘சட்டமும் நீதியும்’ தெலுங்கிலும் டப் செய்யப்பட்டுள்ளது. இந்தி டப்பிங்கான வேலைகளும் நடக்கிறது.
இதனால் மிகவும் மகிழ்ச்சியான தயாரிப்பாளர் பிரபாகரன், முதன்முதலாக ஒரு வெப் சீரீஸின் சக்சஸ் மீட்டை நடத்திய சாதனையும் படைத்துள்ளார். இந்த சக்சஸ் மீட், வெரி ஹேப்பி மீட்டாக கடந்த சனிக்கிழமை [ ஜூலை.26] மதியம் சென்னையில் நடந்தது.
இதில் பேசிய சசிகலா பிரபாகரன்,
“எனது கணவர் தான் இப்படத்தின் தயாரிப்பாளர். ஆனால் எனது பேரைப் போட்டு பெருமைப்படுத்தியுள்ளார். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் வத்தலகுண்டுவிலிருந்து வந்து பல கஷ்டங்களைச் சந்தித்து இப்போது இதன் சக்சஸ் மீட் வரை வந்துள்ளோம். படத்தின் டைரக்டர் பாலாஜி செல்வராஜ், நாயகன் சரவணன் மர்றும் நடிகர்-நடிகைகள், டெக்னீஷியன்களின் ஒத்துழைப்பும் கடின உழைப்பும் இருந்ததால் வெறும் 14 நாட்களிலேயே இதன் ஷூட்டிங்கை முடித்தோம். அதன் பின் நடந்ததெல்லாம் ஜி-5 யாலும் மீடியா நண்பர்களாகிய உங்களாலும் தான்” என்றார்.

மனைவி சொல்லுக்கு மறு சொல் ஏது? சசிகலாவின் கணவர் பிரபாகரனும் கிட்டத்தட்ட அதே மாதிரி தான் பேசினார்.
நாயகி நம்ரிதா, காஸ்ட்யூம் டிசைனர் மரியா, ஆர்ட் டைரக்டர் பாவனா, எடிட்டர் ராவணன், மியூசிக் டைரக்டர் விபின் பாஸ்கர், கேமராமேன் கோகுல கிருஷ்ணன், நடிகர்கள் அருள் டி.சங்கர், குப்புசாமி ஆகிய அனைவருமே மகிழ்ச்சியால் திக்குமுக்காடினார்கள்.
டைரக்டர் பாலாஜி செல்வராஜ்,
“நடிகர் சூரி அண்ணன் தான் இந்தக் கதையை எடுத்துத் தந்து, தயாரிப்பாளர் பிரபாகரன் சாரிடமும் சசிகலா மேடத்திடமும் வாய்ப்பு வாங்கித்தந்தார். இந்த சீரிசை மாபெரும் சக்சஸாக்கிய மீடியா நண்பர்களுக்கு நன்றி”.

நாயகன் சரவணன்,
“1990-களில் நான் ஹீரோவாக எண்ட்ரியான போது என்னை ஆதரித்த பத்திரிகை சகோதரர்கள் இப்போது வரை அதே அன்புடன் தொடர்வது மகிழ்ச்சியாக உள்ளது. சகோதரி சசிகலாவும் அவரது கணவர் பிரபாகரனும் இந்த சீரிஸுக்காக ரொம்பவே உழைத்தார்கள். அவர்களின் உழைப்புக்கு இன்று நல்ல பலன் கிடைத்துள்ளது. இதில் பணியாற்றிய அனைத்து சகோதர-சகோதரிகளுக்கு நன்றியும் பாராட்டுகளும்”.
— மதுரை மாறன்