அச்சம் தான் குற்றங்களை தடுக்கும் கவசம் – சவுக்கு சங்கர் விவகாரம்..
மதிப்பிற்குரிய முதல்வர் நினைக்கிறார் பெண்களுக்கு நாம் நிறைய செய்திருக்கிறோம். இஸ்லாமிய வாக்குகள் அப்படியே 16 சதவீதம் நமக்கு வந்து விடும் ஆகவே சட்ட ஒழுங்கு பிரச்சனை தன்னுடைய ஆட்சியை பாதிக்காது என்று மிகையான எண்ணத்தில் இருக்கிறார் என்று நினைக்கிறேன்.
எனக்குத் தெரிய தொடர்ந்துமே இப்போது குறிப்பாக இந்த ஆண்டு நடந்தது போல் தொடர்ந்து சட்ட ஒழுங்கு பிரச்சனை படுகொலைகளும் வன்முறைகளும் எப்போதும் நடந்தது இல்லை.
இதையெல்லாம் முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்லப்படுகின்றனவா என்பது ஒரு கேள்வியாக இருக்கிறது.
சவுக்கு சங்கர் அவர்களைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அவர் வன்மத்தோடு திமுக அரசை கடித்து குதர்கிறார் என்பது நன்றாகவே தெரிகிறது.

வழக்குகள் மேல் வழக்குகள் வந்த பிறகு சுதி குறைந்துவிடும் என்று நினைத்தால் மறுபடியும் ஒரு கண்மூடித்தனமான விமர்சனம் வைத்து அருந்ததிகள் மனதை நோக வைத்து விட்டார். அதனுடைய விளைவு தான் அவருடைய வீடு தாக்கப்பட்டது. கழிவுகள் ஊற்றப்பட்டது. அவர் பேசிய பேட்டியை கேட்டேன். மிக மிக மோசமான விமர்சனம் .
அந்த மக்கள் அந்த குடி இல்லாவிட்டால் மலம் அள்ளும் பணியை அவர்களால் செய்ய முடியாது. அவர்கள் வரட்டு கௌரவத்திற்காகவோ குடி பழக்கத்தினாலோ மது அருந்துவது இல்லை.
மலம் குப்பை ஆகியவற்றை அள்ளும் பணி செய்யும் போது அதை மறப்பதற்காக குடிக்க வேண்டியது நியாயமான ஒன்றாக உணர முடிகிறது.
அதை விமர்சனம் செய்வது கண்டனத்துக்கு உரியது .
அதே சமயம் சவுக்கு சங்கர் வீடு தாக்கப்பட்டது கண்டனத்துக்குரியது. இது சட்டத்தை மக்கள் எடுத்துக்கொண்ட ஒரு செயல். இது எந்த விதத்திலும் இந்த அரசுக்கு நல்ல பெயர் வாங்கித் தராது.
சவுக்கு சங்கர் தன்னுடைய யூடியூப் சேனலை மூட முடிவு எடுத்ததாக நேற்று அறிவிப்பு பார்த்தேன்..
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஒரு விதத்தில் நல்ல விஷயம் என்றாலும் இன்னொரு விதத்தில் கருத்து சுதந்திரத்தின் மீது தொடுக்கப்பட்ட மோசமான தாக்குதல் இது.
சட்ட ஒழுங்கு பற்றி சம்பந்தமில்லாத அமைச்சர்கள் கூட பேசிக் கொள்கிறார்கள். ஆனால் முதல்வர் இது பற்றி அதிகம் அக்கறை செலுத்தவில்லை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நடந்து முடிந்த பிறகு கைது செய்யப்பட்ட பிறகு விளக்கம் தருகிறார்கள் தவிர ஒரு நிகழ்வு நடப்பதற்கு முன்பு ஒரு அச்சத்தை முதல்வர் அவர்கள் விதைப்பதற்கு தவறிவிட்டார். அச்சம் என்பது தான் குற்றங்களை தடுக்கும் கவசம்.
— ஜெயதேவன் எழுத்தாளர்.