தெலங்கானா ஆளுநர்ராகதமிழிசை சவுந்தர ராஜன் நியமனம்!!
தெலங்கானா கவர்னராக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜனை நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த திடீர் அறிவிப்பு தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மொத்தம் 5 மாநிலங்களுக்கு கவர்னர்களை நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி தெலங்கானா மாநில கவர்னராக தமிழிசை சவுந்தர ராஜனும், மகாராஷ்டிர மாநில கவர்னராக பகத் சிங் கோஷ்யாரி, இமாச்சல பிரதேச கவர்னராக பண்டாரு தத்தாத்ரேயா, கேரள கவர்னராக ஆரிப் முகமது கான்ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குமரி அனந்தனின் மகள் தமிழிசை சவுந்தரராஜன் ஆவார். பாஜகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், கடந்த 2014 முதல் தமிழக பாஜக தலைவராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில், அவரை கவர்னராக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெலங்கானா கவர்னராக நியமித்திருக்கிறார்.
தெலங்கானா கவர்னர் பொறுப்பு குறித்து பேட்டியளித்த தமிழிசை, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், கடினமான உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்றும் கூறியுள்ளார்.