உதயநிதியின் ஏழு மண்டலங்கள்! மாவட்ட செயலாளர்களுக்கு அடுத்த அடி!!

0

பண பலத்தாலும், அரசியல் செல்வாக்காலும் சினிமாவில் அறிமுகமாகி, நடிகைகளின் பின்னால் சுற்றித் திரிந்தார் உதயநிதி. அவரை முரசொலி அறக்கட்டளைக்கு நிர்வாக இயக்குனர் என்ற அதிமுக்கிய பதவியில் நுழைத்து, முரசொலி அறக்கட்டளையை ஸ்டாலின் தனது குடும்ப சொத்தாக்கினார்.

அதன்பிறகு உதயநிதியை, திமுகவின் இளைஞரணி செயலாளர் ஆக்கினார் ஸ்டாலின். இது திமுகவின் குடும்ப அரசியலின் உச்சம் என்று அனைவரும் விமர்சித்தாலும் அதுபற்றி கொஞ்சம் கூட கவலைப்படவில்லை அவர்.

திமுக இளைஞரணி செயலாளராக பதவி ஏற்ற உதயநிதி, தமிழகத்ததை 7 மண்டலங்களாக பிரித்து, அதற்கான திட்டங்களையும் அறிவித்துள்ளார்.

பாசறை கூட்டங்கள், பயிலரங்கங்கள் என பல்வேறு செயல்திட்டங்களை வகுத்து கொடுத்திருக்கிறார் உதயநிதி.

இதுபற்றி நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அவற்றில சில:-

அந்த ஏழு மண்டலத்துக்கும், அந்த காலத்தில் நம் தலைவர் இளைஞரணியை பலப்படுத்தும் போது அம்பாசிட்டர் காரில் பத்து உள்ளூர் பிரமுகர்களுடன் நெருக்கடியில் அமர்ந்து கொண்டு வந்தது போலவா மூன்றாம் கலைஞர் வருவார்? 30 கார்கள், ஊருக்கு 20 ரூம்கள், பத்திரிகை விளம்பரம், சாப்பாடு என மாவட்ட செயலாளர் செலவு செய்ய வேண்டுமே?

எட்டு ஆண்டுகளாக ஆட்சியில் அதிகாரத்தில் இல்லாமல் கைக்காசு இல்லாமல் மாவட்டம், நகரத்திடமும், ஒன்றியத்திடமும், கடைசியில் கடை மட்ட தொண்டன் வரை கேட்க வேண்டும். இப்போது செலவு செய்து விட்டால் தேர்தல் நேரத்தில் எங்கே போவார்கள் காசுக்கு?

மூன்றாம் கலைஞர் ஒரு மண்டல விசிட்டுக்கு குறைந்தது 50 லட்சம் ஆகுமே? மாநில இளைஞர் அணி அந்த செலவை ஏற்றுக்கொள்ளுமா? அல்லது ரெட் ஜெயண்ட் ஸ்பான்சரா? அல்லது அன்பகத்தில் இருந்து கொண்டு தொலைபேசியில்  அழைப்பவர் செய்வாரா?

இவ்வாறு கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.