திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் சமூக எம்.பி.கள்

தமிழ்நாட்டில் இதுவரை திமுக சார்பில்  தேர்ந்தெடுக்கப்பட்ட 55 ராஜ்ய சபா உறுப்பினர்களில் பட்டியல் சமூகத்தில் இருந்து இதுவரை

*பறையர்-1

*அருந்ததியர்-2

*தேவேந்திர குல வேளாளர் -2

*மொத்தம் 5 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் .

அவர்களின் விவரம் பின்வருமாறு

பறையர் சமூகத்தில் இதுவரை திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த ஒரே நபர்

1) KS. ராஜி

(1989-1995 ராஜ்யசபா உறுப்பினர் ) பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த இவர் அண்ணா காலத்தில் பெரம்பலூர்( தனி ) தொகுதியில்

1967,1971,1980  மூன்று முறை எம்.எல்.ஏவாக இருந்தவர்.

2) தேவேந்திர குல வேளாளர் சமூகத்தில் இதுவரை திமுக சார்பில் இரண்டு பேர் ராஜ்யசபா உறுப்பினராக இருந்து வந்துள்ளனர்.

1) S. விடுதலை விரும்பி

(1989-1989, 1989-1995, 1998-2004) 3 முறை ராஜ்யசபா உறுப்பினராகஇருந்து வந்துள்ளார்.

கோவையை பூர்விமாகக் கொண்ட இவர் பின்னர் சங்கரன்கோயில் தற்போது வசித்து வருகிறார்.

தற்பொழுது திமுகவின் வெளியீட்டு செயலாளராக இருந்து வருகிறார்.

2 )S. தங்கவேலு

சங்கரன்கோயில் (2010-2016 காலகட்டங்களில் திமுக சார்பில் ராஜ்யசபா எம்பி யாக இருந்து வந்துள்ளார் )

இவரது மகன் ராஜராஜன் தென்காசி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து வருகிறார்.

இவர் சங்கரன் கோவில்(தனி) சட்டமன்ற தொகுதியில் 5 முறை போட்டியிட்டு 1 முறை மட்டுமே வெற்றியை பெற்றிருந்தார்.

1984- சட்டமன்றத் தேர்தலில் தோல்வி

1989- சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு அமைச்சராக பொறுப்பேற்றார்.

1991- சட்டமன்ற தேர்தலில் தோல்வி.

1996- மதிமுக சார்பில் சட்டமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி.

2006- சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி.

அருந்ததியர் சமூகத்தில் இருந்து இதுவரை திமுக சார்பில் 2 பேர் ராஜ்யசபா உறுப்பினராக இருந்து வந்துள்ளனர் .

1)விபி துரைசாமி

இவர் ஆரம்பத்தில் அதிமுகவில் இருந்தவர் பின்பு திமுகவில் இணைந்து 1996-2001 காலகட்டங்களில் திமுகவில் ராஜ்ய சபா உறுப்பினராக இருந்து வந்துள்ளார்.

 மாநில சட்டமன்றத்தில்

1989- நாமக்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற துணை சபாநாயகராக பொறுப்பேற்றார்.

2006- சங்ககிரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்றத்தில் துணை சபாநாயகராக பொறுப்பேற்றார்.

2016- சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

மக்களவையில்

1984- இராசிபுரம்( தனி) மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

மேலும் 2012 முதல் 2020 வரை திமுகவின் மாநில துணைப் பொதுச் செயலாளராக இருந்து வந்துள்ளார்.

மே மாதம்,2020-இல் திமுகவிலிருந்து விலகி பாஜகவிற்க்கு  சென்ற விபி துரைசாமி தற்போது பாஜகவில் மாநில துணைத்தலைவராக இருந்து வருகிறார்.

2 ) அந்தியூர் ப செல்வராஜ்

(2020-2026) காலகட்டங்களில் மாநிலங்களவை உறுப்பினராக செயல்பட்டு வந்தார்

1996- அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராக பொறுப்பேற்றார்.

2001- மீண்டும் அதே சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

2020-ஆம் ஆண்டு திமுகவின் மாநில துணை பொது செயலாளராக நியமிக்கப்பட்டார்…

Comments are closed, but trackbacks and pingbacks are open.