கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி வரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்!
மதுரையில் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி வரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிகமாகி வருகின்ற காரணத்தினால் காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின் பேரில் மதுரை மாநகர் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் சேது மணி மாதவன் தலைமையில் காவலர்கள் வலம் வர பெரியார் பேருந்து நிலையம் அருகே தனியார் கல்லூரி மாணவர்கள் கஞ்சா புகை அருந்தி கொண்டிருந்ததை கண்டறிந்து அவர்களை பிடித்து விசாரித்ததில் தாங்கள் கல்லூரி மாணவர்கள் என்றும் மதுரை காமராஜபுரம் வாலத் தோப்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக நாம் காவல் ஆய்வாளர் சேதுபதி மாதவனிடம் கேட்டபோது…காவல்துறை சார்பாகபள்ளி கல்லூரி பொது இடங்களில் மாணவ, மாணவியருக்கு பொதுமக்களுக்கும் நாங்கள் நேரடியாக சென்று அவர்கள் பயிலும் பள்ளி கல்லூரியில் விழிப்புணர்வு, பேரணி, மாரத்தான்,சொற்பொழிவு ஆகியவை நடத்திக் கொண்டு இருக்கின்றோம்.
மாணவர்கள் தீய பழக்கங்களுக்கு அடிமையாகுவதற்கு காரணம் பெற்றோர்கள் தான் அவர்கள் படிக்கும் பொழுதே திசை மாறி செல்கிறார்கள் தீய பழக்கங்களுக்கு அடிமையாகிறார்கள் என்று பெற்றோர்கள் தெரிந்ததும் கண்டும் காணாமல் விட்டு விடுகிறார்கள்.
ஆடம்பர வாழ்கைக்காக விலை உயர்ந்த இரு சக்கர வாகனம், அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகள், சிகை அலங்காரம், புதிதாக பழகும் தீய பழக்கங்கள் ஆகியவற்றை பார்த்து ஆரம்பத்தில் அவனது ஒழுக்கத்திற்கு மாறாக இருப்பதை பார்த்து கண்டிக்க வேண்டும் தனது பிள்ளைகள் கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாக மாட்டார்கள் கண்டிப்பு மட்டும் இருந்தால் தான் மாணவர்கள் திருந்துவார்கள்
.. ஷாகுல்.
படங்கள் : ஆனந்தன்